Thursday, June 03, 2004

அமெரிக்கப் பொருட்கள் சந்தையிழக்கின்றன??

கோகோ கோலா, நைக், மெக்டொனால்ட் போன்ற அமெரிக்க பொருட்கள் இந்தியாவுக்குள் வருவதை விரும்பாதவர்களா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி!! உலக சந்தையில் அமெரிக்கப் பொருட்களுக்கு மதிப்பு குறைந்து போய்விட்டன என்று ஒரு அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதன் அறிக்கையின்படி, இதற்கு ஒரு காரணம் ஆங்காங்கே, ஆஸ்த்திரேலியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளில் உள்ளூர் தாயரிப்புகள் பெருகி அமெரிக்க பொருட்களுக்கு மார்கெட் இல்லாமல் போய்விட்டதாம். ஈராக் பிரச்சனையை அமெரிக்கா கையாண்ட விதமும் தற்போது வெளியான ஈராக் சிறைக் கைதியினர் நடத்தப்பட்ட விதத்தின் போட்டோக்களூம் கூட காரணமாக இருக்கலாமாம்.

அதுசரி; எப்படியோ, அமெரிக்க பொருட்கள் இறக்குமதி குறைந்து உள்ளூர் பொருட்களுக்கு சந்தை உருவானால் சரி என்று நினைக்கிறீர்களா? இருங்கள்; அவசரப்படாதீர்கள். The bad news is இந்த "அமெரிக்க பொருட்கள் மதிப்பு குறைந்து உள்ளூர் பொருட்கள் மதிப்பு உயர்ந்து" லிஸ்டில் இந்தியா காணோம் !! அதற்கு ஒரு ஆய்வாளர் விளக்கம்: " பொதுவாகவே, இந்திய நுகர்வோர்கள் சற்று சாவதானக்காரர்கள். இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அவர்கள் அசரமாட்டார்கள் !!!!" ஹ்ம்ம்... நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...

2 comments:

Aruna Srinivasan said...

"...அரசாங்கமும் இறக்குமதி பொருட்கள் உள்ளூர் உற்பத்தியை எப்படி பாதிக்கின்றது என்பதை கவனித்து அதன் மீதான வரிகளை அதிகப்படுத்துவதுடன் இறக்குமதி கோட்டா முறையை அமுல்படுத்த வேண்டும்."

சுரேன், இங்கேதான் கொஞ்சம் பிரச்சனை :-)

உலக வர்த்தக அமைப்பில் நாமும் ஒரு உறுப்பினர். அதனால் நம் 'உற்பத்திக்கு மட்டும்' என்று எந்த நாடுமே பொத்திப் பாதுகாக்காமல் ( இறக்குமதி வரி உள்பட வணிக தடைகள் இல்லாமல்) உலக அளவில் வணிகம் செய்ய வேண்டும். இந்தப் பரந்த நோக்குதான் உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள். நேர்மையாக செய்யும் பட்சத்தில், இதனால் எல்லோருக்கும் லாபம். அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் போல் இன்று இந்தியா பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டேயிருக்கிரது. டாடா, பிர்லா, தவிர, இன்று அனேக இந்திய நிறுவனங்கள் வெளி நாடுகளில் வணிகம் செய்து இந்திய பன்னாட்டு நிறுவனங்களாக இருக்கின்றன. இன்று sail போன்ற அரசு நிறுவனங்கள் கூட வெளி நாட்டு நிறுவனங்களை வாங்குகின்றன; அவற்றில் முதலீடு செய்கின்றன. வெளி நாடுகளில் முதலீடு செய்வதன் அனுகூலம் இது. அதேபோல், viceversa.

எல்லோரும் இதைப் பின்பற்றும் பட்சத்தில் மொத்தமாக எல்லோருக்கும் உலகச் சந்தை கிடைத்து வணிகம் பரஸ்பரம் பெருகும். ஆனால் மற்ற நாடுகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள விதம் விதமாக தடைகள் வைத்துக்கொள்ளும்போது அவற்றை நீக்கும்படி நாம் வாதாடி வெற்றி பெற வேண்டுமே தவிர, நாமும் முன்பு போல் சுருண்டு கதவை மூடிக்கொள்வது விவேகம் ஆகாது. முன்பு மாறன் வர்த்தக அமைச்சராக, வளரும் நாடுகள் சார்பாக திறமையாக வாதாடி வளரும் நாடுகளின் கவலைகள் உலக அளவில் கவனம் பெறும்படி முன்னிறுத்தினார். இன்று நமது வணிகம் / பொருட்கள்/ நமது பிராண்ட் இந்தியாவிலேயும், வெளியேயும் பிரபலமடைந்து நம் வணிகம் செழிப்பாவது, உலக வர்த்தக அமைப்பில் நாம் திறமையாக வாதாடி நம் நிலையை நிலை நாட்டுவதைப் பொறுத்தும், நாம் உலக தரத்திற்கு ஈடாக நமது உற்பத்தி திறனை மேன்மையாக்குவதைப் பொறுத்தும் இருக்கிறது. கதவை மூடிக்கொள்வதால் ஒரு லாபமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, கோகோ கோலா இங்கு வந்ததில் கவலை இல்லை. ஆனால் ஒரு இந்திய கோகொனெட் கோலா ( என் கற்பனையில் இளநீர் ஆதாரம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு இந்திய பிராண்ட் :-) ) நிறுவனம் வெளி நாடுகளில் கொடிகட்டி பறப்பதை எதிர்பார்க்கிறேன். கிட்டதட்ட இது நடக்க ஆரம்பித்துள்ளது.

Muthu said...

சுரேன் ..
இந்த நிலை இந்தியாவிலும் வந்தால் மிக நன்றாய் இருக்கும்..
உலகில் மிக வளமான சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில்
இந்தியப் பொருட்கள் மிக வலிமையாக வளர்ந்தால்
நல்ல பயனுள்ள பல விளைவுகள் ஏற்படும் என்பது திண்ணம்.