Wednesday, May 25, 2005

நம்பிக்கை ஒளி...!

இவர் பள்ளியில் படித்தது தமிழ் மீடியம். இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்டிரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆங்கில வழியில் பயிலுவது, எல்லா தமிழ் மீடியம் மாணவர்களுக்கும் போல் சற்று கடினமானதுதான். ஆனால் செந்தில்குமாருக்கு ஒரு கூடுதல் சவால். இவருக்கு காது கேளாது. வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதே முடியாது. உதட்டசைவைப் பார்த்துதான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் ஆங்கிலம் வேறு.

ஆனால் என்ன? இவருக்கு "உடுக்கை இழந்தவன் கைபோல...." உதவும் அருமையான நண்பர்கள் இருக்கிறார்களே? இவருக்கு நடுநிசி வரை உட்கார்ந்து தமிழில் பாடங்கள் விளக்கி சொல்லிக்கொடுத்து உதவுகிறார்கள். இதனால் தன் உடலில் உள்ள இயற்கையான சவால்கள், ஆங்கிலத்தில் தடுமாற்றம் இவற்றையெல்லாம் மீறி கல்லூரி¢ பரிட்சையில் செந்தில்குமார் 10க்கு 7.5 சதவிகிதம் என்ற அளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சில சமயம் சில விஷய்ங்கள் படிக்கும்போது மனசில் சட்டென்று ஒரு உலகமே பிரகாசமாகிவிடுவதுபோல் இருக்கும். அப்படி இருந்தது இதைப் படிக்கும்போது. ஜாதி மத சச்சரவுகள், அரசியல் தகராறுகள், இன்னும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ இடைஞ்சல்கள், சங்கடங்கள் என்று இருந்தாலும், நம் மனசில் எதிர்காலம் பற்றி நம்பிக்கையைக் கொண்டுவருவது இந்த மாதிரி செய்திகள்தாம். குறிப்பாக இளைஞர்களின் இந்த மாதிரியான பரந்த மனப்பான்மையையும், விசால நோக்கையும் பற்றி படிக்கும்போதெல்லாம் மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.

செந்தில்குமார் நாமக்கல் பக்கத்தில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து படிக்க வந்துள்ளார். குடும்பத்தில் இவர்தான் முதன் முதலாக மேல்படிப்பு படிக்கக் வந்துள்ளார். பத்து வயதிலேயே காது கேளாமல் போய்விட்டபோதிலும் இவரது தந்தை இவரை பொறியியல் படிக்க ஊக்குவித்துள்ளார்.

படிக்க உதவி செய்த நண்பர்கள், இப்போது செந்தில்குமாரின் உடல் குறைக்கு சிகிச்சையளிக்கவும் உதவ முற்பட்டுள்ளார்கள். இதற்கு உத்தேசமாகரூபாய் 5.7 லட்சம் ஆகுமாம். நண்பர்கள் ரூ. 3 லட்சம் வரை சேர்த்துவிட்டார்கள். கடைசி வருட மாணவர்கள் தாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது கட்டிய டெபாஸிட் தொகையைத் திரும்பப் பெற்ற்றவுடன் அதையும் கொடுத்து உதவியுள்ளார்கள். இந்த ஆபரேஷனை செய்யப்போகும் Madras ENT Research Foundation Charity Trust அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ. 95000 வேண்டாம் என்று சொல்லிவிட்டது.
கிராமத்திலிருந்து வந்து, அதில் உடலின் சவாலும் சேர்ந்து கொண்ட ஒரு நண்பனுக்கு வாழ்க்கையில் முன்னேற உதவும் இந்த பொறியியல் கல்லூரி மாணவர்களின் மனிதம் மனதை மிகவும் நெகிழ்விக்கிறது.
இந்த உதவியில் வலைப்பதிவாளர்களும் சேர்ந்து கொள்ளலாமே?

Those interested in supporting the initiative can send cheques in favour of the Madras ENT Research Foundation Charitable Trust payable at Chennai (No. 15, P.S. Sivasamy Salai, Mylapore Chennai - 600 004). The donations are exempt from income tax. For details, contact 98841 28586.

9 comments:

Anonymous said...

கண்டிப்பாக உதவலாம்.

Anonymous said...

You are doing a great job, Aruna, with your Tamil and English blogs.

--Joslin

Anonymous said...

