Thursday, July 01, 2004

இன்றுடன் ஹாங்காங் சீனாவுடன் மறுபடி இணைந்து 7 வருடமாகிறது. 1997ல் ஜூலை 1 ந் தேதி இந்த நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சீனாவிடம் ஹாங்காங் போனபின்பு வாழ்க்கை எப்படி மாறுமோ என்று கவலைப்பட்ட பலர் ஹாங்காங்கைவிட்டு உலகின் வேறு பாகங்களுக்கு குடி பெயர்ந்தனர். சீனர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. நாம் முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதுபோல் அவர்கள் வருடா வருடம் முன்னோர்களின் அஸ்தி வைத்த இடத்தில் சென்று அந்த இடத்தை சுத்தப் படுத்துவதும் அங்கே வணங்குவதும் வழக்கம். ஆனால் ஹாங்காங்கை விட்டு இடம் பெயர்ந்தபின் முன்னோர்களின் நினைவிடத்தை வணங்குவதற்காக ஹாங்காங் வந்து போக முடியுமா என்ன? அதனால் இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அஸ்திகளைத் தோண்டி எடுத்துக் கொண்டு தாங்கள் குடிபோகும் நாட்டிற்கு எடுத்து சென்று விட்டார்கள்!! எப்படி இவர்கள் யோசனை?

இந்த ஹாங்காங் கை மாறுதல் பற்றிய என் கட்டுரையை இங்கே படியுங்கள்.

No comments: