என்ன இப்படி ஒரேடியாகக் காணாமல் போய்விட்டேன் என்று நினைக்கிறீர்களா?கலிபோர்னியாவில் இருக்கும் மகன் - மூத்தவன் - மூன்று வருடம் கழித்து மூன்று வார விடுப்பில் வருகை. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்று தோன்றுவது இயல்புதானே? அரட்டை, ஊர் சுற்றல் சமையல், சாப்பாடு, நண்பர்கள் / உறவினர்கள் சந்திப்பு என்று மூன்று வாரம் ஓடிப்போய் விட்டது. நான் கல்லூரியில் படிக்கும்போது விடுமுறைக்கு வீட்டுக்குப் போகும்போதும் பிறகு திருமணமாகி பிறந்த வீட்டுக்கு ஒவ்வொரு முறை போகும்போதும் அம்மா / அப்பா எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று இப்போ எனக்குப் புரிகிறது. அப்போதும் ஊருக்குப் போவதற்கு முன்னும் பின்னும் மனசில் ஒரு பாரம் இருக்கும். சொல்லத்தெரியாத வேதனையும் அதே சமயம் யதார்த்தத்தை ஏற்றுகொள்ளும் மனப் பக்குவமும் என்று ஒரு கலவை உணர்வு மனசில் சுழலும். காலச்சக்கரத்தில் இப்போ நான் நகர்ந்து என் பெற்றோர் இருந்த இடத்துக்கு வந்துள்ளேன். உணர்வுகள் என்னமோ அதேதான். பதவிதான் வேறு.
அதுசரி. வலைப்பதிவுகளில் இந்த மூன்று வாரம் என்ன ஆச்சு என்று மேய வேண்டாமோ? பதிவுகள் விரைவில் வழக்கம்போல் தொடரும்.
Tuesday, July 27, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
No sentiments please :-)
Post a Comment