பத்ரி நேற்றைய பதிவுக்கு கொடுத்திருந்த பதிலுக்கு என் பதிலை இங்கே பதிகிறேன். மிக நீளமாக இருந்ததால் இது எளிதாக இருக்கும் என்று தோன்றிற்று.
பாண்டுகள் மூலம் பணம் திரட்டும் திட்டம் நல்லதுதான்.Infrastructure Bond மாதிரி, அல்லது வெற்றிகரமாக இருந்த Resurgent Bond மாதிரி பொது மக்களிடமிருந்து பணம் திரட்டலாம். பத்ரி சொல்வதுபோல் கறுப்பு பணம் வெளி வரவும் வழி செய்யலாம். சிதம்பரத்தின் முந்தைய பீரியடில் செய்தது போல் VDIS கூட ஓகே. ஆனால் இந்த மாதிரி கறுப்பு பணம் வெளிக்கொணர பாண்டுகள் உபயோகிக்கப்படுவது ஒரு மோசமான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். இது ஒரு வழக்கமாகவே ஆகிவிடும். "இப்போ பதுக்கலாம்; அதுதான் ஏதாவது பாண்ட் திட்டம் வருமே அப்போது வெள்ளையாக்கிக்கொள்ளலாம்" என்ற ரீதியில் எண்ணம் உருவாகலாம்.
அதனால் அவசரத் தீர்வுகள் இல்லாமல், நெடுங்காலம் (Longterm) பயன் அளிக்கும் வண்ணம் ஏதாவது திட்டம் இருக்க வேண்டும். அதனால்தான் சிதம்பரத்தின் "முதலீடு" "பசி" நல்ல யோசனையாக தோன்றுகிறது. தனி மனிதர்கள் / professionals / ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இவர்கள் ஒரு பயமின்றி பல துறைகளில் முதலீடு செய்யும் சூழ்நிலையை அரசு அமைத்துக் கொடுக்கலாம். எளிதான கடன் வசதி; ஊக்குவிப்புகள் (incentives) என்ற ரீதியில். உதாரணமாக தண்ணீர் இல்லாத இடங்களில் desalination வசதிகள் அமைக்கவோ, அல்லது நீர் வசதி மிக்க இடங்களில் இருந்து நீர் அல்லாத இடங்களுக்கு வினியோகிக்கும் அமைப்புகள் உருவாக்கவோ ( தண்ணீர் லாரிகள் அல்ல; வேறு முறையான longterm வினியோக முறை தீர்வுகள்) ஆங்காங்கே தனியார் முதலீடுகளை ஊக்குவிக்க்லாம். இவை ஒழுங்காக செயல்பட்டு மகக்ளை சென்றடைகிறதா என்று கவனிக்க ஒரு regulator இருக்கலாம். பலவித தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு இருப்பதுபோல.
தவிர, இந்த "பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" என்ற திட்டத்திலும், கிட்டதட்ட disinvestment தொனி இருக்கிறதே? அதாவது, அரசு நிறுவனங்களின் பங்குகளை ஒரு சில குறிப்பிட்ட தனியாரிடம் குறிப்பிட்ட சதவிகிதம் பங்குகளை விற்பதற்கு பதிலாக, retail investorக்கு விற்பதால் பொது மக்கள் அவற்றில் பங்குதாரர்கள் ஆகின்றனர். இன்னொரு பக்கம் அரசும் பொது மக்களுமாக equity உண்டாக்கி புதிய துறைகளில் முதலீடு செய்யலாம். பொது மக்கள் பங்குதாரர்கள் ஆகும்போது effeciency accounatbility நிறையவே இருக்கும். இந்த effeciency விஷயத்திற்கு சிதம்பரம் சொல்லும் தீர்வு, நிறுவனங்களின் நிர்வாகத்தில் அரசு முதலீட்டுடன் நிறுத்திக்கொண்டு தினசரி நிர்வாகத்தை professional managers சுதந்திரமாக கையாள வேண்டும் என்பது. இதுவும் செயலப்டுத்தக்கூடிய திட்டம். ஆனால் அரசு பிரதினிதிகள் கணிசமாக போர்டில் இருக்க வேண்டும் - நிர்வாகம் தடம் புரளாமல் கவனிக்க.
என் கருத்து, என் நம்பிக்கை என்னவென்றால், கார்கள் மற்றும் white goods எனப்படும் டிவி, பிரிட்ஜ் போன்ற நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியுடன், தனியார் முதலீடு கட்டுமான துறைகளிலும் வரும்படியான climate ஐ, அரசு உருவாக்கினால் சமூக நல திட்டங்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் - நெடுங்காலம் பயனளிக்கும் வகையில். ஆனால், முதலீட்டுக்கு பிற தொழில்கள் மாதிரி நிறைய லாபம் / வருமானம் இருக்காதே? அதற்கு வழி, User pays முறைதான் - நுகரும் வசதிகளுக்கு பணம் கொடுக்க இயலாத நுகர்வோர்களுக்கு அரசு சலுகை கொடுக்க வேண்டியதுதான். உதாரணமாக இன்று எத்தனை கார்பொரேஷன் பள்ளி¢களில் தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் நவீன கல்வி திட்டங்கள் மற்றும் மாண்டிசேரி முறை கல்வி இருக்கிறதென்று தெரியவில்லை. எழுத்தறிவு கூடியிருக்கிறது என்று statistics சொல்கிறதே தவிர, கையெழுத்து போடத்தெரிந்தாலே 'எழுத்தறிவு" கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையாக கல்வி பயிலும் மாணவர்கள் எத்தனைபேர்? ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளில் கணிசமான சதவிகிதம் உயர் நிலைப் பள்ளி வரை கூட தாண்டுவதில்லை. பாதியிலேயே நின்று விடுகிறார்கள். பள்ளியிறுதியைத் தொடுபவர்கள் இன்னும் குறைவு. படிப்பைப் பாதியில் நிறுத்த ஒரு முக்கிய காரணம் கல்வி கற்கும் சூழ்நிலை. ஆசிரியர் அடிப்பார் என்று பள்ளிக்கு செல்வதை நிறுத்திய சிறுவர்கள் அதிகம். கார்பொரேஷன் பள்ளிகளில் 10 கணினிகளை வாங்கி போட்டுவிட்டால் மட்டும் போதாது. தனியார் பள்ளிகளில் இருப்பதுபோல் ஆர்வத்துடன் சொல்லித்தரும் ஆசிரியர்கள், வித்தியாசமான கல்வி பயிலும் முறைகள், என்று பலவித delivery விஷய்ங்கள் இருக்கின்றன. ஆகவே, விவசாயம், கட்டுமானம், கல்வித் துறை என்று எந்த சமூக நலத்துறை எடுத்துக்கொண்டாலும் முதலீடு ஒரு புறமென்றால், அதை சரிவர நிர்வகித்து அடைய வேண்டியவர்களை சரிவர அடையச் செய்வது பெரிய சாதனை.
Sunday, May 30, 2004
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இப்பத்தான் இந்த உங்கள் இருபதிவுகளையும், பத்ரியின் பின்னூட்டத்தையும் வாசித்தேன்.
1. மக்களிடம் பணம் புரட்டுவது நல்ல யோசனைதான். ஆனால், கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவருவதற்காக என்று வெளிப்படையாச் சொன்னால், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சுளுக்கு எடுத்து விடுவார் :-)
2. மக்களிடம் இருந்து பணம் கொண்டு வருவது இப்போதைய சூழ்நிலையில் கொஞ்சம் சரியாக வரும் என்று நினைக்கிறேன். தற்போதைய வட்டி விகிதத்தை வைத்துப் பார்க்கும் போது, பணத்தை வங்கிகளிடம் சேமிப்பதை விட, வீட்டு இருப்புப் பெட்டியில் இருப்பதே சாலச் சிறந்தது. சுந்தரம், அஷோக் லேலண்ட், இந்தியா சிமிண்ட் டாடா ·பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள், நினைத்த போதெல்லாம் பணத்தை டெப்பாசிட் செய்ய முடிவதில்லை. பங்கு மார்க்கெட்டும் ரிஸ்க். ரியல் எஸ்ட்டேட்டில் முதலீடு செய்ய அதிக முதல் தேவை. அதிலும் லிக்விடிட்டி கம்மி. இந்த சூழ்நிலையில், நிதி அமைச்சகத்தில் இருப்பவர்கள், கொஞ்சம் மூளையை உபயோகித்து, (விடிஐஎஸ் போல ) நல்ல ஒரு financial instrument ஐ அறிமுகப்படுத்தினால், நிறையப் பணம் வரும். அதைக் கொண்டு ஒரு பகுதியும், மீதியை பட்ஜெட் ஒதுக்கீட்டில் இருந்தும் பெற்று வர்த்தக திட்டங்களை நிறைவேற்றலாம். வர்த்தக திட்டங்களில் கிடைக்கும் லாபத்தை வைத்து வருமானம் இல்லாத நலத்திட்டங்களை நிறைவேற்றலாம். நல்ல கவர்ச்சியான return இருக்கும் என்றால், எளிதாக பணம் திரட்டலாம்.
