Tuesday, March 08, 2005

பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

சக பெண் பதிவாளர்களுக்கும் வாசகிகளுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள் :-)

காலத்தின் போக்கில் மனிதர்கள் மாறும் விதம் எப்போதுமே சுவாரசியமானதுதான். நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்துள்ளோம் என்று சற்று திரும்பி நம் சென்ற தலைமுறைகளைப் பார்த்தால் புரியும்.

என் தாத்தா பாட்டியை பெயர் சொல்லி அழைத்தது இல்லை என்று சொல்லுவார்கள். இன்னும் எனக்குத் தெரிந்த பழைய தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பெயர் சொல்லி அழைத்தது இல்லை. மனைவியை அழைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் - "ஏய்", "இந்தா", "இங்கே வா", "அடியே", "டீ....." மனுஷி, "அவ", "ம்".... இன்னும் சில. அந்த கடைசியில் சொன்ன "ம்" க்கு கூட எத்தனை சக்தி தெரியுமோ? ஒரு கனைப்பு, ஒரு உறுமல், என்று மனைவியை அழைக்கும் "வார்த்தைகள்" பல உண்டு. சின்ன தாத்தா ஒருவர் தன் மனைவியை "இந்தா" என்று அழைக்கும் தொனியிலேயெ அவர் எதற்காக கூப்பிடுகிறார் என்று பாட்டிக்கு புரிந்து போய்விடுமாம். கடுப்பாக, சாந்தமாக, கோபமாக, எரிச்சலாக, அன்பாக ( எப்போவாவது) என்று அந்த "இந்தா" வில் ஆயிரம் உணர்வு வெளிப்பாடு இருக்குமாம். எப்போதும் மனைவியிடம் ஒரு கடு கடு முகத்துடன்தான் பேசுவாராம். ஏன்? ஆங்....அதெப்படி? கணவன் மனவி தங்கள் அன்பை வெளிப்படையாக காண்பித்துக் கொள்வது மகா குற்றமாயிற்றே? முகத்தில் கொஞ்சூண்டு சிரிப்புடன் பேசினாலே பெண்டாட்டிதாசன் என்று சொல்லிவிடுவார்களே....? அப்புறம் ஆண் என்கிற இமேஜ் என்ன ஆவது? தவிர இப்படி உருட்டி, மடக்கி கொஞ்சம் முறுக்காக இருந்தால்தான் "அவர்கள்" ஒரு "நிலையில்" இருப்பார்கள். "கொஞ்சம் இடம் கொடுத்தால் போச்சு. இவர்களுக்கு அதிகாரம் தலைக்கு ஏறிடும்." இது பரவலாக அந்த தலைமுறை ஆண்கள் தங்கள் மனைவியரைப் பற்றி சொல்லும் கமெண்ட். விதி விலக்குகள் உண்டு.. எங்கள் குடும்பத்திலேயே கூட. ஆனால் விதிவிலக்கு என்றுதான் சொல்கிறேன். பரவலாக மனைவி என்பவள் தன் உடமை, தனக்கு அடிபணிந்தவள், அடிபணிய கடமைப் பட்டவள் என்ற மனப்பான்மை ஓங்கியிருந்த காலம் அது. வேறொரு தாத்தா பாட்டி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கருப்பு/ வெள்ளை புகைப்படம் ஒன்றை அந்த தாத்தாவின் சந்ததியினரின் வீட்டில் பார்த்தபோது தோன்றிற்று. போட்டோவில் பாட்டியின் முகத்திலும் தாத்தாவின் முகத்திலும் " Cheese" சொல்லும் அளவு புன்னகை ! எப்போதும் மனைவியிடம் கடுகடுக்கும் அவருக்கு எப்படி அன்று முகத்தில் புன்னகை வந்தது என்று எனக்கு ஒரு எக்குத் தப்பாய் ஒரு கேள்வி தோன்றும். சரிதான், அதுவும் போட்டோ என்கிற "சாஸ்திர" கட்டுபாட்டிற்கு உடன் பட்டிருப்பார் என்று நானே பதிலும் சொல்லிக் கொள்வேன்.

