இதை எழுதும் போது போப்பாண்டவரின் நிலை "கவலைக்கிடமாக" என்ற அறிவிப்பில்தான் இருக்கிறது. அவ்வப்போது நினைவிழக்கிறார். மற்றபடி கோமாவில் விழவில்லை என்கிறது வாடிகன்.
பலவருடமாக கோமாவில் இருந்து பெற்றோரும் கணவரும் எதிர் முனைகளில் வாதாட, ஒரு வழியாக இரண்டு நாள் முன்பு மறைந்த Schiavo வின் நினைவு வருகிறது. தான் இறுதியை நெருங்கிவிட்டோம் என்று தோன்றிய பிறகு போப்பாண்டவர் தனக்கு சிகிச்சை ஏதும் தேவையில்லை என்று மறுத்துவிட்டு ஆஸ்பத்திரிக்குப் போகாமல் தன் இடத்திலேயே இருக்க முடிவு செய்துவிட்டார். ஒரு வேளை அவர் கோமாவில் முழுக நேர்ந்தால் அவருக்கு உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் செய்வார்களா? அல்லது ஒரு முயற்சியும் செய்ய மாட்டார்களா? முந்தையது என்றால் இத்தனை நாளும் வாடிகன் ஆதரித்து வந்த கொள்கையாகும். பின்னது என்றால் வாடிகன் மிகவும் எதிர்த்த கொள்கையாகும் இல்லையா?
தான் ஆஸ்பத்திரி போக வேண்டாம் என்று முடிவெடுத்த சமயம் ஒரு வேளை போப்பாண்டவருக்கு தோன்றியிருக்குமோ - Schiavo வும் கோமாவில் இருந்தாலும் அமைதியாக தொந்தரவில்லாமல் மறைய வேண்டும் என்றுதான் நினைத்திருப்பாள் என்று நினைத்திருப்பாரோ?
வயது ஒரு கேள்வியே அல்ல. மருத்துவ எல்லைகளின்படி தான் பிழைக்க வாய்ப்பில்லை என்று அறிந்தபின்னர் அவர் சிகிச்சை தேவையீலை என்று முடிவெடுத்தார். Schiavo விஷயத்தில் வருடக்கணக்கில் சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் மருத்துவ எல்லைகளைத் தாண்டிய நிலையில் அந்தப் பெண்ணும் தன் விருப்பத்தை சொல்லக் கூடிய நிலையில் இருந்திருந்தால் அவரைப் போல் ஒரு முடிவைதான் சொல்லியிருப்பாளோ?
தெரியவில்லை.
புரியவில்லை.
ஆனாலும் பல விதங்களில் John Paul II, பெருவாரியாக மக்களைக் கவர்ந்தவர். 400 சொச்சம் வருடங்களுக்குப் பிறகு இத்தாலியர் அல்லாத முதல் போப்பாணடவர். மக்களிடையே வெகு இயல்பாக பழகி அவர்கள் மனங்களை வென்றவர். தன்னைச் சுட முயற்சித்த ஒருவனை சிறையில் கண்டு சாதாரண நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சகஜமாக பேசும் புகைப்படம் ஒன்றைக் கண்டபோது அவரின் இந்தப் பண்பும் அன்பும் மனதைத் தொட்டது.
ஆனாலும் அபார்ஷன், பெண்களுக்கு மதச் சடங்குகளில் / சர்ச்சுகளில் சம உரிமை மறுப்பு, போன்ற விஷயங்களால் பெண் உரிமைவாதிகளுக்கு இவரிடம் மகா கோபம். இன்று பிபிசி பேட்டியில், Catholics for Free Choice என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அழுத்தமாக கூறினார்: " அவர் எவ்வளவோ நல்லது செய்துள்ளார் மறுக்கவில்லை. நானும் இந்த இரண்டு மூன்று நாட்கள் அவரைப் பற்றி எதுவும் வன்மையாக ஏதும் சொல்ல மனம் வராது. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். Lots of people are suffering and they are suffering, BECAUSE of the Church. Not INSPITE of the Church." இவ்வளவு ஆணித்திரமாக இவர் கூறக் காரணம் என்ன என்று கூகிளினேன். இந்த அமைப்பைப் பற்றி தகவல்கள் இருந்தாலும் இவர் குறிப்பிடுகிற அந்த Sufferings" என்ன என்று முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இதன் நடுவே புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கும் முறையைப் பற்றி ஹிந்துவில் இந்தக் கட்டுரை நன்றாக அலசியுள்ளது. எல்லாக் கார்டினல்களும் தாங்கள் தேர்ந்தெடுத்தபின் அந்தக் காகிதங்களை எரிய விடுவார்களாம். புகைபோக்கியில் வெளியே புகை கறுப்பாக வெளி வந்தால் போப்பாண்டவர் தேர்வு எதுவும் முடிவாகவில்லை என்று அர்த்தமாம். தேர்வு வெற்றிகரமாக நடந்துவிட்டால் எரிவதில் ஏதோ ஒரு பொடியைச் சேர்த்து புகை வெள்ளையாக வெளியே வரும்படி செய்வார்களாம் !
Saturday, April 02, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மிக நல்ல பதிவு அருணா!!
ஒரு மனிதனுக்கு வாழும் அவாவும் (desire) மனத்திடமும் மறைந்து விட்டால் என்ன செய்தாலும் அந்த மனிதனைக் காப்பாற்ற முடியாது என்பது என் எண்ணம். சிகிச்சைகள் பலனளிக்காத ஸ்கியாவோவிற்கு வாழ்வில் நாட்டமில்லை என்று ஏன் அவருடைய கணவர் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏன் அவர் மனைவியின் தேவையற்ற போராட்டங்களை நீக்க நினைக்கக் கூடாது? அதே நேரத்தில் ஸ்கியாவின் பெற்றோர் வைத்திருந்த அதீத நம்பிக்கையிலும் அவர்களுடைய போராட்டங்களிலும் கூட எனக்கு மறுப்பில்லை. அன்பு இருவகையிலும் வேலை செய்யலாம். ஆனால் ஒன்றுதான் உதைக்கிறது. ஸ்கீயாவின் கணவர் ஒரு மருத்துவரின் மேல் நஷ்ட ஈடு வழக்குப் போட்டு, அந்த வழக்கு வெற்றி பெறும் வரை காத்திருந்து பிறகு மனைவியின் உணவுக் குழாயை நீக்கப் போரிட்டார் என்ற செய்திதான் அது. இது உண்மையானால், தீசல்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
- உதயகுமார்
மிக நல்ல பதிவு அருணா!!
ஒரு மனிதனுக்கு வாழும் அவாவும் (desire) மனத்திடமும் மறைந்து விட்டால் என்ன செய்தாலும் அந்த மனிதனைக் காப்பாற்ற முடியாது என்பது என் எண்ணம். சிகிச்சைகள் பலனளிக்காத ஸ்கியாவோவிற்கு வாழ்வில் நாட்டமில்லை என்று ஏன் அவருடைய கணவர் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏன் அவர் மனைவியின் தேவையற்ற போராட்டங்களை நீக்க நினைக்கக் கூடாது? அதே நேரத்தில் ஸ்கியாவின் பெற்றோர் வைத்திருந்த அதீத நம்பிக்கையிலும் அவர்களுடைய போராட்டங்களிலும் கூட எனக்கு மறுப்பில்லை. அன்பு இருவகையிலும் வேலை செய்யலாம். ஆனால் ஒன்றுதான் உதைக்கிறது. ஸ்கீயாவின் கணவர் ஒரு மருத்துவரின் மேல் நஷ்ட ஈடு வழக்குப் போட்டு, அந்த வழக்கு வெற்றி பெறும் வரை காத்திருந்து பிறகு மனைவியின் உணவுக் குழாயை நீக்கப் போரிட்டார் என்ற செய்திதான் அது. இது உண்மையானால், தீசல்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
- உதயகுமார்
உதயகுமார், ஸ்கியாவோ கேஸில் தில்லு முல்லு நடந்திருக்கலாம். நான் பார்ப்பது அடிப்படையில் இந்த தர்ம சங்கடமான பிரச்சனை. "உயிரைக் காப்பாற்றும்" உரிமை. " உயிர் வாழ முடிவு செய்வது யார் கையில் உள்ளது? இப்படிபட்ட பிரச்சனைகள். எவ்வளவு உடல் உபாதையிருந்தாலும் சிலருக்கு பிழைத்து இன்னும் வாழ வேண்டும் என்ற ஆவல் கூட இருக்கலாம். அவர்களுக்கு தகுந்த மருத்துவ உதவி கிடைக்காமல் போனால் ? அவர்கள் வாழும் உரிமை மறுக்கப்படுகிறதே? முடிவு செய்யும் உரிமை யார் கையில்? பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக முடிவெடுக்க முடிந்தால் பிரச்சனையில்லை. போப்பாண்டவர் முடிவெடுத்ததுபோல். ஸ்கியாவோவின் பெற்றோர்களின் அன்பையும், தவிப்பையும் நிச்சயமாக என்னால் உணர முடிகிறது. ஆனால், ஸ்கியோவின் மன நிலை என்னவாக இருந்திருக்கும் என்று ஊகிக்க பார்க்கிறேன்.
எந்த நிமிடம் உயிர் போக வேண்டும் என்ற முடிவு மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருக்கும் வரையில் பிரச்சனையில்லை. ஆனால் இந்த முடிவெடுக்கும் நிலை / சுதந்திரம் / தொழில் நுட்பம் மனிதன் கையில் இருக்கிறதா? இருந்தால் அதை அவன் எப்படி பயன்படுத்த வேண்டும்?
உண்மையில் மிகவும் மனசை உலுக்கும் பிரச்சனை இது. என் வரையில் இன்னும் கேள்வியாகதான் இருக்கிறது.
விருப்பு வெறுப்பின்றி மேலும் ஒரு பதிவு. நான் கண்ட சில தொலைக்காட்சி படங்கலும் போப் இரண்டாம் ஜான் பால் ஒரு ஒப்பற்ற மனிதர் என்றே சித்தரித்தன. ஆயினும், சில விஷயங்களில் ஒரு பழமைவாதியாகவே காட்சி அளிக்கிறார். குறையற்ற மானிடர் யார் உளர் ?
Post a Comment