3. அரசு உற்பத்தியில் கவனம் செலுத்தப் போகிறது என்று சிதம்பரம் அவர்கள் சொன்னது மகிழ்ச்சிதான். ஆனால், அந்த கவனம் எந்த அளவில் இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. ஸ்கூட்டர் தயாரிப்பது, ரொட்டி தயாரிப்பது என்று முன்பு இருந்ததைப் போல நேரடியாக அரசே தொழில்களைத் துவங்கப் போகிறதா அல்லது, உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய வருபவர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்துத் தரப் போகிறதா என்று தெரியவில்லை.
4. இன்னும் விரிவாக எழுதவேண்டும். நாளை என் வலைப்பதிவில் பின் தொடர்கிறேன்.
அருணா: "தவிர, இந்த "பொது மக்கள் பணம் பொது மக்களுக்கு" என்ற திட்டத்திலும், கிட்டதட்ட disinvestment தொனி இருக்கிறதே? அதாவது, அரசு நிறுவனங்களின் பங்குகளை ஒரு சில குறிப்பிட்ட தனியாரிடம் குறிப்பிட்ட சதவிகிதம் பங்குகளை விற்பதற்கு பதிலாக, retail investorக்கு விற்பதால் பொது மக்கள் அவற்றில் பங்குதாரர்கள் ஆகின்றனர்."
Disinvestment எனும்போது, அரசு தன் காசில் ஒரு நிறுவனத்தைக் கட்டி, அதனால் பெரும் லாபம் ஈட்டி, திடீரென்று ஒரு நாள் அப்படிப்பட்ட லாபம் கொழிக்கும் கம்பெனியை அடிமாட்டு விலைக்கு "கெட்ட capitalists க்கு" விற்பதுதான் என்று இடதுசாரிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது போகட்டும்.
நான் சொல்வது disinvestment இல்லை. investment. அதாவது ஒரு கம்பெனி இன்னமும் ஆரம்பிக்கப்படவேயில்லை. அதனை ஆரம்பிக்கத் தேவையான அளவு பணத்தை அரசு மட்டுமே போடப்போவதில்லை. ஏனெனில் அரசே முழுமையாக செலவு செய்தால் மற்ற நலத்திட்டங்களுக்கோ, மான்யம் வழங்குவதற்கோ பணம் இல்லாமல் போகலாம், fiscal deficitஉம் மிக அதிகமாகும். அதனால் 10% பணம் என்னது, மீதி 90% (உதாரணத்துக்கு...) மக்களிடம் கடன் பத்திரமாக வசூல் செய்வது என்று சொல்லி அரசு ஒரு அனல் மின் நிலையம் கட்டுகிறது என்று வைத்துக்கொள்வோம். அரசே management control வைத்துக் கொள்ளட்டும். பிற்காலத்தில் கடன் பத்திரங்களை பங்குப் பத்திரங்களாக மாற்றும்போதும் Class A, Class B பங்குகள் என்று வழங்கலாம். அரசிடம் Class A பங்குகள் இருக்கும். அதுதான் voting share. பொதுமக்களிடமும், financial institutionsஇடமும் Class B பங்குகளே கொடுக்கப்படும். Class B பங்குகளுக்கு டிவிடெண்ட் உண்டு, ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. இதனால் இடது சாரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமும் கிடையாது.
