Monday, July 11, 2005

வலைப்பதிவில் அவதூறு - தொடர்ச்சி...

தமிழ்மணத்தில் பின்னூட்டப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கும் அதே சமயத்தில் தமிழ்மணத்தை உருவாக்கி தன் நேரம், ஆர்வம் அத்தனையையும் செலவழிக்கும் நிர்வாகிகள் / ஆலோசகர்கள், காசி, மதி, பத்ரி, அன்பு, செல்வராஜ், பரி, சந்திரவதனா, மீனாக்ஸ், இவர்கள் அனைவரின் உழைப்பில் நான் குறை காண்பதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம். நான் மிகவும் மதிக்கும் சிலருள் இவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை என்று வந்தால் அதைச் சுட்டிக்காட்டுவதும் தீ£ர்வைத் தேடுவதும் கடமை என்று நினைக்கிறேன்.

ஒருவர் பதிவில் இன்னொருவர் இடும் பின்னூட்டங்களுக்கு நிர்வாகிகள் என்ன செய்வார்கள் என்பது ஒரு கேள்வி. நியாயமானதுதான். ஆனால் என் கேள்வி என்னவென்றால், குறைந்தபட்சம், அப்படி பின்னூட்டத்தில் அவதூறு கையாளுபவர்களின் பதிவுகளுக்குக் குறைந்த பட்சம் தடை போடலாமே?
இதில் பதிவாளர்களுக்கும் பங்கு உண்டு. எப்படி என்று மறந்து போயிருந்தால் நினைவூட்டுகிறேன்.

தமிழ்மணத்தில் உதவி / தகவல் என்று இருக்கும் இந்தச் சுட்டியின் கீழ்

உள்ள இந்தத் தகவலை இப்போது இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

" REPORTING ABUSES

If you have reason to believe that this site may be hosting content that is slanderous, illegal, incisive of dangerous acts, stories inciting sex, terror and violence, or in violation of copyright law, kindly contact e-mailing to .( காசியின் ஈமெயில் கொடுக்கப்பட்டுள்ளது ) Alternativley you may click the icon wherever displayed, and send the form shown there mentioning the reasons for the request. This will alert the administartors so that a quicker review is possible on such requests."

இந்த abuse விஷயங்களை நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கும்படி இந்த அறிவிப்பு சொல்கிறது. தமிழ்மணத்தை உருவாக்கிய காசி முன்யோசனையுடன் இப்படி ஒரு வசதியும் கொடுத்துள்ளார். ஆனால் இதில் பிரச்சனையிருக்கிறது.
இப்படி விரும்பத்தகாத பதிவுகள் வருவதைத் தடுக்க இருக்கும் "ban" முறை சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க, சில மாதங்கள் முன்பு என் பதிவு ஒன்றை நானே தடுத்துப் பார்த்தேன்.


என் வேண்டுகோள் நிர்வாகத்திற்குப் போய்ச் சேர்ந்து அந்த தடுக்கப்பட்ட என் பதிவு தமிழ்மணத்திலிருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டிருந்தது - தமிழ்மணத்திலிருந்துதான் - என் தளத்திலிருந்தல்ல.

இந்த தடை நன்றாக வேலை செய்கிறது என்றாலும் ஏன் யாரும் இதை உபயோகிக்கவில்லை என்று அன்று எழுதியிருந்தேன். ஒருவர் கூட அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இதில் ஒரு குறைபாடு. அல்லது எனக்குப் புரியவில்லை. இந்தத் தடுப்பு வசதி, முகப்பில் தெரியும் அந்தப் பத்து ஆக்கங்களுக்குதான். எண்ணிக்கை பத்தைத் தாண்டி தேதிவாரியான நிலைக்குப் போகும்போது அதில் இந்தத் தடுப்பு வசதி இல்லை. - அல்லது எனக்குத் தெரியவில்லை.

இன்றைக்கு ஒரு பதிவைப் பின்னோக்கி படித்தபோது அதில் வெளிப்பட்ட வார்த்தை வன்முறையைப் பார்த்து, இந்த "ban" அடையாளத்தைத் தேடினேன். கிடைக்கவில்லை. அதாவது ஒரு பதிவு abuse என்று தோன்றினால் அது தோன்றியவுடனே தடுக்கப்பட்டால் உண்டு. தேதிவாரி வரிசைக்குப் போய்விட்டால் முடியாது. என் முயற்சியில் தவறு இருந்தால் யாராவது முயன்று பார்த்து சொல்லுங்கள். Abuse என்று தோன்றும் ஒரு பதிவில் நீங்கள் இந்தத் தடையை உபயோத்துப் பாருங்களேன். இந்த என் பதிவையே கூட நீங்கள் "தடை" செய்யலாம். ஆனால் உங்கள் தடைக்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதை தமிழ்மண நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்க வேண்டும்!