இன்னொரு நண்பர் வீட்டில் பெரியப்பா ஒருவர். வீட்டில் எல்லோரும் அரட்டை, ஆட்டம் என்று கொட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த பெரியப்பாவின் வண்டி சத்தம் வாசலில் கேட்டதுமே அவரவர் சிட்டாய் மூலைகளுக்கு பறந்துபோய் ரொம்ப மும்முரமாய் "வேலை" பார்ப்பார்கள். இவருக்கு மெள்ளவே பேசத்தெரியாது. எப்பவும் மிரட்டலும் அதிகாரமும்தாம். ஆனால் இவ்ருடைய மனைவி நேர் எதிர். நகைச்சுவையொழுக பேசுவார். சிரிக்க சிரிக்க வீட்டு சமாசாரங்கள் பேசுவார் என்று சொல்வார்கள். நன்றாக பாடவும் பாடுவார். ஆனால் தனக்குள்ளேயேதான். தாத்தா காதில் விழாமல். ஊக்கம் கொடுத்திருந்தால் பெரிய பாடகியாகவே வந்திருப்பார். இன்னொரு பழைய தலைமுறை உறவினர், மருமகளுடன் கூட நேருக்கு நேர் பேச மாட்டார். மருமகள் என்பவள் வீட்டில் ஏவலுக்கு இன்னொரு ஆள். இதை இங்கே வை; அதை கொண்டுவா... தோட்டக்காரன் வந்தானா? என்று கேள்விகள், கட்டளைகள் பொதுவாக இருக்கும். யாரைச் சொல்கிறார் என்று மருமகள் புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் தவிர, பெண்களின் பிரத்தியேக இயற்கை உபாதை நாட்களில் இந்த மாதிரி பழைய தலைமுறை சம்பிரதாயம் இருக்கும் வீடுகளில் பெண்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது. மாட்டுத் தொழுவம்தான் இருப்பிடம். ஊர்வன, நெளிவன எப்போ வந்து தாக்குமோ என்று பயந்த வண்ணம் பகல் பொழுது கழியும். சில வீடுகளில் பெரிய மனது பண்ணி இரவு வேளைகளில் மட்டும் பின் பக்க தாழ்வாரத்தில் இடம் கிடைக்கும். வீட்டு ஆண்கள் இந்த சமயத்தில் தீட்டு பெண்களைப் பார்க்ககூட மாட்டார்கள். மாமியார் அல்லது வீட்டில் மற்ற பெண்கள் நாலடி தூரத்தில் வைக்கும் சாப்பாடு பெரும்பாலும் பரிதாப நிலையில் இருக்கும். முறுக்கு போன்ற திண்பண்டங்கள் கிரிகெட் பால் கணக்கில் விட்டெறியப்படும்போது சாமர்த்தியம் இருந்தால் கேட்ச் பிடித்துக் கொள்ளலாம்.

சரி, மேடையில் திரை மாறுகிறது. வருடம் 2000 சொச்சம். மேலே சொன்ன உறவினர்களின் அடுத்த தலைமுறை குடும்பங்களைப் பார்க்கிறேன். அவர்களுடைய மகன்கள், மகள்கள் என்று குடும்பம் விரிந்துள்ளது. ஆனால் பார்வையில்தாம் எவ்வளவு வித்தியாசம்? அறுபது வயதாகும் குடும்பத் தலைவர் தன் மனைவியுடனும், மருமகளுடனும் தோழமையுடன் பேசுகிறார். சினிமா, அரசியல் என்று வீட்டுப் பெண்களும் ஆண்களும் ஒன்று சேரும்போது கலகலவென்று சபை கூடுகிறது. மன வித்தியாசங்கள் இல்லாமல் இல்லை. அவையும் நேருக்கு நேர் பேசப்பட்டு சரிபடுத்தப் படுகிறது.

வெளியில் ரயில் பயணம் செய்யும்போது அடிக்கடி கன்ணில் படும் ஒரு காட்சி. மனைவிக்கு அனுசரனையாக கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் இளம் கணவர்கள். இரவு குழந்தை அழும்போது தன்னிச்சையாக நீ படுத்துக்கோ, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் கணவர்கள். முகம் சுளிக்காமல் குழந்தை ஈரம் செய்தால் துணி மாற்றி பால் கரைத்து.... வெளியில் ஓடிப்போய் பழம் பிஸ்கெட் வாங்கி... மனைவிக்கு பிடிக்கும் என்று தேடிப் போய் பெண்கள் பத்திரிகை வாங்கி.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்... சில சமயம் மனசு நெகிழ்ந்துதான் போகிறது.

ஆண்கள்தாம் எவ்வளவு மாறிவிட்டனர் ?? !!

மகளிர் தினத்தில் மாறி வரும் ஆண்களுக்கு ஒரு "ஓ" போட வேண்டாமா? :-)

24 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மகளிர் தினத்தில் மாறி வரும் ஆண்களுக்கு ஒரு "ஓ" போட வேண்டாமா? :-) //

hear! hear!!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...
This comment has been removed by a blog administrator.
ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

மாறிவரும் ஆண்களுக்கு 'ஓ' போடத்தான் வேண்டும்.
'ஆடவர்' தினம் கூடக் கொண்டாடலாம்,..

தூக்கிப்போட்ற பொட்டலத்த பிடிக்காட்டா அது பொடிப்பொடியாயிடாது..?

: )

எனக்கு எங்க அம்மாவோட தாத்தா தான் ஞாபகம் வரார். அவருக்கு நாங்க வெத்தல இடிச்சித்தருவோம், நொறுக்குத்தீனிகளையும் இடுச்சித் தருவோம்,.. பல்லில்லாததால பொடியா வாயில அதக்கிண்டு மெதுவா சாப்டுவார்.

அன்பின் அருணா, இந்த வாரம் பதிவுகள் சுவையாக அமைந்து வருகின்றன. இந்த வாரம் படிக்க நிறைய இருக்கும் போலயிருக்கே,..வாழ்த்துக்களுடன், ஜெ

Anonymous said...

Nice post indeed.... I feel happy that you are different among the women liberation crowd (who sometimes dont see the silver lining in the cloud).

செல்வநாயகி said...

I am regularly reading your blog. I like your writings.

Chandravathanaa said...

நல்லாக எழுதுறீங்கள் அருணா.
இப்போதைய ஆண் பிள்ளைகள் நிறையவே மாறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் எனது மகன் தனது மனைவியோடு நடந்து கொள்ளும் முறையில்
நானே பெருமைப் பட்டுக் கொள்வேன்.

Chandravathanaa said...

உஷா
எமது கணவன்மார்கள்தான் காலத்தின் கட்டாயத்தில் சில மாற்றங்களுக்குள் வந்துள்ளார்கள்.
எமது பிள்ளைகள் தாமாகவே உணர்ந்து செயற் படுகிறார்கள்.
இனி வரும் காலத்தில் நிறையவே மாறலாம்.

Kannan said...

எல்லோருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

Mannai Madevan said...

அன்புச் சோதரியர் அருணா ஸ்ரீனிவாசன் அவர்களே!

உங்கள் இவ்வார நட்சத்திர எழுத்தான “பெண்கள் தின வாழ்த்துக்கள்” எனும் வலைப்பூ நன்றாக மணம் பரப்புகிறது. “ஓர் சார்பு நிலை" நிற்காது, மாறிவரும் சூழலையும் வகை பிரித்து, அத்தகைய மனம் மாறிய ஆண்களுக்கு ஒரு சொட்டும் வைத்திருப்பது மிகச் சிறப்பு.

தங்களுக்கு வாழ்துக்களோடு..சீர்மிகு பெண்கள் அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள்.

வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...

இதுக்கு வாழ்த்துச் சொல்லலாமோ எண்டு யோசிச்சனான். பரவாயில்ல நீங்களே துவங்கினபடியா இப்ப சொல்லிறன் "அனைவருக்கும் அனைத்துலக பெண்கள் தின வாழ்த்து" (ஆண்களுக்கும் சேத்துத்தான். அவயள் பெண்களில ஒரு பகுதிதானே)

வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...

மன்னிக்கோணும். வாழ்த்துச்சொல்லேக்க கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டதால தப்பு நடந்துபோச்சு.
மன்னை மாதவன்! அதென்ன சீர்மிகு பெண்கள்?

Aruna Srinivasan said...

பெண்கள் தினம் நல்லா கொண்டாடப்பட்டு இருக்கு போலிருக்கே - இங்கே பதிவில் :-) மிக்க நன்றி, மதி, ஜெயந்தி, Anonymous, உஷா, செல்வநாயகி, சந்திரவதனா, கண்ணன், மாதேவன், வசந்தன் ( என்ன அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டீர்களா :-) ) மற்றும் என் பழைய பதிவில் விஜயம் செய்திருக்கும் ஹரி, கண்ணன், Voice of wings.

Muthu said...

///மனைவிக்கு பிடிக்கும் என்று தேடிப் போய் பெண்கள் பத்திரிகை வாங்கி.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்... சில சமயம் மனசு நெகிழ்ந்துதான் போகிறது.//

ஏதோ கொஞ்சம் நீங்களாவது அப்பிராணிகளைப் பற்றி நினைக்கிறீர்களே, சந்தோஷம்.

///ஆண்களுக்கு வேறு வழியில்லை. இது காலத்தின் கட்டாயம் :-)///

:-). காலம் மாறிக்கொண்டுதான் வருகிறது. இன்று அருணா எழுதியிருக்கிறாங்களே இதே போல் நாளை ஒருவர் போன தலைமுறை பெண்கள், இந்தத் தலைமுறை பெண்கள் என்று ஆன்கள் தினம் அன்று எழுதும் சாத்தியத்தை மறந்துவிடாதீர்கள்.


///உஷா
எமது கணவன்மார்கள்தான் காலத்தின் கட்டாயத்தில் சில மாற்றங்களுக்குள் வந்துள்ளார்கள்.
எமது பிள்ளைகள் தாமாகவே உணர்ந்து செயற் படுகிறார்கள்.
இனி வரும் காலத்தில் நிறையவே மாறலாம். ///

சந்திரவதனா,
உங்களின் நேர்ப்பார்வைக்கு ஒரு சலாம் :-).

Anonymous said...

I agree that we need to appreciate the changes. I wish you ha dmentioned how little those changes are. In interior of North Indian villages, USA, and so called western states domestic violence and abuse is on the rise. women do not even have the right to say their opinion on theirown child birth.It is decided by men, mother in laws. Women do not have reproductive rights.Women trafficking, the loss or missing one million women and women who suffered sexual abuse are so traumatic. It is easy to talk about rape untill you see one who has been raped.
Even the women who work, literally toil at work an dat home to make things easy. Please do mention how women themselves try to cut others wings and try to develop a guilty feeling on their fellow women.
Changes are good, but not so much in %. May be among educated population with a financial security.
Padma Arvind

Aruna Srinivasan said...

Muthu,

".....இதே போல் நாளை ஒருவர் போன தலைமுறை பெண்கள், இந்தத் தலைமுறை பெண்கள் என்று ஆன்கள் தினம் அன்று எழுதும் சாத்தியத்தை மறந்துவிடாதீர்கள்....."

:-) :-)


Padma,

“…..I agree that we need to appreciate the changes…..”

Precisely Padma… this is what I have tried to underline. While I agree that the issues that you have mentioned are very much prevalent, we have to take note of the positive changes and I felt that they were hardly highlighted in the media. – blogs included. Even today there is an element of ritual in “celebrating” women’s day, particularly in India ( Chennai? ). How far the spirit of equality for women ( I don’t believe in “women’s lib”) have sunk in across the society is still debatable. But you can’t deny that transformations have indeed taken place in patches. What Chandravadana points out is very true. It takes generations to bring about changes. The issues that you have pointed out may also disappear one day in the subsequent generations in those societies. Just as you mention about the North Indian Villages in the USA, there are number of pockets across the world where women have not been liberated – because they were always liberated in the first place!!!. Like the matriarchal societies in Kerala, North Eastern part of India, known as the “the seven sister states”, and the Himalayan Kingdom of Bhutan. In many of the Asian tribes, tucked away in remote villages, women rule and children take the surname of the mother and the youngest daughter inherits property. Ditto is the case among the East African tribes.

In fact I guess, the oppression of women and inequality stemmed from the western parts of the world and perhaps transmitted later into Asian cultures. I have not done in depth research into it yet, but am trying to figure out the facts. Even in ancient Indian culture, women had authority. Queens on the throne, ruling a territory, were not uncommon.

So it depends on the ethnic, historical, and cultural background of a society to fall in line with the global perspective. My concern is that in the process of highlighting and giving voice to the black pockets, we should not ignore the positive signs happening in the patches.

-/பெயரிலி. said...
This comment has been removed by a blog administrator.