It is possible to set up a company where the entire management control is with a group which is the promoter group and have brought in only very little capital (and a lot of clout), while the rest of the finances can be brought in as equity through a slightly circuitous route in the beginning (when the company has not even come into place and started producing electricity - say), during which time the invested money is guaranteed by the government, and then converted in to shares at an appropriate time, with the approval of the bond holders.
This is investment from public, not disinvesting to public.
Take a look at Viacom (USA) for example - which owns CBS and MTV besides several other media ventures. Even for the CBS acquisition, the freshly issued shares were Class B shares. Class A voting shares are owned mostly by Sumner Redstone, the chief of Viacom, and has not diluted his control one bit - he has given up only financial returns, while retaining complete shareholding control.
Just some clarifications.
Disinvestment - Government selliong the shares it is holding in a public sector company to others - be it FIs, FIIs, Retail investors. By these shares changing hands, the actual company does not directly benefit at all. Its equity base has not changed. Disinvestment = Divesting equity. I think the word 'disinvestment' does not exist in dictionary.
Investment - Money comes into the company for its expansion. This is the money that is put to good use by a company, to grow its market, to buy plant and machinery, to expand the marketing network etc. and the ideal end result of this should be increased revenue and profits for the company, provided the management of the company is good enough.
I am not suggesting collecting money through a fuzzy and unclear 'resurgent india bond' type instrument. I am talking about a project-by-project, company-by-company capital generation. For example, suppose the govt. sees that setting up desalination plants across Coromandel coast is a needy and at the same time a profitable operation. So they set up a company called Coromandel desalination company CDC. They put in a capital of, say 10 crores as a starting point.They build a project plan, and estimate that it will take 10,000 crores as the cost of setting up plants from Chennai to Kanyakumari for supplying 70% of drinking water requirements for Tamil Nadu. With this investment, the assumption is that the company will - in about 7 years - break even and start generating sufficient internal accruals to survive.
The management also decides (say) the company will eventually target a 1.5:1 debt-equity ratio. The central government decides to bring in 1000 crores as its equity. Then the govt. raises about 3000 crores through a special OCB - the option of converting this into equity remains with the bond holders rather than with the Government. For this 7 year OCB, CDC is willing to give 8-10% interest. The interest cost is included in the cost of project (10,000 crores). OCBs will convert to Class B shares with no voting control. The 1000 crores brought in by the govt. is converted in to class A shares with 100% voting control.
CDC borrows another 6000 crores through normal loans, including ECB.
Company finishes setting up its plant. 7 years down the line, the 3000 crores worth of bonds are converted to Class B shares - if not 100%, I am assuming may be about 70%. Then these Class B shares are listed at par, and can be traded. It is certain to appreciate - if CDC is going to generate profits.
So those who invest in the convertible bonds will need to read through the entire prospectus of the proposed company and how it intends to build the company, the technology it is going to depend on, the profitability of the operation, its management team, the risks in the business and so on - a standard red herring prospectus.
Hope this makes sense.
பத்ரி, பிரகாஷ், நன்றி.
பத்ரி,
disinvestment என்று நான் குறிப்பிட்டது, இப்போது ஏற்கனவே இருக்கும் தனியார் நிறுவனங்களின் பங்குகளைப் பற்றிதான். - btw, disinvestment என்கிற வார்த்தை பங்கு மார்கெட் அகராதியில் உண்டு :-)
புது நிறுவனங்களை, retail investors - முதலீடு (debt fund) அதிகமாக போட்டு (- நீங்கள் சொல்வதுபோல் 90 % -(!!!) ஆரம்பிப்பதன் மூலம் பணம் திரட்டலாம் என்பதுதான் என் கருத்தும். அந்த மக்கள் முதலீடு, கடன் பத்திரமாக இருப்பது பாதுகாப்பான முதலீடாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பங்குகளைவிட இந்த பத்திரங்களுக்கு ஒரு நம்பகத்தன்மை இருக்கும். இப்படி முதலீடு செய்ய மக்கள் முன் வருவார்கள். பங்குகளில் முதலீடு செய்ய காலங்காலமாக தயங்கும் conservative investor கூட இந்த அரசு பத்திரங்களில் பணம் போட முன் வரலாம்.
ஆனால், எனக்கு இரண்டு விஷயங்கள் கவலை தருகின்றன. ஒன்று, பிரகாஷ் சொல்வதுபோல் இந்தப் புது நிறுவனங்கள் எந்தத் துறையில் என்பதுதான் கேள்வி. லாபகரமான தொழில்களி¢ல் மற்ற தொழிலதிபர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அரசு முதலீடு செய்ய வேண்டுமா அல்லது முதலில் அடிபப்டை தேவைகளைப் பூர்த்தி செய்யும் துறைகளில் கவனம் செலுத்த வேண்டுமா என்பது முக்கியம். கையில் இருக்கும் குறைச்சலான resources சரியாக பயன்படுத்தபட வேண்டும். ( பிரகாஷ், அமைச்சர், தொழில் உற்பத்தியில் கவனம் என்று குறிப்பிடது, சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருவது மற்றும் ஊக்குவிக்கும் அளவில்தான் என்று நினைக்கிறேன். ரொட்டி, கார்கள் போன்றவற்றில் நேரடி முதலீடாக இருக்காது. )
இரண்டாவது, பத்ரி, உங்கள் CDC கம்பெனி மாடல் நன்றாக்தான் இருக்கு. 1.5: 1 விகிதத்தில், நாம் வாங்கும் கடன் பத்திரங்கள் மூலம் 3000; அரசு தரப்பில் 1000; என்றும், பாக்கி 6000 வெளியிலே, வெளி நாட்டு பங்கு முதலீட்டார்கள், (FIIs) மற்றும் External Commerical Borrowings மூலம் புரட்டிடலாம் என்கிறீர்கள். என்னைப் போன்ற சாதாரண முதலீட்டார்களுக்கு / கடன் பத்திரம் வாங்கியவர்களுக்கு 8 - 10 interest இந்த மொத்த முதலீட்டுலேர்ந்து கொடுக்கிறீங்க. இந்த 10000 கோடி பட்ஜெட், பாக்டெரியை நிர்மாணித்து, maintain பண்றது, வட்டி, ( செலவுகள், சம்பளம்) எல்லாத்துக்கும் சேர்த்து. சரிதானே?
சரி. But what about Return On Capital Employed (ROCE)? - இந்த மாதிரி கட்டுமான துறைகளில் முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் இருப்பதில்லை என்பது ஒரு முக்கிய தடை என்று சொல்லப்படுகிறது இல்லையா? would the revenue generation meet the cost and yield profits? ஒரு குறிப்பிட்ட கால அளவுல break even ( 7 வருஷம், ஒரு உதாரணத்துக்கு) இருக்குமென்று நினைக்கிறீங்க. 7 வருஷம் கழித்து என் கடன் பத்திரங்களை பங்குகளாக மாற்றிடறேன் என்று வையுங்கள். பங்கு சந்தையிலே நன்றாக விலை ஏறுவது அந்த கம்பெனி லாபகரமாக நடக்க்கும் முறையைப் பொறுத்தது. நீங்க கடைசி பாராவில் சொல்லியிருக்கிற விஷயங்கள் சற்று கவனிக்க வேண்டிய விஷயம். The markatability of welfare projects. கம்பெனி நன்றாக இருந்தால் பங்குகளாக மாற்றுவேன். சரியாப்படலைன்னா, கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கிடலாம். அப்போ எல்லோரும் redeem பண்ண ஆரம்பிச்சா பிரச்சனை வருமே....
அதுசரி. நமக்கிருக்கும் கவலை சிதம்பரம் & மன்மோஹன் சிங்குக்கு இருக்காதா? Hope they will burn midnight oil to bring out a practical solution.
Profitability இருக்குமாறு பல கட்டுமான துறைகள் இருக்கே? உதாரணமா மின்சாரம். BSES, Tata Power இரண்டுமே நல்ல லாபம் ஈட்டுகின்றன இப்பொழுது. இங்கு அரசு நிச்சயமாக தனியார்களிடம் போட்டி போடப்போவது கிடையாது. ஏனெனில் நமது மின்சாரத் தேவை எக்கச்சக்கம். இதைப் பார்த்தீர்களா?
In Tenth Plan, targeted additional power generation target was 41,000 MW. Of this 23,000 MW was being commissioned in the Central sector and 11,000 MW in the State sector; only 7,000 MW was being set up in the private sector.
மேலும் அணு மின்சாரம் என்று வந்தாலே அதை மத்திய அரசு மட்டும்தான் இப்பொழுதைக்கு உற்பத்தி செய்ய முடியும் என்று ஆகிறது. தனியார் வசம் ஒப்படைக்க நம்மாட்கள் பயப்படுவார்கள்! எனவே மின்சார உற்பத்தியில் மத்திய அரசு வேறு வழியின்று தலையிட்டே ஆக வேண்டும்.
அது போலத்தான் இப்பொழுதைக்கு இரும்பு/எஃகு உற்பத்தியிலும். SAIL தன் உற்பத்தியை 12.6 மில்லியன் டன்னிலிருந்து 2011இல் 20 மில்லியன் டன்ன்னாக உயர்த்த முயற்சிக்குமாம். அதுவும் பற்றாது. அரசு வேறு வழியின்றி இரும்பு உற்பத்தியில் இருந்தாக வேண்டும். இதுவும் லாபகரமான தொழில்தான்.
குடி தண்ணீர் விநியோகம். நிச்சயமாக இங்கும் தேவை அதிகம், மூலதனம் மிக அதிகமாகத் தேவை. RoI நிச்சயம் நன்றாக இருக்கும்.
அரசு நேரிடையாக (அமைச்சகம் மூலமாக) விவசாய வளர்ச்சியில் ஈடுபடாமல் அரசுத்துறை நிறுவனங்கள் மூலமாக - கம்பெனிகள் மூலமாக - ஈடுபட வேண்டும். அரிசி, கோதுமை தானிய உற்பத்தியைப் பெருக்குவது, உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் விற்பது, அதன் மூலம் விவசாய வருவாயை அதிகரிப்பது மிகவும் அவசியம். தனியார்கள் உள்ளே நுழைந்தால் நன்றாக விட்டுக் கொடுக்கலாம். தனியார்கள் வரப்போவதில்லை எனும்போது அரசுதான் செய்ய வேண்டும் இந்த வேலையை. ஆனால் இதெல்லாம் நஷ்டம் கொடுக்கும் துறைகளல்ல. ஒரு அமைச்சகத்தின் IAS அதிகாரி மூலம் இதெல்லாம் செய்யப்பட்டால்தான் தொல்லையே. ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி என்றால், லாபம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு தானாகவே திறம்பட வேலைகள் நடக்கத் தொடங்கி விடும்.
இதுபோல நிச்சயமாக நாலைந்து துறைகளை எடுத்துக் கொள்ளலாம். தனியார்கள் வந்தாள் அவர்களையும் உள்ளே விடலாம். அப்படியும் நமக்கு இன்னமும் நிறைய நிறுவனங்களும், ஆட்களும் தேவைப்படும்!
இந்தத் துறைகளில் இருக்கும் தேவையைப் பற்றி சந்தேகமேயில்லை. எத்தனை பேர் கடை விரித்தாலும் தேவையைப் பூர்த்தி செய்வது பெரிய வேலை. ஆனால் மின்சாரம், இரும்பு, போன்ற உற்பத்திகளில் கிடைக்கும் லாபம் குடி தன்ணீர் / பாசன நீர் வினியோகத்தில் இருக்குமா; அப்படியில்லையென்றாலும் அரசு தொடர்ந்து இந்த மாதிரி விஷ்யங்களீல் செலவழிக்க வேண்டும்.
மற்றபடி, வெற்றியையும் லாபத்தையும் தீர்மானிப்பது திறமையான நிர்வாகம்தான் என்பதில் சந்தேகமில்லை. that is the bottomline.
Post a Comment