வலைப்பதிவுகளில் வாரியிறைக்கப்படும் தவிர்க்கப்படவேண்டிய மொழி வன்முறைகளைப் பற்றி என் கருத்து.
மறுபடியும் ஒருமுறை:
மாலன் பதிவில் நடந்த விவாதங்களை, மற்றும் சென்னையில் சமீபத்தில் நடந்த பதிவாளர்கள் சந்திப்பில் நடந்த கருத்துப் பரிமாற்றம், இவற்றைப் படித்ததில் எனக்கு - தொழில் நுட்பம் தெரியாத, ஆனால் பொதுவாக சமூக அக்கறை உள்ள - எனக்குத் தோன்றியது:
இது கவலைப்பட வேண்டிய விஷயம் அல்ல என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். ஏதோ ஒருமுறை இருமுறை எப்போதோ என்றால் அசிங்கம் என்று தூக்கிப்போட்டுவிட்டுப் போகலாம். ( சென்ற வாரம் கூட என் பதிவில் நிகழ்ந்தது.) ஆனால் ஒரு தெரு முழுக்க ஆங்காங்கே தினம் தினம் யாரோ வந்து அசிங்கம் செய்து கொண்டிருந்தால், தெருவாசிகள் ஒன்று சேர்ந்து என்ன செய்யலாம் என்று யோசிக்க மாட்டார்களா? இதில் என்ன தவறு? இணையத்தில் குப்பைகள் வருவதை அலட்சியம் செய்ய வேண்டுமென்றால் கூகிள்/ யாஹ¥, ஹாட்மெயில் போன்ற ஈமெயில் சாதனங்கள் ஏன் விதம் விதமாக எரிதம் வருவதைத் தடுக்க ஏதேதோ உபாயங்களை நமக்குத் தருகின்றன?
தமிழ்மணம், வெறும் பட்டியலிடும் இயந்திரம் அதனால் பலர் பலவிதமாக பின்னூட்டங்களைக் கையாளுவதைத் தடுப்பது சாத்தியமில்லை என்று பலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெறும் எண்ணிக்கைகளைக் குறிப்பிடும் இயந்திரம் என்றாலும் இதை எப்போது உருவாக்கி அமைத்தோமோ, ஏற்றுக்கொண்டோமோ, அப்போதே இது சரி/தவறு/ நல்லது/ கெட்டது என்று பாகுபடுத்தும் judgemental mode க்கு வந்துவிட்டது. இதன் பின்விளைவுகள் /இந்த judgements பதிவாளர்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் இதெல்லாம் தமிழ்மணத்துக்கு ஒரு கூடாரம் போன்ற தோற்றத்தைக் கொடுத்துவிட்டது.
நான் இதை ஒரு கூடாரம் என்ற அமைப்பாகதான் இப்போதைக்கு பார்க்கிறேன். ஆங்கில பதிவுகள் போல் பரந்துவிரிந்து அதிக அளவில் என்ணிக்கை இல்லாததால். என் ஆங்கில வலைப்பதிவிற்கு விஜயம் செய்பவர்கள் யார் யாரோ எப்போதோ. அதில் எல்லோருமே வழிப்போக்கர்கள் - பதிவுகளின் இயல்பான குணாதிசியப்படி.
எத்தனையோ ஆங்கிலப் பதிவுகளில் படு மோசமாக இருக்கிறது. ஆனால் அது என்னை இப்படி உறுத்தவில்லை. ஒரு வேளை அவற்றில் sense of belonging இல்லாமல் வழிப்போக்கராக, சம்பந்தம் இன்றி பார்ப்பதால் இருக்கலாம். ஆனால் தமிழ் மணத்தில் ஒரு நட்பு வட்டம் - சிறிய கூட்டமாக இருப்பதால் - உருவாகிறது. நிறைய புதியவர்களை எழுத ஊக்குவிக்க இப்போதைக்கு இது ஒரு சிறந்த முறையும்கூட. ஆங்கிலப் பதிவுகளின் குணதிசியங்களோடு இப்போதைக்கு ஒப்பிட முடியாது என்பதுதான் என் கருத்து. கூடாரம் என்ற அமைப்பாக நான் பார்ப்பதால்தான் கூடாரத்தை நிர்வகிப்பவர்கள் என்ற முறையில் நிர்வாகிகள் குறிக்கிட வேண்டும் என்று நினைக்கிறேன்.
சத்திரத்தில் இடம் கொடுத்து, தண்ணீர் வசதி இருக்கா, பல்பு எரிகிறதா என்று பார்ப்பது மட்டுமே நிர்வாகிகள் வேலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சத்திரத்தை உபயோகத்துக்கு எடுத்தவர்கள் என்ன செய்தாலும் சும்மா இருக்க முடியுமா? கல்யாணச் சத்திரத்திலே / ஹால்களிலே கூட நீங்கள் என்ன கூட்டம் Rules & Regulations என்று ஒரு போர்ட் தொங்க விடுவார்களே?
தமிழ்மணம் வெறும் பட்டியலிடுவதோடு நின்றிருந்தால் பிரச்சனையில்லை. ஒப்பீடு / மதிப்பீடு சாதனங்களை அகற்றினால் இது வெறும் இயந்திரம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். பதிவாளர்களை ஊக்குவிக்க வேண்டுமானால் சிறந்த 10 பதிவுகள் என்று குறிப்பிட்ட இடைவெளியில் நிர்வாகிகள் / அல்லது ஓட்டு முறையில் தேர்ந்தெடுத்துப் போடலாம். ( பின்னூட்ட அடிப்படையில் / மதிப்பீட்டில் அல்ல - பிளாக்கர் தளத்தில் செய்வதுபோல். இதனால் பின்னூட்ட என்ணிக்கையை அதிகரிக்க என்றே எழுதப்படுவதை தவிர்க்கலாம். பள்ளிக்கூடம் போல் உணர்வைத் தோற்றுவிக்கும் எண்ணிக்கை/ மதிப்பீடு இவற்றை நீக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.
any takers?
Monday, July 11, 2005
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
I welcome your views.
ஆமாம் அருணா,
நீங்கள் சொல்வது மெத்தச் சரி!!!
இடையில் ஏற்பட்ட சில பல குழப்பங்களால் எழுதணுமா என்று கூடச் சிலசமயம்
தோன்றுகிறது!!!!
என்றும் அன்புடன்,
துளசி.
சூப்பர் பதிவு..இப்போதைய சூழலில் இப்படியெல்லாம் எழுதினால் எங்கே தாங்களையும் சந்திக்கு இழுத்துவிடுவானோ என்ற பயத்தில் பலரும் இருக்கிறார்கள். இதுவரை வலைப்பூக்களில் பெரிய தாதா மாதிரி இமேஜ் வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட இது குறித்து வாய் திறக்காமலோ அல்லது எல்லாவற்றையும் வாய் மூடி மெளனியாகவோ இருப்பது அவர்கள் எல்லாரையும் பற்றிய உண்மை பிம்பத்தை எடுத்துரைக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி வாய் கிழிய பேசும் போது ஒட்டு மொத்தமாக கிளம்பி வருவது மட்டும் தான் சமூக அக்கறையா?! அல்லது தனக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற மிதப்பா? காலம் தான் பதில் சொல்லும். நேற்றைக்கு தமிழ் வலைப்பூவிற்குள் வந்தவர்களுக்கு இருக்கும் அக்கறை கூட பெரிசுகளுக்கு இல்லை என்பதே உண்மை.
தீவிரவாத தாக்குதலுக்கு எந்நேரமும் தயாராக இருக்கவும் மேடம். ஐபி கண்டுபிடிப்பு சாதனம் போன்றவற்றையெல்லாம் நிறுவியிருக்கிறீர்கள் தானே? இப்படி சீர்திருத்தக் கருத்துக்களை எழுதி குடும்பம், குலம், கோத்திரமெல்லாம் இழுக்க ஒரு ஜந்து கிளம்பியிருக்கிறது தெரியும் தானே?
உங்களது இந்தப் பதிவிற்காக பாராட்டுகள்.
- மாயவரத்தான்...
//இடையில் ஏற்பட்ட சில பல குழப்பங்களால் எழுதணுமா என்று கூடச் சிலசமயம்
தோன்றுகிறது!!!!//
துளசியக்கா நீங்களே இப்படி சொல்லிட்டா நாங்க எல்லாம் என்ன செய்யறதாம்? அதெல்லாம் கண்டுக்காதீங்க... தொடர்ந்து எழுதுங்க.
உங்கள் கவலை நியாயமானது அருணா அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட மீட்டிங்க் காசி அவர்கள் வந்த சந்திப்புதானே? அதற்கு என்னால் வர முடியாததால் அதற்கு முந்தைய நாளே நான் காசி அவர்களை அவர் அறைக்கு சென்று சந்திது பேசினேன்.
உங்கள் பதிவு ஒன்றில் அந்த கீழ்த்தரமான நபர் என் பெயரில் பின்னூட்டம் இட்டு சென்றதை நான் எடுத்து கூறினேன். உடனே நீங்கள் அனாமத்து பின்னூட்டங்களிடும் வசதியை நீக்கினீர்கள் அல்லவா?
அவ்வாறு பின்னூட்டம் இடும் நபர் யார் என்பதை நீங்கள் இதற்குள் ஊகித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அவர் தன் சொந்தப் பதிவில் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல எழுதி வருவதற்கு பின்னூட்டம் இடாமல் புறக்கணித்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
test
I am distressed to note that the person in question has already attacked you, when I was writing my comments, I did not see those comments in my screen. Perhaps it was a cached view I was having. I saw them only after my posting.
It is precisely because of this fear that many people choose to keep aloof or even give conciliatory comments in the topics posted by the concerned trouble maker.
Regards,
Dondu Raghavan
பின்னூட்டப் பிரசினை, அது குறித்து தமிழ்மணத்திற்கு உள்ள கடமை இவற்றை நீங்கள் சிந்தித்திருக்கும் கோணம் வரவேற்கத்தக்கது.
இது குறித்துப் பேசுவதே தேவையற்றது, இது தவிர்க்க முடியாதது, இது ஆபாசமானதுதான் ஆனால் அதற்கு தமிழ்மணம் என்ன செய்யும் என்பது போன்ற நிலைப்பாடுகள் இருக்கும் சூழலில் நீங்கள் இப்படி ஒரு பார்வை கொண்டிருப்பது ஆரோக்கியமானது.
பலர் இதைப் பற்றிய விவாதமே கூடாது என்கிறார்கள். அப்படி விவாதிப்பதே அவமானகரமானது என்று கருதுகிறார்கள். எது அவமானகரமானது? இதைப் போன்ற ஆபாசங்கள் நாம் புழங்கும் இடத்தில் இருப்பதா? அப்படி இருக்கிறது எனபதைச் சுட்டிக்காட்டுவதா? அப்படி ஆபாசங்கள் இருப்பது தெரிந்தும் அதைத் தடுக்க திராணியற்றவர்களாக நாம் இருப்பதா? அல்லது அதற்கு மாற்று/ தீர்வை சிந்திப்பதா?
தமிழ்மணம் காசியுடனான ஒர் சந்திப்பு என்று பதிவு சுரேஷ் கண்ணன் என்பவரால் தமிழ்மணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் " ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு அமைப்பில் உள்ளவர்கள் மற்றும் அந்த வசதியில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள், இந்த ஒரு காரணத்திற்காகவே - சில பிரத்யேக வசதிகள் இருந்தாலும் - இன்னொரு அமைப்பிற்கு மாறுவது அல்லது மாறுவதற்கு யோசனை கூறுவது மிக மிக அபத்தமான கருத்து" என்று எழுதியிருக்கிறார்.
இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வதில் என்ன அபத்தம் என்று எனக்குப் புரியவில்லை. பிறந்து வளர்ந்த இந்தியாவை விட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்க்கிறோமே அது அபத்தமா?இப்போது இருக்கிற வீட்டில் பழுது ஏற்பட்டால், அந்தப் பழுதை நீக்க முடியவில்லை என்றால். விடு மாறமாட்டோமா? பயன்படுத்திக் கொண்டிருக்கிற வாகனம் பழுதாகிவிட்டால் வேறு வாகனம் வாங்க மாட்டோமா? இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட நல்லதொரு வேலை கிடைத்தால் மாறமாட்டோமா? விண்டோஸ் 98லிருந்து நாம் xpக்கு மாறவில்லையா? விண்டோசிலிருந்து லினக்சிற்கு மாறவில்லையா?
சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவிகளுக்காகத்தான் பாரதியார் எழுதி வைத்திருக்கிறார்: " அப்பன் தோண்டிய கிண்று என்று உப்புத் தண்ணியைக் குடிக்கிறார்கள்" என்று
சுரேஷ் கண்ணன் மேலும் எழுதுகிறார்: "இருக்கிற இடத்தில் உள்ள பிரச்சினைகளை களைய அல்லது ஒதுக்க வேண்டிய வழிவகைளை ஆராய வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகள் போல் அவ்வப் போது கட்சி மாறுவது ஒரு நிலையான தீர்வு அல்ல." இந்த வரிகளை எழுதுவதற்கு பத்து வரிகளுக்கு முன்னால்தான் இதையும் எழுதியிருக்கிறார்:" ஆபாச பின்னூட்டங்களை ஒரு பிரச்சினையாக கருதி கூடி விவாதிப்பது என்னைப் பொருத்தவரை ஒரு அவமானமாகரமான காரியமாகவே கருதுகிறேன்"
வழிவகைகளை ஆராய வேண்டும் ஆனால் விவாதிப்பது அவமானகரமானது! மனிதருக்கு என்ன தெளிவு! கட்சிமாறுகிற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். த்லைவன் என்ன செய்தாலும் அதை சிந்தனையற்று, கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட தொண்டர்களும் இருக்கிறார்கள். சுரேஷ் கண்ணன் நம்மையெல்லாம் சிந்தனையற்ற தொண்டர்களாக இருக்கச் சொல்கிறார் போலும்!
காசி அல்லது தமிழ்மணம் நிர்வாகிகள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் தார்மீகப் பொறுப்புக் கொண்டவர்கள். விடையளிப்பார்கள் என்று நம்புகிறேன்:
1. தமிழ்மணத்தில் தொகுக்கப்படும் பதிவுகளில் ஆபாசப் பின்னூட்டங்கள் இடம் பெறுவது குறித்து அவர்களது கருத்து/ நிலை என்ன?
2.ஒருவருடைய பெயரைத் திருடி இன்னொருவர் பின்னூட்டம் இடுவதைப் பற்றி அவர்களது நிலை என்ன?
3.இது போன்று இனி நடக்காது தடுப்பதற்கு அவர்கள் என்ன உத்திகளை வைத்திருக்கிறார்கள்?
4.சென்னை சந்திப்பில் பின்னூட்டங்களின் என்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் இடுவதை நிறுத்தி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அது நடைமுறைப்படுத்தப்படுமா? ஆம் என்றால் எப்போதிலிருந்து?
5.பின்னூட்டப் பாதுகாப்புகளை உறுதி செய்யும் மாற்றுப் பதிவுகளை (யாகூ 360, லைவ் ஜர்னல்) தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமா? சாத்தியம் என்றால் அவை இணைத்துக் கொள்ளப்படுமா? அல்லது தமிழ்மணம் பிளாக்கர் பதிவுகளுக்கு மட்டும்தானா?
விடையை எதிர்பார்க்கிறேன்
அன்புடன்
மாலன்
பி.கு பின்னூட்டம் நீண்டு விட்டதாலும், இந்த பிரசினையின் முக்கியத்துவம் கருதியும் தனிப்பதிவாகவும் இதனை வெளியிட்டுள்ளேன்
துளசி,
எழுதுவதை நிறுத்திவிடாதீர்கள். நீங்கள் யாகூ 360 தரும் வசதிகளை பரிசோதித்துப் பார்த்தீர்களா? அது இந்தப் பின்னூட்டப் பிரசினையை சமாளிக்க உதவும். இது குறித்து சில நாள்கள் முன் ஜன்னலுக்கு வெளியே பதிவில் எழுதியிருக்கிறேன். விருப்பம் இருந்தால் படித்துப் பாருங்கள்
அன்புடன்,
மாலன்
அருணா
ஆரம்ப நிலையில் இது குறித்து என்கவலையை வெளியிட்டு பதிந்திருக்கிறேன். ஒருவரிடம் அமைதியாக தெளிவாக உரையாடு என்று சொல்வதே வன்முறை என்று விவாதிக்கப்பட்டது.படித்த சிந்திக்க கூடிய மக்களிடையே கண்காணிக்க காவலர் தேவை என்றால் வருத்தமாக இருக்கிறது
துளசி, மாயவரத்தான், ராகவன், மாலன், பத்மா, என் கவலைகளை உணர்ந்து கொண்டதற்கு நன்றி. அவ்வப்போது நாம் எல்லோருமே விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். பொதுவாக தமிழ் பதிவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியின் மேல் உள்ள அக்கறை என்ற புரிந்துணர்வு இருக்கிறதா என்று தெரியவில்லை. நாம் ஏதோ ஒன்றுமில்லாத விஷ்யத்தைப் பெரிது படுத்துகிறோம் என்ற பாவனை இன்னும் வேதனையளிக்கிறது.
பார்த்தா, தமிழ்மணம் என்ன செய்யமுடியும் என்று திருப்பி திருப்பி கேட்பவர்களுக்கு விளக்கமாக இந்த இரண்டு பதிவுகளிலும், அடுத்த பதிவில் என் பின்னூட்டத்திலும், ( அன்புவுக்கு தனி மடலிலும் - உங்கள் முகவரி உங்கள் பின்னூட்டத்தில் இல்லை.) மேற்கோள் இட்டு என்ன செய்ய முடியும் என்று எழுதியுள்ளேன். இதற்கு மேலும் என்ன செய்ய முடியும் என்றால் என்ன பதில் சொல்வது?
Learn how to quickly create an RSS feeds with our RSS feeder, for high link popularity and ultimately better search engine rankings.
Post a Comment