புகைப்படப் போட்டிக்கு
1. ஏற்காடு - ஜூன் 2007
2. லேக் டாஹோ ( Lake Tahoe - US) - ஜூலை 2006
ஊர் எதுவானாலும் மலையும், காடும், நீரும், மரமும் ஒரே கலவையில் உருவானதுதானே !! ஆனால் இரண்டாவது போட்டோவில் வானத்தின் நீலம் இன்னும் அழுத்தமாக விழுந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?
4 comments:
இரண்டாவது படம் மிகவும் அருமையாக இருக்கிறது..
ஒவ்வொருத்தரின் போட்டோக்களும் அட்டகாசமாக வரிசையாக வருகிறது.
இரண்டாவது போட்டோவில் வானத்தின் நீலம் இன்னும் அழுத்தமாக விழுந்ததன் காரணம் என்னவாக இருக்கும்?
சூரியன் இருக்கும் திசை. நீங்கள் எடுத்த வானத்தின் பகுதி சூரியனின் திசையை விட 90 degree கோணத்தில் இருந்து இருக்கும்.
மற்றது, இந்த படத்தில் உங்கள் கேமரா, வானத்தின் பகுதிக்கு expose ஆகி இருக்கிறது, அதனால் தான் வானம் தெளிவாகவும். முன்னால் இருக்கும் நீர் மரம் கொஞ்சம் under expose ஆகி கருப்பாக இருக்கிறது.
இந்த படங்கள் கொஞ்சம் விளக்கலாம்.இதையும் பாருங்கள்
http://anandvinay.blogspot.com/2006/07/blog-post.html
பாராட்டுக்கு நன்றி முத்துலஷ்மி.
ஆனந்த் வினய்,
இனி வரும் புகைப்படங்களில் உங்கள் யோசனையை உபயோகப்படுத்திப் பார்க்கிறேன். நீங்கள் விளக்கியதைக் கொண்டு இந்தப் படங்கள் எடுத்த நேரம் நினைவு வந்தது. ஏற்காடு - அப்போது சுமார் காலை 11 மணி. என் லென்ஸ் குறிவைத்த தொலைதூரப் பள்ளத்தாக்கில் நல்ல வெயில். ஒரு வேளை அதனால் அந்தப் பகுதியும் அதைத் தொடர்ந்த வானமும் வெளிறியதாகவும் அருகில் இருக்கும் மலைப்பிரதேசங்களும் ஒற்றை மரமும் கருத்தும் தோற்றமளிக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்த படம் சூரியன் மறையும் நேரம். எங்கும் ஒரே மாதிரியாக குளுமையான - subdued - வெளிச்சம். தூரத்தில் மலையின் பின்னே மட்டும் சூரிய வெளிச்சம். உங்கள் விளக்கப்படி சூரியனிலிருந்து என் subject 90 டிகிரிக்கு மேலேயே தள்ளி இருக்கிறது. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
Photos are very nice, especially the Yercaud photo. I just saw the small version and was about to leave the page. Then when I clicked to enlarge, it was mind blowing with the 'villages/oorus' in the background.
Sampath
www.sampath.com
Post a Comment