8 comments:

அன்பு said...

ஒருவர் பதிவில் இன்னொருவர் இடும் பின்னூட்டங்களுக்கு நிர்வாகிகள் என்ன செய்வார்கள் என்பது ஒரு கேள்வி. நியாயமானதுதான். ஆனால் என் கேள்வி என்னவென்றால், குறைந்தபட்சம், அப்படி பின்னூட்டத்தில் அவதூறு கையாளுபவர்களின் பதிவுகளுக்குக் குறைந்த பட்சம் தடை போடலாமே?

அவதூறு செய்பவர்களின் பதிவையோ அவர்களது அடையாளத்தையோ காட்டினால்தானே அவ்வாறு செய்யமுடியும்...!?

மாயவரத்தான் said...

அவ்வாறு ஏற்கனவே தெரியப்படுத்தியும் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்களே என்பது தான் கேள்வியே அன்பு சார்.

மற்ற விஷயங்களிலெல்லாம் துள்ளிக் குதித்துக் கொண்டு வந்து 'கருத்து' சொல்பவர்கள் இந்தப் பிரச்னையில் மௌனம் சாதிப்பது ஏன் என்பதற்காவது பதில் சொல்லலாம் இல்லையா?! அட்லீஸ்ட்..
'அட... இதான் எங்க வேலையா?' என்றாவது பதில் கொடுக்கலாம் இல்லையா?!

Aruna Srinivasan said...

அன்பு, பார்த்தா, இந்தப் பதிவில் மேற்கோளிட்டுள்ள சட்ட அறிவிப்பு பக்கத்தில் உள்ள Report Abuse வரிகளின் உபயோகத்தை /அர்த்தத்தைத் தேடுகிறேன். உதவ முடியுமா?

அன்பு, விரும்பத்தகாத விதத்தில் பதிவு, அல்லது பின்னூட்டம் இடுபவர்களின் அடையாளம் இல்லாவிட்டாலும் எந்த அனாமத்துப் பெயரில் அந்தப் பதிவு வெளியாகிறதோ அதைத் தடுக்கலாம் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சமாட்சேபத்திற்குரிய பதிவை - அதுவும் தமிழ் மணத்திலிருந்துதான் நீக்க சொல்கிறேன் - நான் உதாரணம் காட்டிய என் பதிவைப்போல.

உதாரணத்திற்கு தனிமடலில் ஒரு பதிவின் சுட்டியை அனுப்புகிறேன். பாருங்கள்.

ஊதுகிற சங்கை ஊதுகிறேன். முயற்சிக்குக் கூட இடமில்லை என்று நீங்கள் கருதினால், அல்லது எனக்குத் தொழில் நுட்பம் புரியவில்லை என்று முடிவு கட்டினால், இத்துடன் இந்த விவாதத்தை நிறுத்திக்கொள்கிறேன்.

I rest my case.

Aruna Srinivasan said...

அரவிந்த், பார்த்தா, ஒரு விவாதம் திசை திரும்புகிறது என்று புரிந்தவுடனேயே அந்தப் பதிவில் உள்ள விரும்பத்தகாத பின்னூட்டங்களை பதிவாளர் பொறுப்பாக நீக்கினால் பிரச்சனையில்லை. ஆனால் அவரும் சேர்ந்து வாதத்தை வளர்க்கும்போது பதிவு நீக்கப்பட்டால் அது தவறில்லை என்பது என் கருத்து.

It is a question of whether the blogger is being harassed or is he/she inflaming the process deliberately in order to shoot the number of comments or for just the fun of spreading malice.

தவிர, நீங்கள் யாருமே நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லை. Report Abuse - to administrators என்ற அறிவிப்பு தமிழ்மணத்தில் இருக்கிறது. அதை எப்படி, எப்போது, யாரிடம், ஏன், எந்த விதத்தில் உபயோகிக்க வேண்டும்? அப்படி முறையிட்டால் என்ன நடவடிக்கை எடுகக்ப்படும் ( "REPORT ABUSE - ......This will alert the administartors so that a quicker review is possible on such requests."....) என்று யாராவது விளக்குகிறீர்களா? நன்றி

"....... தமிழ்மணம் என்பது, வேலை செய்து கொண்டு நேரம் கிடைக்கும் போடு செய்து வருகின்ற சேவை............"

என்பது நன்கு புரிந்துள்ளதால்தான் இவர்கள் சுயநலமில்லா சேவையை இத்தனை நாளும் மிகவும் மதித்து வருகிறேன் - இதில் என்றும் மாறுதல் இருக்காது. ஆனால் உபயோகிப்பாளர் என்ற முறையில் அவ்வப்போது யோசனைகள் சொன்னால் பெருங்குற்றம் இல்லையே?

neyvelivichu.blogspot.com said...

ஐ பி முகவரியை தடை செய்ய ஏதும் வழி இருக்கிறதா.. இப்போது பெரும்பாலானவர்கள் அப்படி அவதூறுப் பின்னூட்டமிடும் நபர்களின் ஐ பி யை கண்டு பிடிக்கமுடியும் என்று தெரிவிக்கிறார்களெ..

நேராக பிலாக்ஸ்பாட்டிலேயெ அந்த ஐ பி யிலிருந்து பின்னூட்டமிட தடை செய்ய வேண்டும். வலைப்பதிவாளருக்கு தடுக்கும் அதிகாரம் தரலாம். பலருக்கும் அதே நபர் துன்பம் தந்தால் பொதுவாக (globally) அவர் ஐ பி யைத் தடை செய்யலாம். இது பிளாக் ஸ்பாட் நடத்துபவர்கள் செய்யவேண்டிய மாறுதல். நம்மில் யாருக்காவது அது செய்யும் வழி தெரியுமானால் மென்பொருளை எழுதி அவர்களுக்கு வழங்கலாம்.

இதிலும் பிரச்சினைகள் வரலாம்..ஐ பி யை மறைத்துப் பதிவிடலாம் என்று யாரோ எழுதி இருந்தார்கல் நுனிப்புல் வலைப்பதிவில்.. அது போல் நடந்தால் ஐ பி தடை உதவாது..

என்னுடய 2 காசு..(my two cents). (இந்த அணிலின் பங்களிப்பு என்று சொல்லவேண்டுமா)

அன்புடன் விச்சு

Aruna Srinivasan said...

இந்தப் பதிவில் விரும்பத்தகாத பின்னூட்டங்கள் வருவதைத் தடுக்க கருத்துப் பெட்டியை restricted ஆக மாற்றியுள்ளேன். கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் தயவுசெய்து என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். பிரசுரிக்க தகுதியில்லாதவைத் தவிர மற்ற கருத்துக்களை இங்கே நானே பதிவு செய்கிறேன். நன்றி.

Aruna Srinivasan said...

தனிமடலில் அன்பு எழுதியிருந்த விளக்கம்.

"உங்கள் பதிவில் பின்னூடமிட முயற்சித்து அங்கு முடியாததால் இங்கே....

ஒரு விவாதம் திசை திரும்புகிறது என்று புரிந்தவுடனேயே அந்தப் பதிவில்
உள்ள விரும்பத்தகாத பின்னூட்டங்களை பதிவாளர் பொறுப்பாக நீக்கினால்
பிரச்சனையில்லை. ஆனால் அவரும் சேர்ந்து வாதத்தை வளர்க்கும்போது பதிவு
நீக்கப்பட்டால் அது தவறில்லை என்பது என் கருத்து.

( Aruna said)

நீங்கள் தொடர்ச்சியாக கவனித்திருந்தால்... யாருமே அவர்களுடைய
சொந்தப்பதிவில் எந்தவிதமான அபாண்டமும் செய்யவில்லை. பிறருடைய பதிவின்
பின்னூட்டமாகத்தான் - ஏதோ ஒரு பெயரில் சேற்றை வாரியிறைத்தனர். இதற்கு
முள்ளை முள்ளால் எடுக்க எத்தனித்து ஒரு சிலர் சேர்ந்து கிளம்பி சேறை
மாற்றி மாற்றி இறைத்தனர். இங்கே... சம்பந்தப்பட்ட பதிவர்கள் அவர்களுடைய
பதிவிலுள்ள அசிங்கமான பின்னூட்டத்தையோ அல்லது அந்தப் பதிவையோ நீக்குவது
எளிதா அல்லது தமிழ்மணத்தில் வேலையில்லாது இருப்பவர்கள் ஒவ்வொரு இங்கேயே
உட்காந்திருந்து யாராவது எங்கேயாவது எழுதியிருக்கிறார்களா,
பின்னூட்டமிட்டிருக்கின்றார்களா என்று தேவுடுகாப்பது எளிதா?

அதிலும் சம்பந்தப்பட்டர்வர்கள் அனைவரும், IP சேகரிக்கிறேன், பின்னூட்டம்
சேமிக்கிறேன், கையும் களவுமாய் பிடிப்பதற்கு அனாமதேயம் அனுமதிக்கிறேன்,
அவர்கள் கக்கிய வாந்தியை நான் மட்டுமல்லாமல் நாலுபேர் பார்க்க
விட்டுவைத்திருக்கிறேன் என்ற் தொனியில்தான் அறிவிப்பு
வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில், தமிழ்மணத்தின் வெட்டிக்கூட்டம் - இதில் புகுந்து என்ன
செய்யமுடியும். முன்னர் அந்த "தடை" செய்யக்கோரும் வசதியிருந்தது -
பின்னர் வடிவம் மாற்றியமைக்கப்பட்டபோது நீக்கப்பட்டுவிட்டது.

மேலும் நீங்கள் கேட்கும் Abuse Policyகூட தமிழ்மணத்தில் இருந்து அந்த
பதிவை தமிழ்மணத்தின் பட்டியிலில் இருந்துதான் நீக்க செய்ய முடியும்.
மற்றப்படி அந்தப்பதிவு, அந்த வலைப்பதிவில் இருக்கத்தான் செய்யும்.
வேண்டியவர்கள் அங்கு சென்று சண்டையிடமுடியும். ஆங்காங்கே அதற்கு சுட்டி
கொடுத்து ....இங்க சென்று பாத்தீங்களா... சண்டை நடக்குது என்று கண்ட
இடத்தில் பின்னூட்டமுடியும் அதைப்பற்றி ஒரு பதிவு போட்டு - வரும்
பின்னூட்டங்களால் அரட்டையடித்து - புண்ணியமிருந்தால் அங்கும் சகதிச்சண்டை
ஆரம்பிக்கமுடியும்.

அதனால்தான் நான் திரும்ப திரும்ப சொல்கிறேன்... இதில் மற்றவர்களை விட
சம்பந்தப்பட்டவர்கள்தான் அதிகம் செய்யமுடியும் - ஆனால் அதை ஆக்ககரமாக
செய்யாமல் - எண்ணெய் ஊற்றி திரியைத்தூண்டி விட்டு விட்டார்கள் - நெருப்பு
பரவிவிட்டது. கவலையே படாதீர்கள், உணர்ச்சிவயப்பட்வே தேவையில்லை... அதுவே
அணையும்...
.......
என்றென்றும் அன்புடன்,
அன்பு

எழுதவிட்ட இன்னொரு கருத்து...

> ஒரு விவாதம் திசை திரும்புகிறது என்று புரிந்தவுடனேயே அந்தப் பதிவில்
> உள்ள விரும்பத்தகாத பின்னூட்டங்களை பதிவாளர் பொறுப்பாக நீக்கினால்
> பிரச்சனையில்லை. ஆனால் அவரும் சேர்ந்து வாதத்தை வளர்க்கும்போது பதிவு
> நீக்கப்பட்டால் அது தவறில்லை என்பது என் கருத்து.


ஏற்கனவே நான் சொன்னதுபோல் இதை மென்மேலும் வளர்த்தவர்களே
சம்பந்தப்பட்டவர்கள்தான். அந்தநேரத்தில் நீங்கள் சொல்வதுபோல் தமிழ்மணம்
நிர்வாக அந்த பதிவை பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கினால்,

"நீக்கியதுக்கு விளக்கம் கேட்டு நாலு பதிவும், வேறு சில பதிவுகளை ஏன்
நீக்கவில்லை என்று மேலும் நாலு பதிவும் - இரண்டுக்கும் பின்னூட்டங்களாக
ஒரு சில நூறும்தான் எஞ்சும்."

இதுதான் இங்கே நடக்கிறது. அதைவிட்டு உங்களைப்போன்ற பெரியவர்கள் கருத்து
சொல்லலாம். அதைக்கேட்டு நடப்பவர்கள் இங்கு ஏன் இவ்வளவு பிரச்னை
செய்கின்றார்கள்... அதனால்தான் பலரும் துஷ்டனைக்கண்டு தூர
விலகுகிறார்கள்.

என்றென்றும் அன்புடன்,
அன்பு
Anbu. S
http://kuppai.blogspot.com

Aruna Srinivasan said...

நன்றி அன்பு. நீங்கள் கடைசியில் எழுதியிருப்பது புரியவில்லை. இருந்தாலும் நான் சொல்ல நினைத்தெல்லாம் சொல்லியாச்சு. இனி சொல்ல ஒன்றுமில்லை. விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி.