Wednesday, April 20, 2005

ஒரு நிகழ்வு, இரு வேறு காலக் கட்டங்கள்.

".......... நடந்து முடிந்த பாகிஸ்தான், இந்திய தலைவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடியவில்லை. இரு தரப்பிலும் அதிருப்தி. சின்ன சின்ன சங்கேதங்கள், வார்த்தைப் பிரயோகம் போன்றவை முரண்பட்ட நிலையைப் பிரதிபலித்தன. முஷாரப் இந்த முறை சுத்தமாக வாங்கிப் போக மட்டுமே வந்துள்ளார்; கொடுக்கத் தயாராக இல்லை......"

முஷார·பின் இந்த வார விஜயம் பற்றி பரவலாக ஒட்டு மொத்த ஊடகங்களும் நல்ல விதமாக பேசும்போது நான் எப்படி இப்படி எதிர்மறையாக கூறுகிறேன் என்று வியக்காதீர்கள். 2001 ல் ஆக்ரா மாநாட்டுக்காக அவர் வந்திருந்தபோது நடந்த செய்திகளைப் பற்றி சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு எழுதியக் கட்டுரையில் இருந்து எடுத்த துண்டு அது.

" டில்லியிலிருந்து எண்ணக்குறிப்புகள்" என்று நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த அந்த வாரப் பத்தியில், ஆக்ரா மாநாடு தோல்வியடைந்ததற்கு இரு தரப்பிலும் சரியான அணுகு முறை இல்லாததும் ஒரு காரணம் என்று எழுதியிருந்தேன். இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகளிலும் ஒரு லயம் இழைவதும், மறைவதும் தனி மனிதர்களுக்கிடையே இருப்பதுபோல் பல விதங்களில் அணுகுமுறையைப் பொறுத்து இருக்கிறது ; சிறு சிறு செயல்கள், சின்ன சின்ன அசைவுகள், சொற்கள், இவை அனுப்பும் சங்கேதங்களில் இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் இந்த முறை, இந்த இரு தரப்பிலும் சங்கேதங்கள் - body language, மற்றும் நல்லுறவுக்கான மனமார்ந்த விழைவு என்று பலவிதங்களிலும் சரியான அணுகு முறை இருந்தது. ஊடகங்களைக் கவருவதில் முஷார·ப் என்றுமே மன்னர். இந்த முறையும் அவர் ஏமாற்றவில்லை. "இந்த முறை நான் வித்தியாசமான மனதுடன் வந்துள்ளேன்" ( I have come with a new heart) என்று சத்தியம் செய்யாத குறையாக கூறியது முதல், கமல் நாத் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியவுடன் தன் காமராவை உடனே எடுத்துக் கொடுத்தது வரை நமது ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளார்.

இந்த முறை பாகிஸ்தான் அதிபரின் வருகையைப் பற்றி வந்த செய்தியெல்லாவற்றையும் படிக்கும்போதும் பார்க்கும்போதும் 2001, ஆக்ரா மாநாட்டின் அப்பட்டமான தோல்வி ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது. அன்றைய முஷார·பின் அணுகுமுறையில் ஒரு hostile பார்வை இருந்தது. பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன்பே காஷ்மீர்தான் முக்கியப் பிரச்சனை; அதில் தீர்வு தெரிந்தால்தான் மற்ற எந்த உறவுக்கும் வழிகோல முடியும் என்ற ரீதியில் பேசினார். ஒரு உடன்பாடு கையெழுத்து இடும் சம்யத்தில் இரு தரப்பிலும் வார்த்தை பிரயோகம் பற்றி பலத்த வேறுபாடு இருந்தது.

இந்த முறை, எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் மற்ற முக்கிய தலைவர்களையும் - சோனியா, வாஜ்பாய், அத்வானி - சந்தித்து சென்றிருக்கிறார். காஷ்மீர் பிரச்சனை இப்போதைக்கு அப்படியெல்லாம் தீர்ந்துவிடாது; நாளை யாருடன் கைகுலுக்க வேண்டியிருக்குமோ, எதற்கும் இப்போதே ஒரு தனிமனிதராக நட்புறவு ( Personal Rapport) காண்பித்து நல்லுறவு பாதை போட்டு வைத்துக்கொள்ளலாமே என்ற ஒரு புரிந்துணர்வு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் முஷார·பின் அணுகுமுறையில் இது ஒரு நல்ல மாற்றம். காஷ்மீரையும் பேசிக்கொண்டே பக்கவாட்டில் மற்ற உறவுகள் மேம்படவும் வழி செய்ய முடியும் என்ற நம் நிலைப்பாடோடு ஒத்துக்கொள்கிறாரே! " காஷ்மீர் பிரச்சனை தலைவர்கள் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம்; காஷ்மீரைப் பொறுத்தவரையில் தன் அணுகுமுறை தற்போது ஒரே முனையாக ( "unifocal" ) இல்லையென்று அவர் கூறியுள்ளதும் முக்கியமான மனமாற்றம் என்றே தோன்றுகிறது. முஷாரா·ப் யதார்த்தத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டரா? அல்லது அவருடைய Public Relations உத்திகளில் இதுவும் ஒன்றா? என்னுடைய Die-hard positive மனசு முதலில் சொன்னதையே தேர்வு செய்கிறது.

9 comments:

Narain Rajagopalan said...

ம்ஹூம்... எனக்கு நம்பிக்கையில்லை. பாகிஸ்தான் போனதும் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பினை ஹெட்லயன்ஸ் டூடேயில் பார்த்தேன்.

"இந்தியா எல்லை கடந்த பயங்கரவாதத்தினை கைவிட சொல்லுகிறது. நாங்கள், காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் அராஜகத்தினை குறைக்க சொல்லுகிறோம். அழிவுகள் குறைந்தால், தீவிரவாதம் குறைந்துவிடும்"

"எல்லைகள் மாற்ற இயலாது. புதியதாய் காஷ்மீரிலோ அல்லது வேறெங்குமே புதிய எல்லைக்கோட்டினை இந்தியா ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அவ்வாறெனில், எப்படி எல்லை மீறிய பயங்கரவாதத்தினை பற்றி பேச இயலும்"

என நீண்ட அந்த நேர்காணலில் எனக்கு ஆக்ரா முஷ்ரப்தான் தெரிந்தார். இருந்தாலும், பாகிஸ்தான் சிறையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்பட்டதும், பஸ் விட்டதும் கொஞ்சம் நம்பிக்கையினை தந்திருக்கிறது. இருந்தாலும், எனக்கென்னவோ இது சீனத்தலைமையின் வருகைக்கு பின்னர், நம்மை ஒதுக்கி விடுவார்களோ என்கிற எச்சரிக்கையோடு வந்த பயணம் போல் தோன்றுகிறது. நல்லது நடந்தால் சரி.

Anonymous said...

முஷ்ரா·ப் விசிட் அன்று, 24x7 இலே , Ayaz Amir கலந்து கொண்ட big fight நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? பேசாமல் நானும், ஒரு fundamentalist ஆக மாறிவிட்டால் என்ன என்று தோன்றியது :-)

அது சரி "இளைய தளபதி" ராஜ்தீப் சர்தேசாய், 24x7 இல் இருந்து கழட்டிக் கொண்டு விட்டாராமே? சொந்தமாகச் சானல் ஒன்று துவங்கப் போகிறார் என்று ரீடி·ப்பில் செய்தி பார்த்தேன். இந்த மாதிரி ஸ்பைசி சமாசாரங்களை எல்லாம் உங்க வலைப்பதிவிலே கவர் செய்ய மாட்டேங்கறீங்களே? :-)

Jayaprakash Sampath said...

previous post was mine

Narain Rajagopalan said...

பிரகாஷ், இது உங்களுக்காக. ராஜ்தீப் சர்தேஸாயும் (மேனேஜிங் எடிட்டர் என்.டி.டிவி) மிர்சந்தாவும் (CFO-NDTV)டிவி18-இன் நிறுவனர் ராகவ் பாஹ்லும் சேர்ந்து புதிய தொலைக்காட்சி தொடங்குகிறார்கள். பெயர் ப்ராட்காஸ்ட் நியுஸ் (Broadcast News)"இளைய தளபதி" அதிகாரபூர்வமாக, போன வாரத்தில் என்.டி.டிவியிலிருந்து கழண்டு கொண்டார். டிவி 18 ஒரு காலத்தில் சி.என்.பி.சியின் பங்காளியாக இருந்தது (CNBC-TV18)
என் கேள்வி, இவ்வளவு செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்தியாவில் இடமிருக்கிறதா.இதுவரை எனக்கு தெரிந்து என்.டி.டிவி, என்.டி.டிவி இந்தியா, ஆஜ்தக், ஹெட்லயன்ஸ் டூடே, ஸ்டார் நியுஸ், சானல் 7, இந்தியா டிவி, இது தாண்டி, பிராந்திய ரீதியிலான செய்தி தொலைக்காட்சிகள் சன் நியுஸ் மாதிரி. யார் சொல்வது உண்மை, யார் எதை சொல்லப் போகிறார்கள் என்று பிரித்தறிவதிலேயே காலம் போய்விடும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

Well, most Paki leaders are good at double talk and Prez Musharaff is no exception. Note that he has told Kashmir issue cant be brushed under the carpet and it will emerge in one way or other unless it is solved. I think, it is indeed an unveiled threat to India.
Draj

Anonymous said...

//என் கேள்வி, இவ்வளவு செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்தியாவில் இடமிருக்கிறதா.இதுவரை எனக்கு தெரிந்து என்.டி.டிவி, என்.டி.டிவி இந்தியா, ஆஜ்தக், ஹெட்லயன்ஸ் டூடே, ஸ்டார் நியுஸ், சானல் 7, இந்தியா டிவி, //

நாராயண் : ஒரு காலத்திலே, வரீசையாக முளைத்த horizontal portals கதி என்ன ஆயிற்று? இந்தியா இன்ஃபோ, indya.com, இந்தியாவேர்ல்ட், இன்னும் பல தளங்களை, முதலைகள் ஸ்வாகா செய்தார்கள். அந்த நிலைமை தான், செய்திச் சானல்களுக்கும் ஏற்படும்.எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்து, மொத்தமே, ரெண்டு அல்லது மூன்று ஆட்டக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள். -பிரகாஷ்

Aruna Srinivasan said...

நாராயண், பாகிஸ்தான் அதிபர் பாகிஸ்தானில் வேறு எபப்டி பேசுவார் என்று நினைக்கிறீர்கள்? அங்கே போய் " காஷ்மீர் ஒரு பிரச்சனையே அல்ல என்ற ரீதியில் பேச முடியுமா? அவருடைய நாற்காலியே காஷ்மீரில்தானே இருக்கிறது? "இந்தியாவில் போய் அப்படி "சேம் ஸைட்" கோல் போட்டீர்களே?" என்று பாகிஸ்தானில் ஒருவரும் அவரை குறுக்கு விசாரணை செய்யவில்லையா என்றும் எனக்கு ஆச்சரியம்.

Draj, it may indeed be a double talk - but we have to move on beyond Kashmir. THIS is the reality. At the same time, I don't think we would be caught off guard. யார் யார் எப்படி பேசுவார்கள் ஏன் என்பதெல்லாமும் யோசிப்போம்தானே? 1962ல் இந்தி -சீனா பாய் பாய் என்று சொல்லி ஏமாந்த காலத்திலிருந்து நிறைய கற்றுகொண்டுவிட்டோம் என்றுதான் நினைக்கிறேன். இருபக்கமும் தீராத பிரச்சனைகளைப் பிடித்து தொங்கி கொண்டு விரோதம் பாராட்டிக்கொண்டே இருந்தால் மற்ற விஷயங்களில் கோட்டைவிட்டு விடுவோம் - சம்பந்தப்ட்ட அனைத்து நாடுகளுமே. தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு வந்தபிந்தான் மற்றவைமேன்று காத்திராமல் விரோத மனப்பான்மையைக் குறைத்து we agree to disagree அடிப்படையில் மேலே தொடர்ந்து பயணத்தை சினேகமாக தொடர்வதுதான் இன்றைய வாழ்க்கை முறை.

பிரகாஷ், நாராயண் உங்கள் "ஸ்பைஸி" ஆவலைப் பூர்த்தி செய்துவிட்டார் :-)

தவிர பிரகாஷ், நாராயண், இணையமும் தொலைகாட்சியும் வேறு வேறு தளம். பல Portal தோன்றி தோன்றிய வேகத்தில் காணாமல் போனதுக்கு காரணம் தேவைக்குமேல் சந்தையில் சப்ளை. இணையத்தை செய்தி / அல்லது entertainment ஊடகமாக உபயோகிப்பவர்கள் உலகளவில் ஒரு சிறிய சதவிகிதம்தான் இருக்கும் - தொலைக்காட்சியுடன் ஒப்பிடும்போது. இணையத்தின் reach அதிகம் கிடையாது குறைந்த பட்சம் இந்த சமயத்தில். அடுத்த 10 வருடங்களைப் பற்றி ஜோசியம் சொல்ல நான் தயாராக இல்லை. ஆனால் TV is a different ball game. பட்டி தொட்டி என்று தண்ணீர் ( சென்னையின் தண்ணீர் அல்ல :-) ) போல இண்டு இடுக்கு என்று எங்கும் வித்தியாசமில்லாமல் நிறைந்து இருக்கிறது - ஓடி அடைகிறது. சாதாரணர்களை எவ்வளவு எளிதில் அடைந்து உங்கள் செய்தியை சொல்ல முடியும் என்பதில்தான் News / entertainment வியாபாரத்தின் ரகசியமே அடங்கியுள்ளது. கிட்டதட்ட அச்சு ஊடகமும் இந்த ரகம்தான் - Mass reach என்ற சித்தாந்தம். இந்த அடிபப்டையில் எத்தனை அலைவரிசைகள் வந்தாலும் பார்க்க மக்கள் இருப்பார்கள். ஆனால் யார் சொல்வது நிஜம் என்று ஆய்வது நம் கண்ணோட்டத்தையும் நம் condition of mind விஷயத்தையும் பொறுத்தது. அதேபோல் எத்தனை அலைவரிசைகள் தாக்குப் பிடிக்க முடியும் என்பது சாதாரண வியாபார அடிப்படைதான். பொழியப்படும் செய்தி / பொழுதுபோக்குகளின் தரம் பொறுத்தது. Question of survival of the fittest.
அதனால் Portal களுக்கு வந்த கதி தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வரும் சூழ்நிலை இப்போது இல்லை. ஒரு unit காணாமல் போனால் அலல்து முழுங்கப்பட்டால் இன்னொன்று வேறு இடத்தில் வேறு அவதாரத்தில் முளைக்கும். இன்று ஹிந்துவில் Dishnet Wireless னிறுவனத்தின் பெரிய விளம்பரத்தைப் பார்த்தீர்களா? ஸ்டெர்லிங் நிறுவனம் தனது dishnet DSL என்ற இணையத் தொடர்பு அமைப்பை ( ISP) சென்ற வருடம் VSNL க்கு விற்றுவிட்டது இல்லையா? காரணம் இந்தியாவில் wireless சந்தையின் பிரமாண்டமான வாய்ப்பு - ericsson நிறுவனத்துடன் சேர்ந்து இப்போது wireless உலகத்தில் தூள் கிளப்ப கிளம்பியுள்ளது.

அதனால் சந்தை வேகமாக மாறி வரும்போது வியாபாரிகளும் அதற்கு தகுந்தாற்போல் தங்கள் சரக்கை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். உருமாற்றம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். Terminator II ல் வரும் அந்த இயந்திர வில்லன் போல. ( அவன் பெயர் என்ன?!)

Narain Rajagopalan said...

இது சம்பந்தமாக படித்துக் கொண்டிருந்தபோது, கஜேந்திரா சிங்கின் பத்தியினை "சேஃக்கில்" படித்தேன். பார்க்க: http://www.saag.org/%5Cpapers14%5Cpaper1346.html சுவையான அலசல்.

Narain Rajagopalan said...

அருணா உங்களின் மின்னஞ்சல் முகவரி தர முடியுமா ? அல்லது narain [at] gmail [dot]com ற்கு ஒரு அஞ்சல் தட்டிவிடுங்கள்.