வலைப்பதிவுகள் அமெரிக்காவில் எவ்வளவு தூரம் சக்தி வாய்ந்தனவாக / alternate ஊடகமாக இருக்கின்றன என்பதற்கு நேற்றைய செய்தியில் இன்னொரு உதாரணம். இதில் என்ன சங்கடமென்றால் இந்த முறை மாட்டிக்கொண்டது நம்ம ஊர் பெண் இந்திரா நூயி. ஆமாம் பெப்ஸியின் தலைமை அதிகாரி. சென்னையிலே பிறந்து வளர்ந்து, நம்ம மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜுலே படிச்சவர்.
இந்த செய்தியை படித்தபின் எனக்கு இவர் பேசியது பெரிய குற்றமாக தோன்றவில்லை; அமெரிக்காவை அவர் குறை சொல்வதுபோலவும் இல்லை. நீங்களும் படித்துப் பாருங்களேன் !!
Friday, May 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
என்ன சொல்லி என்ன பயன் ஆ
:-) !!!
அவர் என்ன அப்படி இல்லாததும் பொல்லாததும் சொல்லிவிட்டார் என்று, எல்லாரும் சேர்ந்து இத்தனை தர்ம அடி அடிக்கிறார்கள் என்று புரியவில்லை. -பிரகாஷ்
test
என்ன விஷயம் என்று கேட்பவர்களுக்காக, அதன் தொடர்பான இணைப்புக்கள் இதோ..
http://powerlineblog.com/archives/010492.php
http://powerlineblog.com/archives/010496.php
http://powerlineblog.com/archives/010493.php
http://powerlineblog.com/archives/010492.php
இந்திரா நூயியின் தன்னிலை விளக்கம்
http://www.pepsico.com/msgfromindra.shtml
இப்பத்தான் எங்கயோ, படிச்சேன், கருத்துச் சுதந்திரம் அளிப்பதிலே, அமெரிக்காவுக்கு இணை யாரும் கிடையாது, என்று..ஒரு சாதாரணா, analogy க்காக, அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒருத்தரைப் போட்டு சாத்தமுடியும் என்பதிலும், அதற்காக, தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்குத் துரத்த முடியும் என்பதிலும், வளரும் நாட்டுக்கும் வல்லரசுக்கும் இடையிலான வித்தியாசத்தை, 'அவர்கள்' உணர்த்தி விட்டார்கள்.
கொஞ்சம் நேரம் பொறுங்கள்... டைமண்டுக் கவி சொன்னாப்பலே, " வானம் தொட்டுவிடும் தூரம் தான்" . அதுக்கப்புறம் வெச்சிக்கிறேன் கச்சேரியை...
பிரகாஷ், அந்த விரல் சமாசாரத்தில் ஒரு கலாசார பின்ணணி இருக்கிறதாமே? அங்கே, விரலைக் காண்பித்துப் பேசினால் அவமரியாதை என்பதால் நூயி பேச்சு தவறாகவும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கலாமாம்.
தொடர்பில்லாத இடத்தில் தொடர்பில்லாத பேச்சு. இவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படிக்கூட insensitiveவாக பேசமுடியுமா என வியக்க வைக்கிறது செய்தி.
iyya
thankal solvathu sari thaan
Post a Comment