Tuesday, November 09, 2004

பத்திரிகைகளில் மற்றும் டிவியில் அல்லது பில் போர்ட்களில் வரும் விளம்பரங்கள் சில சட்டென்று நம் கவனத்தைக் கவரும்; சில, நெகிழ வைக்கும்; சில, வாய் விட்டு சிரிக்க வைக்கும்; இன்னும் சில அடக் கடவுளே, இப்படிக்கூடவா அபத்தமாக இருக்கும் என்று எண்ண வைக்கும்.

பல சமய்ங்களில் "அமுல்" பானர்கள் சட்டென்று ஒரு புன்முறுவலைக் கொண்டு வரும். "நீங்கள் எங்கே போனாலும் தொடர்ந்து வரும்" ஹட்ச் செல் போன் விளம்பரம் பார்த்து நெகிழாதவர்கள் இருக்க முடியுமோ? பல மணி நேர சினிமாக்களில், சீரியல்களில், குறும்படங்களில் அல்லது ஆயிரக்கணக்கான பக்கங்களிலும் சொல்லும் சேதிகளைக் கூட, சில வினாடிகளே ஓடும் விளம்பரப் படங்களில் சொல்லிவிடும் அந்த குவியம் இருக்கே, அது எனக்கு மிகவும் பிடிக்கும். Cannes Golden Lion என்ற விருது, விளம்பர உலகின் " நோபல்".

இன்றிலிருந்து அவ்வப்போது இப்படிக் கண்களில் படும் விளம்பரத் துண்டுகளை "அலைகளின் கோல்டன் லயன்" என்று இங்கே பதியலாம் என்று இருக்கிறேன்.
இந்த வரிசையை ஆரம்பித்து வைப்பது - "மதர்ஸ் ரெஸிபி" நிறுவனத்தின் அப்பளாம் விளம்பரம் ! பாரம்பரியம் மிக்க குடும்பம். அம்மா பெண்ணிற்கு எண்ணைக் குளியல் செய்து தலைவாரி, ஒரு முழம் பூவைத் தலையில் வைக்கிறாள். வாய்க்கு ருசியாக, எல்லாம் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள் சாப்பாட்டு மேஜையில் தயாராக உள்ளன. சாப்பிட வருமுன் பேத்தி அப்பளாம் ஒன்றை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள். அப்பளாம் சாப்பிட போட்டியிடும் பாட்டியிடம் சிரித்துக்கொண்டே நீட்டுகிறாள். அதைப் பாட்டி கடிக்கும்போது பேத்தியின் கண் பட படப்பதை ( அப்பளாம் "சத்தத்தில்" !!) க்ளோசப்பில் காட்டுகிறார்கள். அந்த ஒரு ஷாட் போதும். கலை நயம் மிக்க ஒரு ஷாட்டில் பொருளின் நேர்த்தி சொல்லப்பட்டு விடுகிறது.

இந்த வார அலைகள் கோல்டன் லயன் விருது.......... goes to " மதர்ஸ் ரெசிபி" :-)

4 comments:

Kasi Arumugam said...

அதெல்லாம் சரிங்க, எதாச்சும் படம்/லிங்க்கு கொடுத்தா அது என்ன மதர்ஸ் ரெசிபி ன்னு மதர்லேண்டில் இல்லாத நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லே:-)
அன்புடன்,
-காசி

Aruna Srinivasan said...

அதானுங்களே..... நான்பாட்டுக்கு எதையோ நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு ஒரு சாம்பிள் கூட காண்பிக்கலேனா எப்படி..? அதுல பாருங்க ஒரு பிரச்சனை. இங்க சென்னையிலே ஏதோ ஒரு தமிழ் சேனல்¢லேதான் இந்த விளம்பரம் பாத்தேன். இப்போ இதுக்கு எங்கேயிருந்து படம் பிடிச்சு கொண்டுவந்து போடறதுன்னு புரியலையே. கொஞ்சம் பொறுங்க.... இதோ கூகிளிட்டு பாக்கிறேன். ம்ஹ¤ம்... ஒண்ணும் கிடைக்கலீங்க. எங்காவது பத்திரிகையில் வந்திருந்தால் ஸ்கேன் பண்னி போட்டுடறேன்.

Boston Bala said...

நோண்டியதில் இது வரை கிட்டியவை
http://www.mothersrecipe.com/papad.htm

விளம்பர கம்பெனியும் வலையேற்றிய மாதிரி தெரியவில்லை:
http://www.tritoncom.com/homeflash.htm

(I hate flash sites :-)

(News link: agencyfaqs! > news & features > Triton, Delhi, adds business worth Rs 12 crore: "the soon-to-be-launched range of condiments from Desai Brothers, the owners of the Mother's Recipe brand. Triton has also won the media duties for Mother's Recipe."

Aruna Srinivasan said...

நன்றாகவே தேடியுள்ளீர்கள் பாலா. அந்த விளம்பரத்தை எங்கேயோ பத்திரிகை அட்டையில் பின் பக்கம் பார்த்த ஞாபகம் - குமுதம்? மங்கையர் மலர்? கல்கி? குமுதம்? ம்ஹ¤ம்... சமயத்தில் ஞாபகம் வரமாட்டேங்குதே... இந்தப் பத்திரிகைகள் படிப்பவர்கள் யாராவது இந்த வலைப் பக்கம் வந்து வெளியிட்டால்தான் காசியின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முடியும். சரி, எங்கேயருந்தாவது புதிர் விடுபடுகிறதா என்று பார்க்கலாம் :-)