ஏ ஆர் ரஹ்மானின் ஆஸ்கார் விருது பாராட்டு மழையின் நடுவே நிறைய விமரிசனங்களும் பொழிந்து கொண்டுள்ளன - அமிதாப் பச்சனின் விமரிசனம் உள்பட. இந்தியா is the flavour of the day என்ற நிலையில், இந்திய களம் ஒன்று அமைத்து செய்தால் வெற்றி பெறும் என்று எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. அதுவும் இந்தியாவின் வறுமை / ஊழல் மற்றும் இதர நலிந்த பக்கங்கள் என்ற ரீதியில் படம் எடுத்தாலோ / புத்தகம் எழுதினாலோ ( புக்கர் விருதைப் பெற்ற அரவிந்த் அடிகாவின் White Tiger - ) நிச்சயம் வெற்றி என்று ஒரு பிம்பம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், விமரிசங்களுக்கப்பால், இந்தியர் ஒருவரின் திறமை உலகளவில் அங்கீகரிக்கப்ப்ட்டதில் நிச்சயம் நான் பெருமை கொள்கிறேன். நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் முழுதும் மின்சாரம் பாய்ந்தாற்போல் ஒரு விறுவிறுப்பும், அடிப்படை மனித சுபாவங்களையும் படம் பிடித்து காட்டுகிறது என்று கேள்விபட்டேன்.
எப்போது ஒரு படைப்பு ஜாதி, நாடு, மொழி என்று விளிம்புகளைத் தாண்டி பலதரப்ப்ட்ட மக்களை சென்று அடைகிறதோ, அந்தப் படைப்பு நிச்சயம் உலக தரம் வாய்ந்தது. ரெஹ்மானின் இசை அதை சாதித்து இருக்கிறது என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ரெஹ்மானின் ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பகிர்ந்து கொள்பவர், பாடலாசிரியர் குல்சார். ரெஹ்மான் மழையில் இவரை அனேகம் பேர் மறந்து போனார்கள்!! டைம் ஆப் இந்தியாவில் அவரது பேட்டி குறிப்பிடத் தகுந்ததாக இருந்தது. ஸ்லம் டாக் என்ற பெயர், under dog என்று சொல்வது போலதான் என்கிறார். இந்தியாவின் வறுமையை படம் பிடித்து காண்பிப்பது சரியா என்ற கேள்விக்கு, அதிலென்ன தவறு என்று கேட்பவர், சத்யஜித் ரே பற்றியும் இப்படித்தானே சொன்னார்கள்' வறுமை என்பது வாழ்க்கையில் ஒரு அம்சம். இந்தப்படம், வாழ்க்கையிலிருந்து ஒரு பகுதியை எடுத்துக் காட்டுகிறது; அவ்வளவுதான் என்கிறார். "These critics are missing the point that Slumdog, just like Pather Panchali, isn’t about poverty. It’s a slice of life. The best of cinema, like the best of literature worldwide, including Dickens, has portrayed poverty, because it’s a part of life. If you fail to see that, it’s your limitation. " என்பது இவரது கருத்து.
அர்த்தமுள்ள வாதம்.
சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பால் ரெஹ்மான் சொல்லிய இரண்டு கருத்துக்கள் மிக முக்கியமானவை. ஆஸ்கார் விருதை பெற்றுக் கொண்டு அவர் கூறிய, " அன்பு, வெறுப்பு என்ற இரு பாதையில் நான் எப்போதும் அன்பைத் தேர்வு செய்தேன்...." என்ற வாக்கியம் இன்று பட்டி தொட்டிகளிலெல்லலம் முழங்குகிறது. வெறும் கவர்ச்சியான வாக்கியமாக இல்லாமல், அவர் அனுபவித்து, உணர்வு பூர்வமாக சொன்ன அந்த வார்த்தைகளின் புரிதல், பத்தில் ஒரு பங்கு பேரிடம் போய்ச் சேர்ந்தால் கூட போதும் - நம் சமூக வாழ்க்கையில் அதிசயத்தக்க மாற்றங்கள் நிகழும்.
இரண்டாவதாக அவர் சொல்லியது வெற்றியைத் தேடி உழைக்கும் பல இளைஞர்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
விருது கிடைக்க வேண்டும் என்ற எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், இயல்பான தன்னுடைய ஆர்வத்திலும், உழைப்பின் மேலும் நம்பிக்கை வைத்து, கடமையே கண்ணாக உழைப்பது அவரது சுபாவம். "I’ve realised when you work without thinking about awards and money, it pays off” என்ற அவர் கருத்தில் வெற்றிகரமான வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் அடங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இதைத்தான் கீதை சொல்கிறது.
கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே.
அந்த கீதையின் கருத்தை மாற்றி நம் சூப்பர் ஸ்டார் ரஜினி “கடமையைச் செய் பலன எதிர்பார் “என்று வியாக்கியானம் செய்தார் .
பலனை நீ எதிர்பார்த்து நிற்க வேண்டாம் ,உன் செய்கைக்கான பலன்,தானாகவே உன்னைத் தேடி வரும் என்பதுதான் அதன் அர்த்தம் என்று தினமணியில் விளக்கம் இருந்தது.
திரு ரஹ்மான் பலனை எதிர்பார்க்காமல் பணியாற்று என்று சொல்லாமல் செயலிலேயே காட்டிவிட்டார்.
சரியான வேளையில் சரியான மனிதரைப் பற்றிச் சரியாக நிதானமாக கருத்துப் பதிந்திருக்கிறீர்கள் அருணா.
அவர் அன்பை ஆதரித்துச் சொன்னால் அதைப் பின்பற்ற்வும் இளைய சமுதாயத்தினர் அதை அனுபவிக்கும் தயாராக இருப்பார்கள். ரஹ்மான்= யூத். க்ரேட் காம்பினேஷன்.
Post a Comment