- நிறைய மைனாரிடி அல்லது பின் தங்கிய சமூகத்தினர்; நிறைய தமிழர்கள்; நிறைய இளைஞர்கள்; நிறைய பெண்கள்....? ம்... இதுதான் கொஞ்சம் இடிக்கிறது. 4 பெண்கள்தாம். ஆனாலும் 67க்கு 4 என்பது பரவாயில்லையோ?
எதைப் பற்றி சொல்கிறேன் என்று புரிந்திருக்குமே? வேறு என்ன? சற்றுமுன் பதவியேற்ற மன்மோஹன் மந்திரிசபைதான். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்து ஜனகணமன பாடும்போது இரண்டு பேர் - இரண்டு பேர் மட்டுமே - வாய்விட்டு பாடுவது கண்னில் பட்டது. ப. சிதம்பரம்; சுனில் தத். 
இன்று நான்; நாளை நீ; மறுபடி நான்; நாளை யாரோ - சக்கரம் சுழல்கிறது...... involve  ஆகாமல் அசோகா ஹாலில் உள்ள சுவராக, தள்ளி நின்று பார்க்கும்போது இதுதான் தோன்றிற்று. சதுரங்க காய்கள் நகர்த்தப்படுவது மாதிரி ஆங்காங்கே முகங்கள் மாறுகின்றன. இடமும் நிகழ்ச்சிகளும் அதே. 
சரி. புதிய மந்திரிகளுக்கு வாழ்த்துச்சொல்லுவோம். இந்தியா நிஜமாகவே ஒளிர ஆரம்பிக்கலாம். சாதாரண மக்களின், அடிமட்ட குடிமக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று நம்புவோம்.
Saturday, May 22, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment