Saturday, May 29, 2004

முதலீடு அமைச்சர்??

நிதி அமைச்சர் சிதம்பரம் walk the talk (ndtv) நிகழ்ச்சியில் சேகர் குப்தாவிடம், ரொம்பத் தீவிரமாக தங்கள் ஆட்சியின் பொருளாதார சீர்திருத்தங்களை விளக்கிக்கொண்டிருந்தார். ஏழைகள், மற்றும் நலிந்த துறைகளீல் மேல் அதிகம் கவனம் என்கிறீர்களே, என்ன இலவசமாக அள்ளி எடுத்துவிடப்போகிறீர்களா; திட்டங்களுக்கு பணம் எங்கிருந்து வரும் என்ற ரீதியில் கேட்கப்ட்ட கேள்விக்கு, நிதானமாக விளக்கினார். இலவசமாக ( Doling out) கொடுக்காமலேயே, வரிகளை சரியான முறையில் நிர்வகிப்பதன் மூலம் என்று சொன்னவர், எந்த வரிச் சுமையாக இருந்தாலும் அதைத் தாங்கக்கூடியவர்கள்மேல்தான் இருக்க வேண்டுமே தவிர, தாங்க முடியாதவ்ர்கள் மேல் மேலும் சுமத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மக்களின் அடிப்படை வசதிகளில் செலவழிக்க வேண்டும் என்ற கருத்தில் என்ன தவறு இருக்க முடியும் என்ற அவர், உதாரணத்துக்கு தண்ணீர் பிரச்சனையைக் காட்டினார். " ஒரு Mission" ஆர்வத்துடன் இந்தத் தண்ணீர் பிரச்சனைக்கு வழி காண வேண்டும் என்று சொன்னபோது கொஞ்ச நாள் முன்பு இதே வார்த்தையை உபயோகித்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று நான் எழுதியதைப் படித்துவிட்டார்(!!!!!!!!!- அட, ஏதோ கற்பனை பண்றதிலே என்னங்க கஷ்டம் ? :-) என்று சந்தோஷப்ப்ட்டேன்.

தான் ஒரு Investment Minister ( முந்தைய அரசின் Disinvestment அமைச்சுக்கு நேர் மாறாக !!!) என்று சொல்லிக்கொள்கிற இவர், தன் எல்லா பேட்டிகளிலும் புதிய அரசு தொழில் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தபோகிறது என்று சொல்லி வருகிறார். " நிறைய பேர் - இளைஞர்கள் தொழில்களில் நிறைய முதலீடு செய்வதைக் காண விரும்புகிறேன். இன்னும் நிறைய டாட்டாக்களும், பிர்லாக்களும் வர வேண்டும். இப்படி புதிதாக தொழில்கள் தொடங்க ஒரு பசி இருக்க வேண்டும். I want lot of youngman to have the hunger to start new ventures. If you have 10 business, don't sit with them; Go and start 11th one." இப்படி தொழில் அதிகமாவதுதான் வேலை வாய்ப்புகள் பெருக வழி செய்யும் என்று அவர் தீர்மானமாக நம்புகிறார். அவர் கருத்தில் நியாயம் உள்ளது.
இன்று இந்தியாவின் மொத்த வருமானத்தில் உற்பத்தி - manufacturing - மூலமாக வருவதைவிட சேவைகள் ( Service) மூலமே வருமானம் அதிகம். ஆனால் ஒரு ஸ்திரமான, முழுமையான பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி வளர்வது மிக முக்கியம்.

இந்த விதத்தில் பார்த்தால், இந்த கட்டுரை ஊக்கமளிப்பதாக இருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் வால் மார்ட் தொடர் இந்தியாவிலிருந்து 1 பில்லியன் டாலர் பெறுமான உற்பத்திப் பொருட்களை வாங்குகிறதாம். உடம்பு துடைக்கும் துண்டிலிருந்து, ஆடைகள், துணிகள், ஷ¥, விலையுயர்ந்த டைமண்ட் கற்கள், இறால் ( Shrimps??) என்று நிறைய வாங்கி தங்கள் கடைகளில் விற்கிறதாம். திருப்பூர் பனியன்கள் மற்றும் இதர துணிகளுக்கு மேல் நாடுகளில் என்றுமே ஒரு மதிப்பு உண்டு. இன்று உலக வர்த்தக அரங்குகளில் திருப்பூர் நெசவு தொழில் பற்றி நிறையவே அலசப்ப்டுகின்றன. பஞ்சாபில் உள்ள பர்னாலா என்கிற துணிகள் வியாபாரம் செய்பவர் ரூபாய் 200 கோடிக்கு துணிகள் விற்று, வால் மார்ட் வழங்கும், சர்வதேச சப்ளையர் விருதை வாங்கியிருக்கிறார். அதுபோல் கான்பூர் ஷ¥ உற்பத்தியாளர்களுக்கும் நல்ல வியாபாரம். விலயுயர்ந்த கற்கள் விற்பனை சுமார் 400 மில்லியன் டாலர்கள். வழக்கமாக சர்வதே சந்தையில் ஹாங்காங் டைமண்ட்கள்தாம் விசேஷம். ஆனால் இன்று இந்திய டைமண்ட்களுக்கு சர்வதேச சந்தையில் விற்பனை கூடியதால் ஹாங்காங் வியாப்ர்ரம் எல்லாம் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக சொல்ல்கிறார்கள். உலகளாவிய வர்த்தக முறையின் அனுகூலங்கள். வெளி நாட்டு உற்பத்திகள் இந்தியாவுக்குள் வந்து நம் தொழில்கள் நசிக்கின்றன என்பதற்கு மாறாக, நம் உற்பத்திகள் வெளியே சென்று நம் உற்பத்தி பெருக ஒரு வாய்ப்பு. உற்பத்தி பெருகும்போது பொதுவாக ஒன்றை ஒன்று சார்ந்த பல பொருட்களின் தேவை அதிகமாகும். உற்பத்திகள் அதிகரிக்கும்போது வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும், வறுமை ஒழியும்.

