Wednesday, June 09, 2004

ஒலி பதிவு.... !!! ??

இதென்னங்க ?! இப்போதான் Blogspot ல் கவனித்தேன். ஒலிப் பதிவு முறையையும் கொடுக்க ஆரம்பச்சிருக்காங்க. ஏற்கனவே இந்த ஒலி பதிவு பற்றி ஓரிரண்டு பதிவுகளில் படிச்சிருக்கேன். ஆங்கில பதிவு கிருபா ஷங்கர் இப்படி ஏதோ ஒலி நாடாவை பதிவு செய்திருந்தார். ஆனால் அதெல்லாம் இலவசமாக இருக்கவில்லை என்று ஞாபகம் :-) இப்போ இவங்க அதையும் இனாமாக கொடுத்திருக்காங்க போலிருக்கு. எழுதி பதிவு செய்ய நேரம் (!!!) இல்லையென்றால் பேசி பதிவு செய்து விடலாமே!! ஆனால் நம்ம வலைப்பதிவு தொழில் நுட்பகாரர்கள் யாரும் இன்னும் அதை சோதனை செய்யவில்லை என்று நினைக்கிறேன். ( ஆமாம் மைக்கை எடுத்து ஒலிப் பதிவு செய்வதற்கு எழுதுவதே மேலோ? அல்லது எழுதுவதிலும் அதை மற்றவர்கள் படித்து பின்னூட்டம் விடுவதிலும் உள்ள சுவை இந்த ஒலி நாடாவில் இருக்குமா? என்ற எண்ணமோ? எதுவானாலும் இருக்கட்டும். யாராவது முயற்சி செய்து ஒரு சோதனையோட்டம் செய்யுங்கள். குரல் வளம் மிக்கவர்கள் பாட்டே பாடிவிடலாம். - மதி பதிவில் அவ்வபோது நல்ல இசைகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளார். புகைப் படங்கள் சரி; இனி கொஞ்சம் குரலையும் கேட்கலாமே?!! :-) என்ன ரெடியா?

6 comments:

ராஜா said...

மதி தன் வலைப்பூவில் இதை சோதித்துள்ளார். ஆனால் பாடி சோதிக்கவில்லை :-)

- ராஜா

ஈழநாதன்(Eelanathan) said...

யாராவது சோதிக்கலாமே என்பதைவிட நீங்களே பாடிப்பார்க்கலாமே கேட்பதற்கு நானிருக்கிறேன்.

Aruna Srinivasan said...

ராஜா,
மதியின் குரல் கேட்டேன். சரி அடுத்தது பாடப் போகிறார் என்று காத்திருந்து பார்த்தால் ம்..ஹ¤ம்.. யார் கண்டது? கூடிய விரைவில் நேயர் விருப்பத்துக்கு மசிந்தாலும் மசியலாம் !

ஈழநாதன், தைரியமாக என்னைப் பாடச் சொல்லிவிட்டீங்களே? சிலர் பாடினால் கழுதைகள் வரும் என்பார்களே.. அதான் கொஞ்சம் பயப்படறேன்... :-)

க்ருபா said...

ஹலோ வணக்கம் திருமதி. அருணா அவர்களே! (ஆட்டோவில் பேசும் கட்சிப் பணியாளர் பாணியில் படிக்கவும்)

நானும் குரல்வலைப்பதிவை அன்றே முயற்சித்துப் பார்த்தும் விட்டேன். நம்ப ஊர்ல இருந்து பதியறதுல ஒரு சின்ன பரச்சனை இருக்கு. இன்னிக்கு ராத்திரி விலாவரியா என் வலைப்பதிவுல எழுதறேன்.

க்ருபா

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Aruna. dont worry I wont be singing. I am yet to speak in my normal voice. athaan ennoda voice kaettavanga ellaam kalaaychu irunthaanga. :p

BTW, read something in the audioblogger faq

http://audioblogger.com/faq.html

>>
Does it only work in the US?

The number that you call is located in the us. We have plans to put this service everywhere in the world where there is a blogger blogging. Send us an email if you would like to see the service in your area.
<<

Maybe you could write abt this in your english blog and request bloggers to write to blogger.com

Aruna Srinivasan said...

அப்படியா சமாசாரம்!!??

"-... Does it only work in the US?
The number that you call is located in the us. We have plans to put this service everywhere in the world where there is a blogger blogging. Send us an email if you would like to see the service in your area...."

கிருபா, உங்கள் பிரச்சனைக்கு மதி பதில் சொல்லிட்டாங்க. அமெரிக்கவில் உள்ள நம்பர் அப்படீங்கறதாலே பிரச்சனையாம். இருந்தாலும் ஒரு வேளை dialpad போல இணையத் தொலைபேசி பயன் படுத்தி பார்க்கலாமோ?

மதி, ஈழநாதனுக்கு பதில் சொன்னது என்னைப் பற்றிங்க.. நீங்க வேற.. அதெல்லாம் பயப்படாம அந்த காலத்து பி. சுசிலா பாட்டு ஒண்டு ( இதென்ன எனக்கும் இலங்கைத் தமிழ் வரும் போல் இருக்கு !!) பாடுங்க..... அதென்ன பி. சுசீலா!! ?? என்ன பண்றது? என் தலைமுறையாயிற்றே!! அதான் அந்த பேர் சுலபமாக வருகிறது :-)

P.S. plugging the audio problem into english blog as requested.