
பூடானின் தலைநகரம் திம்புவின் ஒரே பிரதான வீதி. ( உலகிலேயே டிராபிக் சிக்னல் இல்லாத ஒரே தலைநகரம்). கடல் மட்டத்திலிருந்து 7656 அடி உயரத்தில் உள்ளது.
________________________________
திம்புவில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான டிசைனில் - பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு இருக்க இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அழகான பூக்களும் - புத்த மத அடையாளங்களும் பல நிறங்களில் வரையப் பட்டிருக்கும். இங்கே பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களிலும் ஒரு சிறப்பு - அவை யாவும் ஆணிகள் இல்லாமலேயே எழுப்பப்பட்டுள்ளன.____________________________________
 திம்புவின் Central Business District________________________________

ஒரு பனிப்படர்ந்த மலையின் மேலே..... நின்று கொண்டிருப்பது? சாட்சாத் நானேதான் :-)
________________________________
 குறுக்கும் நெடுக்கும் சள சளவென்று குளுமையாக ஓடிக்கொண்டிருக்கும் "திம்பு சூ". சூ என்றால் ஜோங்கா (Dzonka) மொழியில் நதி.
                                           _________________________________
 ஒரு தேசீய அணி வகுப்பு. தேசீய மற்றும் மத சம்பந்தமான விழாக்களில் இபடி பொது இடங்களில் அணிவகுப்பு அல்லது பாரம்பரிய நடனங்களில் மக்கள் பங்கு கொள்வது சகஜம். பெண்களுக்கு இங்கே முன்னுரிமை. பெண் வழி வாரிசு முறை. ஆணும் பெண்ணும் ஒன்றுக்கும் மேற்பட்டோரை மணப்பது இயல்பான வழக்கம் இந்த சமூகத்தில். குழந்தைகள் பிறந்த பின்பு திருமணம் செய்துகொள்வதும் உண்டு. இங்கே இவை இயல்பான சமூக வழக்கம். இன்று ஓரளவு மாறி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
                                   ______________________________________
 மோரீஷியஸ் அதிபர் 1986ல் பூடானுக்கு வருகை தந்தபோது. 
                              _________________________________________
 வில், அம்பு விளையாட்டு முக்கிய தேசீய விளையாட்டு. ஞாயிற்றுக் கிழமையானால் அவரவர் வில், அம்பு சகிதம் மைதானம் பக்கம் கிளம்பிவிடுவார்கள். பாரம்பரிய உடை அவசியம். ( கனமாக, நடுக்கும் குளிருக்கு இதமாக நன்றாகதான் இருக்கும்). உல்லாசப்பயணிகள் வருகை கட்டுப்படுத்தபட்டு உள்ளது. இதர நாடுகளில் பாரம்பரியம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதை கவனித்து, மன்னர் தீர்மானமாக தன் நாட்டின் இயற்கையும் பாரம்பரியமும் அழிந்து விடாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் கட்டுப்பாடுகளில் ஒன்று இது. 
                                        _________________________________
ஞாயிறு தோறும் கூடும் சந்தை - காய்கறிகளிலிருந்து, குளிர் உடைகள், மற்றும் வீட்டுக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் சந்தையில் பேரம் பேசி வாங்கலாம்.
அதுசரி, ஏன் திடீரென்று பூடான் படங்கள் இங்கே?
நேற்றைய செய்தி: பூடானின் அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக் தன் மகனுக்கு அரியணையை கொடுத்துவிட்டார். 
"முக்கியமான" கொசுறு செய்தி: புதிய அரசர் நாம்கேல் வாங்சுக், திம்புவில் லுங்டன்ஜாம்பா (Lungtenzampa Junior High School ) பள்ளியில் என் இளைய மகனின் வகுப்புத்தோழன்(ர்). :-)
மனம் பின்னோக்கி அசைபோட...... விளைவு - இந்த படங்கள். இந்த டிஜிடல் காலத்திலும், 1970களில் வாங்கிய யாஷிகா காமிராவிற்கு இணை இல்லை - என்னைப் பொறுத்தவரையில் :-)

