Saturday, February 21, 2004

தினத்தந்தியில் எகனாமிக் டைம்ஸ் !!

தமிழ் பத்திரிகை உலகில் வணிக செய்திகளுக்கு அவ்வளவாக மவுசு இல்லை என்று நினைத்திருந்தீர்களானால் உங்கள் கருத்தை மாற்றிகொள்ளுங்கள்.

ஆங்கில வணிக தினசரி எகனாமிக் டைம்ஸ�டன் தினத்தந்தி செய்து கொண்டுள்ள ஒரு உடன்பாட்டின்படி தினத்தந்தியில் வணிக பக்கங்கள் வர ஆரம்பித்துள்ளன. தனிபட்ட முறையில் வணிக பத்திரிகைகள் அவ்வளவாக எடுபடாத நிலையில் தினத்தந்தியின் இந்த திடீர் வியாபார யுக்தி எப்படி வெற்றிகரமாக இருக்குமாம்?

" இந்த வணிக பக்கங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கிறது" என்கிறார் இந்த வணிக செய்திகளின் எடிட்டர் ஸ்ரீதரன். " இந்திய வணிகர்கள் சீனாவைக் கண்டு ஏன் பயப்பட வேண்டாம்" போன்ற செய்தி அலசல்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றனவாம்.

பி.கு: சென்னை எகனாமிக் டைம்ஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கும் காவலர்களும் ( Security Guards) தினத்தந்தியில் இந்த வணிக செய்திகள் வர ஆரம்பித்தபின்னர்தான் 'தங்கள்' பத்த்ரிகையில் என்ன செய்தி வந்துள்ளது என்று இப்போது தமிழில் படித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்களாம் :-)

பி.கு.: 2: வணிக செய்திகள் பக்கங்கள் கொடுப்பதின் லாப அனுகூலங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்; எகனாமிக் டைம்ஸின் கருத்துக்கள் இனி grassroot மக்கள் வரை பாயும் என்பதும் அதன் தாக்கம் ஓரளவு பரவலாக இருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

Wednesday, February 18, 2004

அதைக்கு மீசை முளைச்சா? சித்தப்பா !!!

கிரிக்கெட் வீரர் சித்து பிஜேபியில் சேர்ந்தபோது கொடுத்த பேட்டி. முத்துக்களாக உதிர்த்துள்ளார். மாதிரிக்கு இங்கே:

" The swan and crane both live in the pond. While the former looks for jewels, the latter looks for fish. A party that does not progress is not a party. Lot of developmental work has been done under Prime Minister Vajpayee's leadership. He is a man of principles."

"The fragrance of flowers travels along the way in which the wind blows, but the fragrance of human goodness spreads in all directions."

" How long were they working on you to join the BJP?

This is not a fair question. It has to be a mutual decision where both parties benefit. I am not here for any benefit. Let me tell you that my joining the BJP party is totally unconditional. I have come here as a simple worker. I have got everything that God could have granted anyone.

Have you cooled down as a person?

Anger is like temporary madness; you got to restrain it. The more you restrain it the more wisdom you gain. The more I meditate I get calmer and calmer. Everyone makes mistakes. Kisi ko mukammal jahan nahin milta; kisi ko zameen ya aasman nahin milta [No one gets the entire world; some get neither the land or the sky].

Nobody is perfect my friend. You are on a learning curve; you learn with each mistake.

Will you contest the Patiala Lok Sabha seat?

There is no question of ifs. If my aunty had been a man she would have been my uncle. Until or unless someone gives me that responsibility I shall not comment.

I said my coming is unconditional. There is no question of asking something. These ifs and buts do not work"

முழுவதும் இங்கே படியுங்கள்.


Sunday, February 15, 2004

"சேர்மேன் சாமியே துணை".

சாலையில் போகும்போது ஒரு லாரியின் முகப்பில் தெரிந்த "ஸ்லோகம்" !!! ஹ்ம்ம்... நன்றி வெளிப்படும் விதங்கள்தாம் எத்தனைவிதம் ??

Tuesday, February 10, 2004

எண்ணிய முடிதல் வேண்டும்;
நல்லவே யெண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்மு னிங்கு
நசித்திடல் வேண்டு மன்னாய்!


மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினிலே யினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்;
காரியத்திலுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம் ஓம் ஓம் ஓம்.

என்ன திடீரென்று ஒரே பிரார்த்தனை மயம் என்று யோசிக்கிறீர்களா? எல்லாம் தேர்தல் ம(�)யம்தான்! வாக்காளர்களை நோக்கி அரசியல் படைகள் நகரும் இந்த வேளையில் நமக்கு தெளிந்த நல்லறிவு வேண்டுமே, என்றும் உண்மை நின்றிட வேண்டுமே என்று ஒரு ஆதங்கம்தான். தேசத்தைப் பற்றி மனசில் எழும் கவலைகளையும் பிரார்த்தனைகளையும் அழுத்தமாகவும் எளிமையாகவும் சொல்லத் தெரியவில்லையே எனக்கு !! அதான் இருக்கவே இருக்கிறார் நம்ம மகா கவி !!

Monday, February 09, 2004

இன்று பெண்கள் கொடிகட்டி பறக்காத துறையே கிடையாது என்பது பட்டிமன்றமெல்லாம் முழங்கும் ஒரு சமாசாரம்தான். அதேபோல், co-education என்பதும் இன்று சாதாரணமான விஷயம். ஆனால் இன்றும் கூட ஆண்கள் கல்லூரி என்றும் பெண்கள் கல்லூரி என்றும் தனித்தனியாக செயல்படும் கல்வி வளாகங்களும் இருக்கின்றன.

ஆனால் இப்போ நான் கேட்கப்போவது ஒரு சுவாரசியமான ( எக்குத்தப்பான?!) கேள்வி! ஆண்களுக்கான கல்லூரிகளில் பெண்கள் கழிப்பறை இருப்பது அவசியமா இல்லையா?

இல்லை என்று சிலர் கட்டிட அமைப்பார்கள் நினைத்தார்கள் போலும்.

சமீபத்தில் ஆண்கள் கல்லூரி ஒன்றுக்கு விருந்தினராக சென்ற என் தோழி ஒருவருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. " அட, பிரின்ஸிபால், மற்றும் ஆபீஸ் அஸிஸிஸ்டெண்ட் எல்லோருமே ஆண்களாகவே இருக்கட்டுமே? பெண்களுக்கு என்று ஒன்று கட்டிவைத்திருந்தால் என்னவாம்? அப்புறம் ஏதோ சமாளித்தார்கள் என்று வைச்சுக்கோ. ஆனாலும் இதென்ன மனோபாவம்? " என்று பொருமிவிட்டார்."

அவர் முடித்தவுடன் எனக்குள் ஒரு சின்ன சந்தேகம் - ரயில்வே ஸ்டேஷன் அறைகளில் ஒரு முக்காடும் ஒரு தொப்பியும் போட்டிருக்கும் - வித்தியாசம் தெரிவதற்காக. என் தோழியைக் கேட்டேன்; 'அதுதான் படம் போட்டிருக்குமே? முக்காடு போட்ட படத்தை வெகு நேரம் தேடினாயோ' என்று.

அவர் கையை ஓங்குவதற்குள் நான் அங்கே இருந்தால்தானே?