எண்ணிய முடிதல் வேண்டும்;
நல்லவே யெண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்மு னிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்!
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினிலே யினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்;
காரியத்திலுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.
என்ன திடீரென்று ஒரே பிரார்த்தனை மயம் என்று யோசிக்கிறீர்களா? எல்லாம் தேர்தல் ம(�)யம்தான்! வாக்காளர்களை நோக்கி அரசியல் படைகள் நகரும் இந்த வேளையில் நமக்கு தெளிந்த நல்லறிவு வேண்டுமே, என்றும் உண்மை நின்றிட வேண்டுமே என்று ஒரு ஆதங்கம்தான். தேசத்தைப் பற்றி மனசில் எழும் கவலைகளையும் பிரார்த்தனைகளையும் அழுத்தமாகவும் எளிமையாகவும் சொல்லத் தெரியவில்லையே எனக்கு !! அதான் இருக்கவே இருக்கிறார் நம்ம மகா கவி !!
Tuesday, February 10, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment