
தமிழ் வலைப்பதிவுகள் என்று ஒரு பட்டியல் ஆரம்பித்தபோது இருக்கும் சில வலைப்பதிவுகளைப் படிக்க சௌகரியமாக இருக்க என்று ஆரம்பித்ததாக ஒரு முறை மதி எழுதியிருந்தார். ஆரம்பத்தில் மொத்த எண்ணிக்கை 50 சொச்சம் என்றுதான் நினைக்கிறேன். கிட்டதட்ட அதே சமயம் live journal ரகத்தில் வலைப்பூ என்று தொடங்கி, வாராவாரம் ஒரு பதிவாளர் ஆசிரியராகப் பொறுப்பெடுத்து புதிய /பழைய பதிவுகளையெல்லாம் படித்துத் தன் கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டு வலைப்பூ ஒரு கலாய்க்கும் இடமாக இருந்தது.
முதலாம் வலைப்பூவும் ( Blogspot) இரண்டாம் வலைப்பூவும் ( Yarl) பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தது, பின்னர் தமிழ் மணமாக அவதாரம் எடுத்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது !!!!
தமிழ் வளர்ச்சியில் தமிழ் மணம் நிச்சயமாக ஒரு மைல்கல்.
தமிழ் மணம் மேலும் தழைத்தோங்கவும், அயராது இந்த முயற்சியில் வெற்றிகரமாக செயல்படும் காசிக்கும் மதிக்கும் மற்றும் அவர்களுடன் இணையாக செயல்படும் அனைவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்த்துக்கள்.
6 comments:
தமிழ்மணத்துக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நான் பதிவு போட நினைத்து தட்டிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் வலையேற்றி விட்டீர்கள். :O)
தமிழ்மணத்திற்கு மீண்டும் பிறந்தநாள் & வரும் நாட்களுக்கு வாழ்த்து.
நன்றி அருணா. (ஷ்ரேயாவுக்கும்)
அருணா,
எங்க வாழ்த்துக்களையும் சேர்த்துச் சொல்லுங்க.
காசிக்கும், பிற நிர்வாகிகளுக்கும், ஆலோசகர்களுக்கும் உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
திரு காசிக்கும், பிற நிர்வாகிகளுக்கும், ஆலோசகர்களுக்கும் , ததகவலை தங்கள் மூலம் அறிந்தமையால் தங்களுக்கும் நன்றி.வாழ்த்துக்கள்.
அருணா,
எங்க வாழ்த்துக்களையும் சேர்த்துச் சொல்லுங்க.
Post a Comment