எதையோ சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட ஞானோதயம். புறத்தில் சுத்தம் செய்வதுபோல் மூட்டை மூட்டையாக மனதில் தோன்றும் எண்ணக்குவியலையும் அன்றன்றே குப்பைத்தொட்டியைக் காலி செய்வதுபோல் காலிசெய்துவிட்டு ஒவ்வொரு நாளயும் - ஒவ்வொரு கணத்தையும் புதிதாக வரவேற்கும் மனப்பான்மையை மட்டும் வளர்த்துக்கொள்ள முடியுமானால் வாழ்க்கையில் என்றுமே ஒரு புதிய காற்று வீசுமே...! "எல்லாம் தெரியும்" என்ற மனப்பான்மையைக் கழற்றிவிட்டு, " அட, என்ன அற்புதம்..!" என்று உள்ளுக்குள் ஒரு வியப்பும் பிரமிப்பும் இருந்துகொண்டே இருக்கமுடியுமானால்......?!
பின் குறிப்பு:"புத்திகொள்முதல்" - இது என் அம்மா அடிக்கடி உபயோகித்த வார்த்தை - மேலேயுள்ள நாலு வரிப் பதிவில் நான் தெரிந்துகொண்ட புத்திகொள்முதல் - நாலு வரி எழுதச் சோம்பல்பட்டுக்கொண்டு எப்போதோ பழைய குறியீட்டில் எழுதியதை cut & paste பண்ணக்கூடாது. அப்படியே செய்தாலும் நடு நடுவே Tscii குறியீட்டில் எழுதிய வார்த்தைகளை நுழைக்கக்கூடாது. இரண்டும் கலந்ததை unicode ல் மாற்ற முனையும்போது ' சுக்குமி, ளகுதி, இப்பிலி' என்ற ரீதியில் விழுந்து வைக்கும். இதைவிட, பொறுமையாக முதலிலேயே ஒருபாடாக ஒரே குறியீட்டில் இந்த நாலு வரியை உள்ளிட்டிருக்கலாமா? ஹ�ம்.. அதான் புத்திகொள்முதல் என்று சொல்லிவிட்டேனே!! :-)
Thursday, November 27, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment