Thursday, November 27, 2003

எதையோ சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட ஞானோதயம். புறத்தில் சுத்தம் செய்வதுபோல் மூட்டை மூட்டையாக மனதில் தோன்றும் எண்ணக்குவியலையும் அன்றன்றே குப்பைத்தொட்டியைக் காலி செய்வதுபோல் காலிசெய்துவிட்டு ஒவ்வொரு நாளயும் - ஒவ்வொரு கணத்தையும் புதிதாக வரவேற்கும் மனப்பான்மையை மட்டும் வளர்த்துக்கொள்ள முடியுமானால் வாழ்க்கையில் என்றுமே ஒரு புதிய காற்று வீசுமே...! "எல்லாம் தெரியும்" என்ற மனப்பான்மையைக் கழற்றிவிட்டு, " அட, என்ன அற்புதம்..!" என்று உள்ளுக்குள் ஒரு வியப்பும் பிரமிப்பும் இருந்துகொண்டே இருக்கமுடியுமானால்......?!

பின் குறிப்பு:"புத்திகொள்முதல்" - இது என் அம்மா அடிக்கடி உபயோகித்த வார்த்தை - மேலேயுள்ள நாலு வரிப் பதிவில் நான் தெரிந்துகொண்ட புத்திகொள்முதல் - நாலு வரி எழுதச் சோம்பல்பட்டுக்கொண்டு எப்போதோ பழைய குறியீட்டில் எழுதியதை cut & paste பண்ணக்கூடாது. அப்படியே செய்தாலும் நடு நடுவே Tscii குறியீட்டில் எழுதிய வார்த்தைகளை நுழைக்கக்கூடாது. இரண்டும் கலந்ததை unicode ல் மாற்ற முனையும்போது ' சுக்குமி, ளகுதி, இப்பிலி' என்ற ரீதியில் விழுந்து வைக்கும். இதைவிட, பொறுமையாக முதலிலேயே ஒருபாடாக ஒரே குறியீட்டில் இந்த நாலு வரியை உள்ளிட்டிருக்கலாமா? ஹ�ம்.. அதான் புத்திகொள்முதல் என்று சொல்லிவிட்டேனே!! :-)

Friday, November 07, 2003

பத்திரிகையாளர்கள் மீது தமிழக அரசின் அதிரடிகள் தொடருகின்றன. தமிழக சட்டசபை தீர்மானத்தின்பேரில் ஹிந்து / முரசொலி பத்திரிகையாளர்கள் மீது அரெஸ்ட் வாரண்ட். - சில மாதங்கள் முன்பு வெளி வந்த கட்டுரைக்காக. போகிற போக்கைப் பார்த்தால் அவதூறு வழக்குகள் போடவே தமிழக சட்டசபைக்கு நேரம் போதாது போலிருக்கிறது. ஹிந்துவின் மேல் மட்டுமே 16 வழக்குகள் போடப்ப்ட்டுள்ளனவாம். எந்தப் பத்த்ரிகையுமே தப்பவில்லை. நல்ல வேளை, வலைப்பூக்கள் இன்னும் அரசின் கண்களில் படவில்லை ! ( என்று நினைக்கிறேன்..)

Saturday, November 01, 2003

��ça ���� ...! ( ������� ��Ȣ ~� :-)

மதியின் வலைப்பூவில் கடிகாரம் பற்றிய குறிப்பில் கிங்ஸ்லி, பார்க்கும் இடமெல்லாம் இன்று கடிகாரம் இருப்பதால் கையில் கடிகாரம் அவசியம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். கிங்ஸ்லி சொல்வது உண்மைதான். எனக்குத் தெரிந்த ஒருவரின் கைக்கடிகாரம் நின்று போய்விட்டது. இந்தக் காலத்தில் நேரம் என்பது "சென்னையில் தண்ணீர்" மாதிரி பொக்கிஷமாயிற்றே! இவரால் எப்படி கையில் கடிகாரம் இல்லாமல் தன் வேலைகளை செய்ய முடிகிறது என்று கேட்டேன். அதுவா? கடிகாரம் வாங்க நேரம் இல்லை !!! தவிர கையில் கடிகாரம் இருந்தால்தான் நேரம் தெரியுமா என்ன? அதுதான் திரும்பிய இடமெல்லாம் கடிகாரம் உள்ளதே" என்றார் - கிங்ஸ்லி சொன்ன மாதிரி.

அப்புறம் எனக்கும் தோன்றிற்று. மதி சொன்னது போல், இன்றைய நம் வாழ்க்கையில் எத்தனை கடிகாரங்கள் அல்லது மணி காட்டும் சாதனங்கள்? -எங்கள் வீட்டில் ஒரு கணக்கு பார்க்கலாமா? ஹால் சுவரில் ஒன்று, இரண்டு அறைகளில் இரண்டு, சமையல் அறையில் ஒன்று; நண்பர் கொடுத்த குட்டி கடிகாரம் ஒன்று டிரெஸிங் மேஜை மேல். அலார்ம் பீஸ் நான்கு - இதில் இரண்டுக்கு பேட்டரி போட்டால் அல்லது கொஞ்சம் பழுது பார்த்தால் ஓடும். ஆனால் ' அதற்கு" நேரம்" இல்லை - அல்லது அவசியம் இல்லை!

வீட்டில் இருப்போர் தினசரி உபயோகிக்கும் கைக்கடியாரங்கள் நான்கு.

தவிர, வீடியோவில், காமரா, செல் போன் போன்ற சாதனங்களில் கூட்டிப் பார்த்தால், நான்காவது தேறும்.

கணினியில் வெளியில் தெரியும் திரையில் ஒன்று. உள்ளிருக்கும் மென்பொருட்கள் சிலவற்றிலும் சேர்த்துக்கொண்டால் குறைந்தது இரண்டு சேர்க்கலாம்.

காலை வேளையில் தலையை அல்லது கையைத் திருப்பி நேரம் பார்க்க நேரமில்லாதவர்களுக்காகவே(!!), சில டிவி சேனல்களில் அடியில் ஓடும் குட்டி நேரம் காட்டும் கௌண்டர்.

சுமாராக ஒரு 20 எண்ணிக்கை வந்ததா? ( நேரம் காட்ட இத்தனை சாதனங்கள் நம் கண் முன்னே ஒடிக்கொண்டிருந்தாலும் "நேரமே போதவில்லை" என்று எங்கேயோ ஒடிக்கொண்டிருக்கிறோமே!!)

இவையெல்லாம் 'ஓடும்' கடிகாரங்கள். ஓடவே ஓடாத சுமார் 8 கைக்கடியாரங்கள், 2 அலார்ம் பீஸ், போன்ற கடிகாரங்கள் - ஏதோ பலவித காரணங்களுக்காக இடத்தை அடைத்துக் கொண்டு ஏதோ ஒரு மூலையில்.

சரிதான்; கையில் ஒரு கடிகாரம் இல்லையென்றால் ஒன்றும் குறைந்து போகாதுதான் ! :-)