Monday, December 18, 2006

இமாலயத்தில் ஒரு சிம்மாசனம்

என் பழைய - 1986 - 89 - ஆல்பத்திலிருந்து சில படங்கள்.




பூடானின் தலைநகரம் திம்புவின் ஒரே பிரதான வீதி. ( உலகிலேயே டிராபிக் சிக்னல் இல்லாத ஒரே தலைநகரம்). கடல் மட்டத்திலிருந்து 7656 அடி உயரத்தில் உள்ளது.

________________________________

திம்புவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான டிசைனில் - பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு இருக்க இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அழகான பூக்களும் - புத்த மத அடையாளங்களும் பல நிறங்களில் வரையப் பட்டிருக்கும். இங்கே பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் ஒரு சிறப்பு - அவை யாவும் ஆணிகள் இல்லாமலேயே எழுப்பப்பட்டுள்ளன.
____________________________________


திம்புவின் Central Business District
________________________________


ஒரு பனிப்படர்ந்த மலையின் மேலே..... நின்று கொண்டிருப்பது? சாட்சாத் நானேதான் :-)
________________________________


குறுக்கும் நெடுக்கும் சள சளவென்று குளுமையாக ஓடிக்கொண்டிருக்கும் "திம்பு சூ". சூ என்றால் ஜோங்கா (Dzonka) மொழியில் நதி.
_________________________________



ஒரு தேசீய அணி வகுப்பு. தேசீய மற்றும் மத சம்பந்தமான விழாக்களில் இபடி பொது இடங்களில் அணிவகுப்பு அல்லது பாரம்பரிய நடனங்களில் மக்கள் பங்கு கொள்வது சகஜம். பெண்களுக்கு இங்கே முன்னுரிமை. பெண் வழி வாரிசு முறை. ஆணும் பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்டோரை மணப்பது இயல்பான வழக்கம் இந்த சமூகத்தில். குழந்தைகள் பிறந்த பின்பு திருமணம் செய்துகொள்வதும் உண்டு. இங்கே இவை இயல்பான சமூக வழக்கம். இன்று ஓரளவு மாறி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
______________________________________



மோரீஷியஸ் அதிபர் 1986ல் பூடானுக்கு வருகை தந்தபோது.

_________________________________________

வில், அம்பு விளையாட்டு முக்கிய தேசீய விளையாட்டு. ஞாயிற்றுக் கிழமையானால் அவரவர் வில், அம்பு சகிதம் மைதானம் பக்கம் கிளம்பிவிடுவார்கள். பாரம்பரிய உடை அவசியம். ( கனமாக, நடுக்கும் குளிருக்கு இதமாக நன்றாகதான் இருக்கும்). உல்லாசப்பயணிகள் வருகை கட்டுப்படுத்தபட்டு உள்ளது. இதர நாடுகளில் பாரம்பரியம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை கவனித்து, மன்னர் தீர்மானமாக தன் நாட்டின் இயற்கையும் பாரம்பரியமும் அழிந்து விடாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது.

_________________________________

ஞாயிறு தோறும் கூடும் சந்தை - காய்கறிகளிலிருந்து, குளிர் உடைகள், மற்றும் வீட்டுக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் சந்தையில் பேரம் பேசி வாங்கலாம்.

அதுசரி, ஏன் திடீரென்று பூடான் படங்கள் இங்கே?


நேற்றைய செய்தி: பூடானின் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக் தன் மகனுக்கு அரியணையை கொடுத்துவிட்டார்.

"முக்கியமான" கொசுறு செய்தி: புதிய அரசர் நாம்கேல் வாங்சுக், திம்புவில் லுங்டன்ஜாம்பா (Lungtenzampa Junior High School ) பள்ளியில் என் இளைய மகனின் வகுப்புத்தோழன்(ர்). :-)

மனம் பின்னோக்கி அசைபோட...... விளைவு - இந்த படங்கள். இந்த டிஜிடல் காலத்திலும், 1970களில் வாங்கிய யாஷிகா காமிராவிற்கு இணை இல்லை - என்னைப் பொறுத்தவரையில் :-)

15 comments:

தருமி said...

Royal connections..?
:)

Aruna Srinivasan said...

தருமி,

Exactly :-) "அரசர்களெல்லாம் எனக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதா? அல்லது ஒரு அரசர் என் பால்யத் தோழன் என்று சொல்வதா, அல்லது என் பால்யத் தோழன் இன்று ஒரு அரசன் என்று சொல்வதா" - செய்தியைப் படித்த மகனின் இன்றைய தலைபோகிற பிரச்சனை. ( அன்று அவர்கள் இரண்டாம் வகுப்பு தோழர்கள். முகம் கூட ஞாபகம் இருக்குமா என்று கேளுங்கள் :-)

இலவசக்கொத்தனார் said...

நல்ல படங்கள். ரொம்ப நாள் இணைய இணைப்பே இல்லாமல். இப்போ கொஞ்ச நாள் முன்னாடிதான் வந்துதாம். எங்கையோ படிச்சது.

Aruna Srinivasan said...

இ.கொ.

//ரொம்ப நாள் இணைய இணைப்பே இல்லாமல். இப்போ கொஞ்ச நாள் முன்னாடிதான் வந்துதாம். எங்கையோ படிச்சது. //

ரொம்ப சரி. நாங்கள் இருந்தப்போ டிவி கூட கிடையாது. ஒரே ஒரு ஆங்கில நாளிதழ். அதன் ஆசிரியரும் என் எதிர்வீட்டில்தான் இருந்தார். இப்படி கட்டுபாடுகள் மூலம் ஒரு நாட்டில் பாரம்பரியத்தை கட்டி காக்க முடியுமா என்பது என்னைப் பொறுத்தவரையில் கேள்விக்குறிதான். ஆனால் இந்த நாட்டில் இயற்கையெழில் அப்படியே சிதையாமல் - நூதன சாதனங்களின் பாதிப்பு இல்லாமல் - Pristine ஆக, செழிப்பாக இருப்பது என்னவோ நிஜம்.

மதுமிதா said...

படங்களின் அரசி:-)

வல்லிசிம்ஹன் said...

அருணா,அழகான படங்கள், அதைவிட அழகான நடையில் வர்ணனை.
என்ன இருந்தாலும் நம்ம பள்ளித் தமிழ்;-) தமிழ்தான்.
நான் இங்கே என் காலரைத் தூக்கி விட்டுக்கலாம்.(ஏனெனில் முக்காவாசி (சிகாகோவில் ) காலரோடுதான் ஸ்வெட்டர்)ஜிக்மே வான் சூக்கின் புதல்வர் எங்க பள்ளிக்கூடத்தில் படித்த அருணாவின் மகனோடு படித்தாராம்!!

Anonymous said...

இந்த நாட்டைப் பற்றியும்,நகரத்தைப் பற்றியும் தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.பாரம்பரியம் மிக்க பௌத்த ஆலயங்கள்; அழகிய ஓவிய வேலைப்பாடுகள்;முகமூடிகள்; நீண்ட குழல்கள்; மிக வித்யாசமான உடையணிந்த மதகுருக்கள்;வண்ணமயமாக இருக்கும்.
உங்கள் படங்களும் வித்யாசமாக உள்ளன!!!இப்போது இந்த இடங்கள் மாறியிருக்குமென நினைக்கிறேன்.
யோகன் பாரிஸ்

Aruna Srinivasan said...

மது, பட்டம் கொடுத்துட்டீங்க; சிம்மாசனம்தான் எங்கேன்னு தேடணும் :-)

ரேவதி, 6 degree connection கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போ பூடான் மன்னருக்கு நாம் ஒரு 6 degree தொடர்பு போட்டுடலாம் போலிருக்கே....!

யோகன் பாரிஸ், சமீபத்தில் திம்பு சென்று வந்த தெரிந்தவர்கள் விவரம் படி, நிறைய ஹோட்டல்கள் எழுந்துள்ளனவாம்; டிவி / இணையம் என்று மாறுதல்கள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும், நேபாளம் மற்றும் இந்திய மலை நகரங்கள் போல் ஆகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை எழத்தான் செய்கிறது.

Boston Bala said...

புத்தர் கோவில்களும் இருக்கிறது?

Aruna Srinivasan said...

பாலா,

//புத்தர் கோவில்களும் இருக்கிறது? //
இதென்ன, இப்படி கேட்டுட்டீங்க!!

புத்தர் கோவில் படம் காமிக்காம ஒரு பூடான் பதிவா என்ற கேள்வி தொக்கி நிற்கிறதோ ? :-)

ம்ம்.... புத்தர் கோவில் படங்கள் கொஞ்சம் அதிகமாகவே மங்கியும், கலங்கலாக இருந்தது. அதுக்கென்ன? கொஞ்சம் பொறுங்க - இதோ போய் மறுபடி தேடியெடுத்து சேர்த்துட்டாப் போச்சு :-)

Anonymous said...

putanil mannar maari viddar .
angu todagiya ilankai amaithi pessukku mudivu eppothu?

டி.அருள் எழிலன் said...

உங்களின் புகைப்படங்கள் மிகவும் அழகான சிபியா டோனில் இருக்கிறது.நான் பூடானை பார்த்ததில்லை.ஈழத்தில் அமைதி ஏற்பட இந்தியா எடுத்துவைத்த முதல் முயர்ச்சி பூடான் தலைநகர் திம்புவில் இருந்துகான் தொடங்குகிறது.ஆயுதங்களாம் பேசிக்கொண்டிருந்த இரு தரப்பையும் பேச்சுவார்த்தை மேஜைக்கு அழைத்து வந்து சந்கிக்க வைத்த இடம் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு என்பதால் திம்புவையும் பூடானையும் மறக்க முடியாது.நான் ஒரு பத்திரிகையாளன் அவளவுதான்.

Meerambikai said...

புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக உள்ளன.

ஆகிரா

Anonymous said...

i am asath

is it history of Bhutan ...

why r u tell this story ....


apart from thimpu discussion what is role of bhutan in left movement ? describe if you know ...

Anonymous said...

நல்ல பதிவு.