அணு ஒப்பந்தம் - சில சந்தேகங்கள்.
குமுதம் 15.8.2007 இதழில் இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தம் ( ஆயுத??!! - "அணு ஆயுத" என்று இந்தப் பத்தியில் உபயோகித்த வார்த்தையைப் பார்க்க நேர்ந்தால் அமெரிக்க காங்கிரஸ் முதலில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மறு வேலை பார்ப்பார்கள் :-) ) தொடர்பாக ஒரு பத்தியாளர் தன் வருத்தங்களை விவரித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சின் வலைப் பக்கத்தில் வைத்துள்ள இந்த
அணு ஒப்பந்தம் மொத்தம் 22 பக்கம். விஞ்ஞானம் அதிகம் தெரியாத எனக்கு பாதிக்கு மேல் சுத்தமாகப் புரியவில்லை. ஆனாலும் விடாமல் ஆங்காங்கே "மேய்ந்துவிட்டு" என்னதான் சொல்கிறார்கள்; இந்தியாவுக்கு என்ன ஆதாயம் / நஷ்டம் என்று ஏதாவது புரிகிறதா என்று இரண்டு மூன்று முறை படித்துப் பார்த்தேன்.
எனக்குப் புரிந்தவரையில் பெரும்பாலும் இதில் இந்தியாவுக்கு அனு(ணு!)கூலம் போல்தான் படுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றி முன்னாள் அணு சக்தி கமிஷனின் தலைவர், எம்.ஆர். சீனிவாசன் போன்ற விவரம் அறிந்தவர்களிடையே விவாதங்கள் நிகழ்ந்தபோது மன்மோஹன் சிங் என்ன செய்யப்போகிறார் என்று நானும் என் பங்குக்கு இங்கே கவலையைப் பதிவு செய்திருந்தேன்.
அது பிரதமர் காதில் விழுந்துவிட்டது :-)
ஆனால் பலர் அப்படி நினைக்கவில்லை. பா.ஜ.க நாட்டை அடகு வைத்துவிட்டார் என்று சொல்வதை குமுதம் பத்தியாளர் ஏற்றுக்கொள்கிறார். இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பகுதி அப்படி எண்ண வைக்கிறது என்று புரியவில்லை. குறிப்பாக, " இரு நாடுகளின் பொது நலனுக்கு ஏற்ற விஷயங்களில் உலகளாவிய அளவில் ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கும்போது இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.." என்று ஒரு அம்சம் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக குமுதம் பத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது.
எனக்குப் புரிந்தவரையில் மேலே சுட்டியில் உள்ள அணு ஒப்பந்தத்தில் இப்படி ஒரு அம்சம் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று வெளியான ஒரு விரிவான பேட்டியில் தற்போதைய அரசின் Principal Scientific Advisor திரு ஆர். சிதம்பரம் "எல்லாம் சரியாகதான் இருக்கு" என்கிறார்.
தேவையில்லாமல் குழப்பிக்கொண்டு எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமாக பயன் இருக்கக்கூடிய ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மக்களிடையே பீதியும் அவநம்பிக்கையையும் விழும் சூழ்நிலை உருவாகிறதா?
அல்லது உண்மையிலேயே எங்கேயோ "பொடி" இருக்கிறதா?
சரியான விளக்கங்கள், புரிதல்கள், இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். வரும் திங்கள் கிழமை இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும் என்கிறார்கள். அங்கே என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்........
பிறகு சேர்த்தது: - 11. 08. 07. ஒரு வாசகருக்காக நான் எழுதிய பதில் இங்கே முன் பக்கமும் இருந்தால் விளக்கங்கள் முழுமையாக இருக்கும் என்று தோன்றியதால் அதை இங்கே சேர்க்கிறேன்.
// நான் சொன்னதுபோல் விளக்கங்கள் /புரிதல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு சடுதியான பதில்: "ஆயுத" - கேள்விக்குறிக்கு காரணம் - இது அணு ஆயுத ஒப்பந்தம் அல்ல. Not Nuclear Weapons Deal - மாறாக ஒப்பந்தத்தின் தலைப்பே சொல்வதுபோல் - "Agreement for Cooperation Between the Government of India and the Government of the United States of America concerning peaceful uses of Nuclear Energy" - Nuclear Deal. அதாவது அணு சக்தியை அமைதியான வழியில் உபயோகிப்பதற்கான வழிமுறைகளில் ஒப்பந்தம். - அணு ஒப்பந்தம். "ஆயுதம்" இல்லை. நீங்கள் கவலை தெரிவித்திருக்கும் பல விஷயங்கள் இதில் சம்பந்தமேயில்லை என்று ஒப்பந்தத்தைப் படித்தால் புரியும். அமைச்சகம் முழுமையாக வெளியுட்டள்ளதா... "நுனிப்புலா" - அப்படி சரியான விவரங்கள் இல்லையென்றால் மக்கள் எங்கு போய் வழக்காடுவார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உலகின் ஒரு முக்கிய ஜனநாயக அரசின் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம், முழுமையானதாக / அக்மார்க் அசலாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கிடையேயான எல்லாவித அணு சம்பந்தமான ஒத்துழைப்புகளும் அமைதியான உபயோகங்களுக்கே - அதே சமயம் அவரவர் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு - ( இங்கேதான் சற்று விளக்கம் தேவைப்படுகிறது எனக்கு) பயன்படுத்தப்படும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது. Article 2 - Scope of Cooperation என்ற பகுதியைப் படியுங்கள். இதில் 4th clause: The Parties affirm that the purpose of this agreement is to provide for peaceful Nuclear cooperation and not to affect the unsafeguarded nuclear activities of either Party. Accordingly, nothing in this agreement shall be interpreted as affecting the rights of the Parties to use for their own purposes nuclear material, non - nuclear material, equipment, components, information or technology transferred to them pursuant to this Agreement. This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non - nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.என் புரிதல்: இந்த ஒப்பந்தப்படி நாம் அமெரிக்க உதவிகளைப் பெற்றுக்கொண்டோமானால், அவை வெறும் அமைதியான பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிப்பட வேண்டும். ஆனால் அதே சமயம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற உதவிகளின் / பொருட்களை / டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல், நாம் இத்தனை நாளும் செய்து வந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளின் மூலம் நாம் சொந்தமாக ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் /ஆராய்ச்சிகள் /டெக்னாலஜி மூலம் நம் "இஷ்டப்படி" நம் சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாச் சொன்னா - நான் கொடுத்த சாமானை வைச்சு நீ ஆயுதம் செய்யாதே; நீயாகவே ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறதை வைச்சு நீ என்ன வேணா செஞ்சுக்கோ.... நான் குறுக்கிடலே. இப்படி எல்லா ஷ்ரத்துகளும் இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் இருக்கிறது.//
ஒப்பந்தத்தில் உள்ள Article சிலவற்றை மேலே கோடிக்காட்டியுள்ளேன். இன்று, இன்னும் சில Articles, Anil Kakodkar, Chairman of the Atomic Energy Commission அளித்த இந்த பேட்டியில் இன்னும் விரிவாக அலசப்பட்டுள்ளது.
Friday, August 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். இன்னும் நல்ல விரிவாக எழுதுங்கள்.
இந்த அணு ஆயுத? இங்கு எதற்காக கேள்வி குறி என்று தெரியவில்லை.
மத்திய அமைச்சகம் - முழுமையான விவரங்களைத் தருகிறதா? அல்லது நுனிப்புல் விவரங்களை வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் தந்த சுட்டியை இனி தான் படிக்க வேண்டும்.
தொழில் நுட்ப அளவில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அணு ஆயுத தொழில் நுட்பத்தை முழுமையாக நாம் பெற்ற பின்பே, அமெரிக்கா இறங்கி வந்திருக்கிறது. இதுவே நெருடலான விஷயம் தான். அணு ஆயுத சக்திகளாக அறியப்பட்ட ஐந்து நாடுகள், இந்த சக்தியை எப்படி உபயோகப்படுத்துவது என்று எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்துக் கொண்டு, அதை உலக நாடுகளுக்கு முன் சமர்ப்பிக்காத பொழுது, இந்த அணு ஆயுத க்ளப்பில் இனி யாரையுமே சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்து விட்ட பின்பு, இந்த அணு ஆய்த பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவை கையெழுத்திட வைத்தது - நம்மை நாமே ஒரு rogue state என்ற நிலைக்குத் தள்ளிக் கொண்டோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏன் அத்தனை மெனக்கெட்டு அமெரிக்கர்களைத் திருப்தி செய்ய வேண்டும்? இதன் மூலம் அவர்கள் நமக்கு ஏதாவது புதிதாக தொழில் நுட்பங்களைத் தரப் போகிறார்களா?
இப்படி எல்லாம் இல்லாத பொழுது - வெறுமனே தரமான மூலப் பொருள் கிடைக்கிறது என்பது மட்டுமே ஒரு காரணியாக ஏற்றுக் கொள்ள முடியாது.
நம் எல்லைகளில் இரு அணு ஆயுத நாடுகள் இருக்கின்றன. ஒன்று - சீனா. மற்றது பாக்கிஸ்தான். சீனா க்ளப்பில் இருக்கிறது. அதனால் அதற்கு எந்தத் தடையுமில்லை. அணு ஆயுத தளத்தில் எந்த வித ஆராய்ச்சியும் செய்து கொள்ளலாம. எத்தகைய பயங்கர அணு ஆய்த தயாரிப்பில் ஈடுபடலாம். யாருக்கும் எந்தப் பதிலும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னமும் ஜனநாயகத்தின் மூச்சு காற்று கூட எல்லை தாண்டி தன் எல்கைக்குள் வந்து விட கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும் 'யோக்கியமான நாடு'
மற்றது பாக்கிஸ்தான். 'பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும்' சமர்த்தான நாடு. தீவிரவாதத்தின் தொட்டில் என அழைக்கப்படும் நாடு. ஆனால், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்காவால் விரும்பப்படும் நாடு. அணு ஆயுத பரவல் சட்டத்தில் இன்னமும் கையெழுத்திடாத நாடு. அணு ஆய்த அறிவியலின் தந்தை என அவர்கள் கொண்டாடியவரே அடுத்த நாட்டிற்கு அந்த தொழில் நுட்பத்தை விற்றவர் என பின்னர் குற்றம் சாட்டப்படும் அளவிற்கு நம்பகத் தன்மை.
இப்படி இரு நாடுகளை எல்லைப் புறத்தில் வைத்துக் கொண்டு, நாம் ஏன் நம் கைகளை கட்டிக்கொண்டு விட்டோம் என்பது தான் நிறைய பேர் எழுப்பும் கேள்வி!!! 'We are good boys' என்று பெயர் வாங்குவதற்காக முழங்காலிட்டு நிற்கிறோம். இது தான் வருத்தமளிக்கிறது.
சர்வதேச தடைகள் எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்றவர்கள் இந்திய விஞ்ஞானிகள். இனியும் நம் தேவைகளையும் மேற்கொண்டும் தேவையான தொழில் நுட்பத்தையும் சவாலுடன் எதிர்கொண்டு, போராடியே பெற்றிருக்கலாம். ஆனால், இனி, நம் விஞ்ஞானிகளின் இயங்கு தளங்களை இவர்களுக்கு திறந்து விட வேண்டும். கண்காணிப்பிற்கு ஆளாக வேண்டும்.
நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள கொஞ்சம் கூட வெட்கப்படாதவர்கள் நாம் - கிரிக்கெட் முதல் அனைத்து துறைகளிலும். மண்டியிட்டுக் கொண்டே இன்னமும் 'Super Power' கனவு காணும் அவலம் இந்தியாவில் மட்டும் தான் நிகழுமே தவிர - வேறெந்த நாடுகளும் அதை அனுமதித்திருக்காது.
'கனவு காணுங்கள்' என்று தூண்டி விட்டுக் கொண்டே இருந்தவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, கையெழுத்திட்டிருக்கிறார்கள். பாவம் கலாம் - கனவு காணுங்கள் என்று சொன்னவர் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார் - அடிமைகளுக்கு கனவு காணும் உரிமையில்லை என்பதை.
- நண்பன்.
கிராமத்து கருப்பன் - எனக்கு ஓரளவு புரிந்தால் விரிவாக எழுதுகிறேன்.
நண்பன் - நான் சொன்னதுபோல் விளக்கங்கள் /புரிதல்கள் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு ஒரு சடுதியான பதில்: "ஆயுத" - கேள்விக்குறிக்கு காரணம் - இது அணு ஆயுத ஒப்பந்தம் அல்ல. Not Nuclear Weapons Deal - மாறாக ஒப்பந்தத்தின் தலைப்பே சொல்வதுபோல் - "Agreement for Cooperation Between the Government of India and the Government of the United States of America concerning peaceful uses of Nuclear Energy"
- Nuclear Deal. அதாவது அணு சக்தியை அமைதியான வழியில் உபயோகிப்பதற்கான வழிமுறைகளில் ஒப்பந்தம். - அணு ஒப்பந்தம். "ஆயுதம்" இல்லை.
நீங்கள் கவலை தெரிவித்திருக்கும் பல விஷயங்கள் இதில் சம்பந்தமேயில்லை என்று ஒப்பந்தத்தைப் படித்தால் புரியும். அமைச்சகம் முழுமையாக வெளியுட்டள்ளதா... "நுனிப்புலா" - அப்படி சரியான விவரங்கள் இல்லையென்றால் மக்கள் எங்கு போய் வழக்காடுவார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. உலகின் ஒரு முக்கிய ஜனநாயக அரசின் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தம், முழுமையானதாக / அக்மார்க் அசலாகதான் இருக்கும் என்பது என் நம்பிக்கை.
இந்த ஒப்பந்தப்படி இரு நாடுகளுக்கிடையேயான எல்லாவித அணு சம்பந்தமான ஒத்துழைப்புகளும் அமைதியான உபயோகங்களுக்கே - அதே சமயம் அவரவர் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு - ( இங்கேதான் சற்று விளக்கம் தேவைப்படுகிறது எனக்கு) பயன்படுத்தப்படும் என்று அடிக்கடி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Article 2 - Scope of Cooperation என்ற பகுதியைப் படியுங்கள்.
இதில் 4th clause: The Parties affirm that the purpose of this agreement is to provide for peaceful Nuclear cooperation and not to affect the unsafeguarded nuclear activities of either Party. Accordingly, nothing in this agreement shall be interpreted as affecting the rights of the Parties to use for their own purposes nuclear material, non - nuclear material, equipment, components, information or technology transferred to them pursuant to this Agreement. This Agreement shall be implemented in a manner so as not to hinder or otherwise interfere with any other activities involving the use of nuclear material, non - nuclear material, equipment, components, information or technology and military nuclear facilities produced, acquired or developed by them independent of this Agreement for their own purposes.
என் புரிதல்: இந்த ஒப்பந்தப்படி நாம் அமெரிக்க உதவிகளைப் பெற்றுக்கொண்டோமானால், அவை வெறும் அமைதியான பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகிப்பட வேண்டும். ஆனால் அதே சமயம்,
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெற்ற உதவிகளின் / பொருட்களை / டெக்னாலஜியைப் பயன்படுத்தாமல், நாம் இத்தனை நாளும் செய்து வந்த அணு ஆயுத ஆராய்ச்சிகளின் மூலம் நாம் சொந்தமாக ஏற்படுத்திக்கொண்ட வசதிகள் /ஆராய்ச்சிகள் /டெக்னாலஜி மூலம் நம் "இஷ்டப்படி" நம் சொந்த உபயோகத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். சுருக்கமாச் சொன்னா - நான் கொடுத்த சாமானை வைச்சு நீ ஆயுதம் செய்யாதே; நீயாகவே ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கிறதை வைச்சு நீ என்ன வேணா செஞ்சுக்கோ.... நான் குறுக்கிடலே.
இப்படி எல்லா ஷ்ரத்துகளும் இரு நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் ஒப்பந்தம் இருக்கிறது.
Post a Comment