//ஜாதி மத சச்சரவுகள், அரசியல் தகராறுகள், இன்னும் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் எத்தனையோ இடைஞ்சல்கள், சங்கடங்கள் என்று இருந்தாலும், நம் மனசில் எதிர்காலம் பற்றி நம்பிக்கையைக் கொண்டுவருவது இந்த மாதிரி செய்திகள்தாம். குறிப்பாக இளைஞர்களின் இந்த மாதிரியான பரந்த மனப்பான்மையையும், விசால நோக்கையும் பற்றி படிக்கும்போதெல்லாம் மனசுக்கு மிக இதமாக இருக்கிறது.
//

உண்மை!

...

பதிவுக்கு நன்றி

Anonymous said...

You are doing a great job, Aruna, with your Tamil and English blogs.

--Joslin

Kannan said...

முந்தைய அனாமதேயப் பின்னூட்டம் என்னுடையது தான்

Anonymous said...

உயரிய எண்ணம்..
வாழ்த்துக்கள் அருணா !!

வீ . எம்
http://arataiarangam.blogspot.com/

Aruna Srinivasan said...

இந்தப் பதிவில் எழுதிய விஷயம் ஒரு விதத்தில் இதமாக இருந்தது என்றால் இங்கே விழுந்துள்ள பின்னூட்டங்களும் நட்சத்திரங்களும் அதேபோல் நம்மைப் பற்றி ஒரு நிறைவைக் கொடுக்கிறது. பிறருக்கு உதவ நினைக்கும் உள்ளங்கள் எங்கேயும் எப்போதும் உண்டு என்பதற்கு இங்கே இன்னொரு ஆதாரம். பின்னூட்டம் அளித்த, செல்வநாயகி, ஜோஸ்லின், கண்ணன், வீ.எம், மற்றும் நட்சத்திரத்தில் ஓட்டுப் போட்ட, மனதில் ஈரத்துடன் படித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் செய்தியை நான் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மாலன்தான் முக்கிய காரணம். செய்தி வந்துள்ளதைச் சுட்டிக்காட்டி இங்கே தமிழ் மணத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்ற யோசனையை முதலில் சொன்னது அவர்தான். இவ்வளவு பேரின் ஆக்கப்பூர்வமான என்ண அலைகளுக்கு "அலைகள்" ஒரு கருவியாக இருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இப்போது செல்வா சொன்ன விஷயத்துக்கு வருகிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்.

செந்தில் குமாரின் நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் ஒரு மாணவர் குழுவாக இயங்குகிறார்கள். செந்தில்குமார் தவிர, ஏற்கனவே சில உடல் சவால் உள்ள மாணவர்களுக்கு இப்படி பணம் திரட்டி உதவி செய்துள்ளார்கள் - கல்லூரி வளாகத்துள் சென்று வர ஸ்கூட்டிகள் வாங்கிக்கொடுத்து. ஆனாலும் "மாணவர்களாக இருப்பதால் நாங்கள் பணத்தை நேரடியாக கையாளத் தயங்குகிறோம். Madras ENT Charity Trust போன்ற பொது அமைப்பின் மூலம் பணம் திரட்டினால் பின்னால் எங்களுக்கு ஏதும் வம்பு வராது என்று நினைக்கிறோம். ஆனாலும் செந்தில் குமார் பேருக்கு நேரடியாக அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லையென்று நினைக்கிறேன்" என்று சொல்லி, சற்று நேரத்தில் அந்த நண்பர் - அவர் பெயர், ராமசுப்பிரமணியன் - செந்தில்குமாரிடம் விசாரித்துவிட்டு அவர் முகவரியைக் கொடுத்தார். விவரம் கீழே:

Draft in Favour of C. Senthilkumar

Address:

S/O. R. Chandran
Chettickulam
Valavanthi Kombai (Via)
Kalappannaicken Paati (Post)
Namakkal -
Pin: 637404
Phone: 04286 - 241322

Anonymous said...

தனிப்பதிவாகப் போடுங்கள் அருணா

-மதி

Aruna Srinivasan said...

மதி, தனிப் பதிவாகவும் போட வேண்டும் என்று நினைத்துதான் இங்கே பதிந்தேன். முன் பக்கம் போடுவதற்குள் வேறு வேலை வந்து அவசரமாக போய்விட்டேன். திரும்பி வந்துப் பார்த்தால், என்னைப் போலவே நீங்களும் எண்ணியிருக்கிறீர்கள் :-)

done :-)