இன்று பெண்கள் கொடிகட்டி பறக்காத துறையே கிடையாது என்பது பட்டிமன்றமெல்லாம் முழங்கும் ஒரு சமாசாரம்தான். அதேபோல், co-education என்பதும் இன்று சாதாரணமான விஷயம். ஆனால் இன்றும் கூட ஆண்கள் கல்லூரி என்றும் பெண்கள் கல்லூரி என்றும் தனித்தனியாக செயல்படும் கல்வி வளாகங்களும் இருக்கின்றன.
ஆனால் இப்போ நான் கேட்கப்போவது ஒரு சுவாரசியமான ( எக்குத்தப்பான?!) கேள்வி! ஆண்களுக்கான கல்லூரிகளில் பெண்கள் கழிப்பறை இருப்பது அவசியமா இல்லையா?
இல்லை என்று சிலர் கட்டிட அமைப்பார்கள் நினைத்தார்கள் போலும்.
சமீபத்தில் ஆண்கள் கல்லூரி ஒன்றுக்கு விருந்தினராக சென்ற என் தோழி ஒருவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. " அட, பிரின்ஸிபால், மற்றும் ஆபீஸ் அஸிஸிஸ்டெண்ட் எல்லோருமே ஆண்களாகவே இருக்கட்டுமே? பெண்களுக்கு என்று ஒன்று கட்டிவைத்திருந்தால் என்னவாம்? அப்புறம் ஏதோ சமாளித்தார்கள் என்று வைச்சுக்கோ. ஆனாலும் இதென்ன மனோபாவம்? " என்று பொருமிவிட்டார்."
அவர் முடித்தவுடன் எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் - ரயில்வே ஸ்டேஷன் அறைகளில் ஒரு முக்காடும் ஒரு தொப்பியும் போட்டிருக்கும் - வித்தியாசம் தெரிவதற்காக. என் தோழியைக் கேட்டேன்; 'அதுதான் படம் போட்டிருக்குமே? முக்காடு போட்ட படத்தை வெகு நேரம் தேடினாயோ' என்று.
அவர் கையை ஓங்குவதற்குள் நான் அங்கே இருந்தால்தானே?
Monday, February 09, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment