Monday, May 08, 2006

Exit Poll

Exit Poll கணிப்புகள்

திமுக கூட்டணிக்கு :

ஸ்டார் நியூஸ் - 175

டைம்ஸ் நௌ - ஹன்ஸா - 150

சிஎன்.என் - ஹிந்து - 157 -167

அனேகமாக அனைவருமே சில வாரங்கள் முன் வெளியிட்டக் கருத்துக்கணிப்பில் வெவ்வேறு விதமாக சொல்லியிருந்தார்கள். நடுவில் என்னவாகியிருக்கும்? எப்படி மாற்றம் நிகழ்ந்திருக்கும்? கணிப்புகளும் ஜோசியம் போல்தான் என்பது என் கருத்து. விஞ்ஞானபூர்வமாக என்று இவற்றின் ஆதரவாளர்கள் சொன்னாலும் முடிவு / கணிப்பு தவறாக இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

இருந்தாலும் கணிப்புகளை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தமிழக மக்கள் மனதில் தேர்தல் ஆரம்பிக்கும் சமயம் இருந்த எண்ணங்களுக்கும் முடிவில் ஓட்டுச்சாவடிக்குப் போகும்போது இருந்த சிந்தனைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருந்திருக்கும் என்பது மட்டும் புரிகிறது. இலவச அறிவிப்புகளில் - அறிவித்தவை, அறிவித்த விதம், அறிவித்தவர்களின் மனோபாவம், அறிந்திருக்கும் அணுகுமுறைகள், இவற்றில் இதற்கான விடை இருக்கிறதோ? அல்லது வழக்கம்போல் மாற்றம் வேண்டி போடப்பட்ட வாக்குகளா?

ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. தேர்தலுக்கு இரண்டு நாள் முன்பிலிருந்து எல்லோருடைய கூவல்களும் - சப்தங்களும் மறைந்து, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து மக்கள் மனசுக்குள் யோசித்து, போடும் கணக்குதான் கடைசியில் மோட்சம் என்பது நிரூபிக்கப்படுகிறதோ?

11 ந் தேதி காலை 11 மணிக்கு இன்னும் எவ்வளவு மணி நேரம் இருக்கிறது ? :-)

பி.கு: தமிழ்மணத்தின் exit poll கிட்டதட்ட இதே முடிவைக் காண்பிப்பதால் தமிழ் வலைப்பதிவாளர்கள் தமிழக மக்களின் சரியான பிரதிபலிப்பு ( representative?) என்று எடுத்துக்கொள்ளலாமோ?

9 comments:

VSK said...

முதலில் வந்ததும் பொய்யே!
இப்போது வருவதும் பொய்யே!
11-ம் தேதி வருவதே மெய்!

Machi said...

//கணிப்புகளும் ஜோசியம் போல்தான் என்பது என் கருத்து.//
என் கருத்தும் அதுவே.

கருத்து கணிப்பு அறிவியல்பூர்வமானது என்றால் ஏன் ஒவ்வொரு கருத்து கணிப்பும் வேறுபட்ட முடிவுகளை சொல்கிறது?.

திமுக கூட்டணிக்கு ஆதரவாக பதிவான வாக்குகள் சதவீதத்தில்.

ஸ்டார் நியூஸ் - 74.78 %
டைம்ஸ் நௌ - ஹன்ஸா - 64.10 %
சிஎன்.என் - ஹிந்து - 67.09 % - 71.36 %
இது Exit poll results, not pre pool results.

தேர்தலின் போது கருத்து கணிப்பு என்பது பத்திரிக்கைகள் செய்யவேண்டிய ஒரு சடங்கு. அதற்குமேல் நாம் அதற்கு மதிப்பு கொடுக்க கூடாது. :-)

Anonymous said...

நானே தமிழ் மணத்தில் ஜாலியா எத்தனையோ வாட்டி கலைஞருக்கு கள்ள ஓட்டு போட்டேன். தமிழ் மணம் exit poll ரிசல்டை கண்டுக்காதீங்க அருணா. அது சும்மா ஜாலிக்கு

theevu said...

//, எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து மக்கள் மனசுக்குள் யோசித்து, போடும் கணக்குதான் கடைசியில் மோட்சம் என்பது நிரூபிக்கப்படுகிறதோ?//


உண்மையில் கடைசிநேரம்தானா அனைத்து வாக்காளர்களும் முடிவெடுக்கிறார்கள்?

மணியன் said...

கருத்துக் கணிப்பு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடினமானதே. கல்லூரி காலத்திலேயே நாங்கள் ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்னொருவருக்கு வாக்கு போடுவதுதான் இயல்பு. தேர்தல் சாவடி கொடுக்கும் அந்தரங்கத்தில் குத்திய குத்தை வெளியில் வந்து மாற்றித் தான் சொல்வார்கள். வலையுலகிலேயே அடையாளம் காட்டவிரும்பாததைப் போல தமிழர்கள் வெளியுலகில் பயங்கர hypocrites.

பி.கு: இப்போதைய கருத்துக்கணிப்பின் முடிவுகளால் கூறவில்லை.

Anonymous said...

ஆமாம். மணியன் அவர்களின் கருத்து ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதே. சென்ற நாடா. தேர்தலுக்கு முன் தேர்தலில் தமிழகம் இதைத்தான் செய்தது. இந்தியா டுடே - கூட தமிழர்களை (வழக்கம் போல) கேலி செய்ய அச்செயலைப் பயன்படுத்திக் கொண்டது.

பிரதீப் said...

எக்சிட் போல் பற்றிய ஜெயா டிவியின் கருத்துக் கணிப்பை இங்கே பாருங்கள்...

http://pradeepkt.blogspot.com/2006/05/blog-post.html

Aruna Srinivasan said...

எஸ்கே, பிரதீப், மணியன், குறும்பன், அனானி, கணிப்புகள் பலவிதமாக வருகின்றன என்பதைத்தான் நானும் சுட்டிக் காட்டியுள்ளேன். மற்றபடி அவற்றை அப்படியே நம்பிவிடுவோமா என்ன? :-)
The jury is still out there என்பதுதான் நான் சொல்வதும்.

"வழவழா....." நான் முன்பு சொன்னதில் இப்போதும் எந்தவித மாற்றமும் இல்லையே :-) இருந்தாலும் நினைவு வைத்துக்கொண்டு பழசை எடுத்துப் போட்டு நினைவூட்டியதற்கு நன்றி. :-)

தீவு, வாக்காளர்கள் எப்போது முடிவு செய்கிறார்கள் என்று யார் ஊகிக்க முடியும்? ஆனாலும் கடைசி நிமிடத்தில் படித்துவிட்டு போய் பரிட்சை எழுதி பாஸ் செய்தவர்களும் உண்டு இல்லையா? அதுபோல் கடைசி நிமிடத்தில் முடிவு செய்பவர்களும் / மாற்றிக்கொள்கிறவர்களும் இருக்கலாம்.

தருமி said...

Anonymous said...
நானே தமிழ் மணத்தில் ஜாலியா எத்தனையோ வாட்டி கலைஞருக்கு கள்ள ஓட்டு போட்டேன்.// தமிழ்மணத்திலும் இப்படி!
பொறுப்பற்ற இந்த மாதிரி அனானிகளையும், முகத்தை மறைப்பதால் ஏற்படும் இந்த நியாயமற்ற தைரியத்தையும் வெறுப்பதாலேயே இந்த முகம் மறைத்துத் திரியும் அனானிகளை நான் புறந்தள்ளச் சொல்லுகிறேன்.