Wednesday, June 29, 2005

இரண்டு குறிப்புகள்: ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.

புஷ் பேசப்போகிறார், பேசப்போகிறார் என்று பேசியும் விட்டார்.

"........அதெல்லாம் கவலைப் படாதீங்க. இந்த ரத்த ஆறு அவசியம்தான். வேற வழியில்லே.... இந்தக் கஷ்டத்தை நாம பொறுத்துதான் ஆகணும்...."

என்னத்தைப் புதுசா பேசினார்? என் ரத்தம் கொதிக்கிறது இப்போ. அப்புறமா சாவகாசமா அவர் பேச்சை அலசலாம். :-(

இதுக்கு நடுவிலே "அம்மணியின்" சிறுகதைக் காற்று எனக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது. என்னோட "ஹைகூ" (??!!) கதை இதோ....
எங்கே, பாஸ் மார்க் உண்டா என்று சொல்லுங்கள்??? :-)


"அவனும் அவளும் வீட்டுப்படியேறிக்கொண்டிருந்தார்கள். அவன் கையில் Take Away சாப்பாடு. அவள் கையில் தள்ளுவண்டியில் குழந்தை - வாயில் நிப்பிளுடன் ( pacifier/ soother ) தூங்கிகொண்டு இருந்தது. நேரம் மாலை 6 மணி."

பின்னர் சேர்த்தது:

( ஏதோ எனக்குத் தெரிந்த தமிழ் வார்த்தையை நான் உபயோகித்தது சிலருக்குப் புரியாததால் ஆங்கில வார்த்தையை இங்கே பின்னர் சேர்த்து என் கதையை அநாவசியமாக இரண்டு வார்த்தை சேர்க்கும்படி ஆயிற்று.)

4 comments:

dondu(#11168674346665545885) said...

அருணா அவர்களே, டோண்டு ராகவன் அனாமத்தாக வர மாட்டான் என்பது நீங்கள் அறிந்ததுதானே. இப்போது போலி டோண்டு உங்களிடமே வாலாட்டுகிறான் பார்த்தீர்களா? உங்கள் பதிவுகளிலிருந்து அனானிப் பின்னூட்ட வசதியை செயலிழக்கச் செய்யுங்கள் என்று நான் உங்களைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும் என்பதையும் கூறி விடுகிறேன்.

பார்க்க: paarkka: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kannan said...

அருணா,

நீங்கள் மனம் வருந்த நேர்ந்தது துரதிர்ட்ஷ்டம்.

மற்றபடி, அம்மணியின் குட்டிக் கதைகள் எனக்கும் விருப்பமானது. அவரின் பல குட்டிக் கதைகளின் இறுதி வரியே அக்கதைகளுக்கு ஒரு நல்ல twist ஐக் கொடுக்கும்.

இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் பெயர் (ஹைகூ கதைகள்) வெகு நேர்த்தி! அப்புறம்... பாஸ் தான், வேறென்ன?

:-)

Anonymous said...

Nice imagery. Mannikkanum, yen kitta tamizh fonts illai. Blogsite kurippattadarku nanri :)

Aruna Srinivasan said...

ராகவன், அனாமதேய வசதியை பிளாக்கரிலிருந்து நீக்கிவிட்டேன். சரிதானே?

கண்ணன், "ஹைகூ கதை" என்று எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருந்தது. அதனால் நான் காப்பிரைட் கேட்க முடியாது. :-) ரசித்ததற்கு நன்றி.

பாராட்டிய அனானிமஸ¤க்கு நன்றி. அடுத்தமுறை தயவு செய்து உங்கள் பெயரை எழுதுங்கள். நல்ல வார்த்தைதானே சொல்கிறீர்கள்? :-)