2 comments:

Badri Seshadri said...

நான் இந்த 'walk the talk' நிகழ்ச்சி பார்த்தேன். ஷேகர் குப்தா கேட்ட கேள்விகளுக்கு சிதம்பரம் பொறுமையாகவே பதில் சொன்னார். ஆனால் எங்கிருந்து புதிய முதலீடுகளுக்கு அரசு பணம் கொண்டு வரும் என்ற கேள்விக்கு மழுப்பலாகத்தான் பதில் சொன்னார். என் கருத்தில் disinvestment மூலம் நமக்குத் தேவையான அளவு முதலீட்டுப் பணத்தைக் கொண்டு வர இயலாது. உதாரணத்துக்கு கல்பாக்கம் புதிய PFBR அணு மின் உற்பத்தி 500 MWe கட்ட ரூ. 3,400 கோடி தேவைப்படுகிறது. குடிநீர் வழங்க கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. நதிநீர் இணைப்பு போன்ற திட்டத்திற்கு ரூ. 560,000 கோடி அளவிற்கு தேவையாகும் என்கின்றனர்.

ஆனால் இதற்குத் தேவையான பணம் பொதுமக்களிடம் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நான் சொல்வது சாதாரண நடுத்தர, மேல் நடுத்தர வர்க்க மக்கள். ஆனால் இவர்கள் இந்தப் பணத்தை நேரடியாக முதலீடு செய்ய மாட்டார்கள். அதற்கு அரசு புதுமையான instrumentsஐக் கொண்டு வரலாம். உதாரணத்திற்கு அரசு ஒரு மின்சார உற்பத்தி பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கலாம். அதற்குத் தேவையாக கொஞ்சம் பணத்தை equity ஆகவும், மீதியை பொதுமக்களிடம் (Indians & NRIs) இருந்து optionally convertible bonds (OCB) மூலமாகப் பெறலாம். இதன்மூலம் பொதுமக்கள் பணத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய அளவு மின்சாரம் வழங்க முற்படலாம். தயக்கம் இருப்பவர்கள் OCB முற்றும்போது அதைக்கொடுத்து விட்டு அரசு உத்தரவாதத்துடன் கிடைக்கும் பணத்தை வட்டியும் முதலுமாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை இருப்பவர்கள் OCBஐப் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம்.

இங்கு கூட 'கறுப்புப் பணத்தை' வெளிக்கொணர, அடிப்படைக் கட்டுமான வேலைகளுக்காக அரசு வெளியிடும் OCBக்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்று வருமான வரித்துறை கேள்வி கேட்காது என்று அறிவிக்கலாம். ஆனால் OCB mature ஆகும்போது உள்ள capital gainsஉக்கு வரி விதிக்கப்படும் (long term capital gains tax) என்று சொல்லலாம்.

பொதுமக்களிடம் மூலதனம் மூலமாகவே பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டுமான வசதிகளைச் செய்வதை இந்த அரசு செய்தால் அதனால் அனைவருக்கும் நன்மை.

ஆனால் எனக்கு மாநில அரசுகளின் மீது நம்பிக்கை இல்லை. மத்திய அரசு செய்தால் மட்டுமே நம்பி இறங்கலாம் என்பது என் கருத்து.

இதில் ஏன் வெறும் infrastructure bonds ஆக மட்டுமே வெளியிடக்கூடாது என்று கேள்வி எழலாம். OCB ஆக இருந்தால் அதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்குப் பெரும் பயன் உண்டு - அந்த நிறுவனம் லாபகரமாக இயங்குமென்றால். OCBஐ பங்குகளாக மாற்றும்போது நிறுவனத்தின் debt-equity ratio குறையும். அதனால் மேற்கொண்டு கடன் வாங்க வசதி பிறக்கும். குறைந்தது 70% பேராவது OCBஐப் பங்குகளாக மாற்றுவர் என்று கருதலாம். அரசு 25-30% பங்குகள் வைத்திருந்தும் அந்நிறுவனத்தின் management controlஐத் தக்க வைத்துக் கொள்ளலாம்.

Oops! உங்களில் பதிவின் கீழ் ஒரு புராணமே எழுதி விட்டேன். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

Aruna Srinivasan said...

பத்ரி,

என் பதிலை மெயின் பக்கத்தில் ( entry 30th May) எழுதியுள்ளேன். மிக நீளமாக இருந்ததால் இது எளிதாக இருக்கும் என்று தோன்றிற்று.