Thursday, July 12, 2007

பெயரிலி என்கிற ரமணீதரனுக்கு //முழுமையாகப் பத்து வசனங்கள் கோவிந்தசாமி பற்றியும் இணையத்தமிழ் வரலாற்றினையும் பற்றி அருணா அவர்களைச் சுடச் சுட முன்னாலே போய்த் திடீரென நின்று // கேட்க ஆசையாம். அவருக்காக இந்தப் பதிவு. அவர் பதிவிலும் போட்டுவிட்டேன். இது என் வசதிக்காக." ரமணீதரன், அப்படியெல்லாம் ரொம்பக் கஷ்டப்படாதீர்கள். தமிழ் கணினி, மற்றும் தமிழ் இணைய அரசியலில் நுழைய எனக்கு விருப்பமில்லை. ஆனால், நா. கோவிந்தசாமி எப்படி முதன் முதலில் தட்டச்சு செய்த தமிழை வலையேற்றினார் என்பதற்கும், இணையத் தமிழின் பிதா என்று நான் கூறியதற்கும் ஆதாரம், இங்கே

என் மற்றொரு வலைப்பதிவில் பதிந்துள்ளேன். ஏழு கடல் தாண்டி அருணா ஸ்ரீனிவாசனைக் கேள்வி கேட்கும் சிரமம் உங்களுக்கு வேண்டாமே என்று எனக்கு நேரடியாக தெரிந்த ஆதாரங்களைக் கொடுத்துள்ளேன். எள்ளல், நக்கல் இவற்றுக்கு செலவழித்தது போக நேரம் பாக்கி இருந்தால், சிரமம் பார்க்காமல் இங்கேயும் எட்டிப் பாருங்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

"Today if you want to read Tamil messages on the Internet, they are transported in graphic mode. The Tamil letters are converted into graphic mode, called Graphic Interchange Format and you get the graphic images or the letters. But to communicate in the long run, this would be too troublesome and time consuming. The images take a lot of time in the conversion process. Text mode is the only solution"

என்று எகனாமிக் டைம்ஸிற்காக என் பேட்டியில் அவர் சொல்லியபோது, உலகின் இதர பகுதிகளிலும் இவ்வாறு தமிழ் எழுத்தை வலையேற்றும் முயற்சிகள் நடந்துவருவதையும் கூறினார். அதுவரையில் இணையத்தில் ஏற்றப்பட்ட தமிழ் எழுத்துக்கள் அப்படி GIF முறையில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. தட்டச்சு செய்து நேரடியாக ஏற்ற பல முயற்சிகள் ஒரே சமயத்தில் நடந்து வந்தாலும் 1995ல் முதன் முதலில் "தட்டச்சு செய்து" நேரடியாக ஏற்றப்பட்ட தமிழ் கோவிந்தசாமியுடையது என்ற வகையில் அவர் தமிழ் இணையத்தின் பிதா என்று நான் குறிப்பிட்டதில் தவறேதும் இல்லை.

மனமிரூந்தால் இதையும் படியுங்கள்.

ஒருவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்ட பதிவில் அவருடைய நினைவுகளைப் பற்றி நாமறிந்த சிறு குறிப்பைப் பகிர்ந்து கொள்வது மனித இயல்பு. ஒரு வேளை நான் இணையத் தமிழ் ஆர்வலர்கள் என்று கட்டுரை எழுத நேர்ந்தால் நிச்சயம் பலரின் பங்காற்றல்கள் பற்றியக் குறிப்புகள் அதில் இருக்கும்.

இருந்தாலும், இன்று நீங்கள். நாளை இன்னும் வேறு யாருக்காவது இணையத் தமிழ் வரலாறு பற்றியோ அதில் பங்காற்றியவர்களைப் பற்றியோ சந்தேகம் எழலாம். அவர்களைப் போன்றவர்களுக்காக திரு கல்யாணசுந்தரம், மற்றும் முரசு நெடுமாறன், போன்ற நான் சந்தித்த ஆர்வலர்களின் அனுபவங்களையும், செய்திக் கட்டுரைகளையும் - என் கையில் கிடைத்தவரையிலும் - மேலே ஆரம்பத்தில் கொடுத்த சுட்டியில் கொடுத்துள்ளேன். மற்றவர்களைப் பற்றி அறிந்ததுண்டு - சிலருடன் கருத்து பரிமாற்றமும் உண்டு - ஆனால் சந்தித்ததில்லை.

நன்றி.

5 comments:

Anonymous said...

அருணா,

தாங்களும், உங்கள் நண்பருமான மாலன் அவர்கள் கோயிந்தசாமியை இணைய ஆர்வலர் என்றோ, இணையத்தில் தமிழ் ஏற்ற பாடுபட்டார் என்றோ கூறியிருந்தால் எந்த சச்சரவும் வந்திருக்காது. "தமிழ் இணையத்தின் பிதா" என்பது சற்று அதிகமே.

அதைப்போலவே பத்ரி இணையத்திற்கு சேவையாற்றினார் என்று மாலனும் நீங்களும் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எந்த சேவை என்று கொஞ்சம் விளக்கினால் தன்யனாவோம்!

-யு.எஸ்.தமிழன்

Anonymous said...

Yes How come you can say govindasamy as "Tamil Inaya Pidha". That title only belongs to Kasi and/or Peyarili.

-/ U.S. Indian

நாக.இளங்கோவன் said...

//கோயிந்தசாமியை இணைய ஆர்வலர் என்றோ, இணையத்தில் தமிழ் ஏற்ற பாடுபட்டார் என்றோ கூறியிருந்தால் எந்த சச்சரவும் வந்திருக்காது. "தமிழ் இணையத்தின் பிதா" என்பது சற்று அதிகமே.
//

பெருமதிப்பிற்குரிய திரு. நா.கோவிந்தசாமி அவர்களின் தமிழ்ப்
பங்களிப்பு என்பது மிகவும் உயர்ந்தது.
அதில் யாருக்கும் எள் அளவும் அய்யமிருக்க முடியாது.

அதே நேரத்தில் மேலே அநாநி ஒருவரின் கருத்து சரியானதாகப் படுகிறது.

இணையத்தின் பிதா யார் என்பது
அவ்வளவு எளிதாக "எல்லோராலும்"
சொல்லி விட முடியும் என்று நான் கருதவில்லை.

குறிப்பாக 90களின் இறுதி அல்லது 2000 ஆரம்பங்களில்,
தமிழ் இணைய மாநாடுகளின் தாக்கத்தில்
என்னவோ ஏதோ என்று உள்ளே நுழைந்து "எனக்கும் இணையம் தெரியும்" என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்து, அதையே தகுதியாகக் கொண்டு இணைய மேதைகளாக உலா
வரத் தொடங்கியவர்கள் பலருக்கு தமிழிணைய ஆரம்பங்கள்
தெளிவாகத் தெரிந்திருக்க ஞாயமில்லை.

பிதா என்ற பட்டம் கொடுக்க முனைவது
அன்பின் மிகையாலோ அல்லது அறிந்தவற்றின் அளவாகவோ மட்டுமே
இருந்து விடக் கூடாது. நீங்கள் கொண்டிருக்கும் அளவு கோலில் சொல்லப் போனால்,

தட்டச்சு செய்து நேரடியாக வெளியிட்ட தமிழிணையப் பிதா,
படவஞ்சலாக தமிழனுப்பிய பிதா,
மின்னஞ்சல் அனுப்பிய பிதா,
தகுதரத்திற்கு முந்தைய பிதா,
தகுதரப் பிதா,
டாப்/டாம் பிதா,
இணையத்தில் முதலில் தமிழ் என்ற சொன்ன பிதா
ஒருங்குறிப்பிதா,
மடற்குழுப் பிதா,
வலைப்பதிவு பிதா
கணியில் முதன் முதலில் தமிழை எழுதின பிதா,
என்றெல்லாம் செல்லும். இன்னும் சொல்லப் போனால் பிதா இருக்கையில் மாதா யாராக இருக்கக் கூடும் என்ற சிந்தனை எழாமல் இல்லை.

தமிழ்நாட்டில் குடிசையில் பள்ளிக் கூடம்
நடத்துபவர்கள் கூட இன்றைக்கு
கல்வித் தந்தை என்று போட்டுக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு
இணைய தாசர்கள் இட்டுச் செல்லாமல் இருந்தால் சரி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Anonymous said...

hi nice blog
thodaradum ungal kuural....

this is my blog....
www.kavimozhiz.blogspot.com

ரவிசங்கர் said...

//தட்டச்சு செய்து நேரடியாக வெளியிட்ட தமிழிணையப் பிதா,
படவஞ்சலாக தமிழனுப்பிய பிதா,
மின்னஞ்சல் அனுப்பிய பிதா,
தகுதரத்திற்கு முந்தைய பிதா,
தகுதரப் பிதா,
டாப்/டாம் பிதா,
இணையத்தில் முதலில் தமிழ் என்ற சொன்ன பிதா
ஒருங்குறிப்பிதா,
மடற்குழுப் பிதா,
வலைப்பதிவு பிதா
கணியில் முதன் முதலில் தமிழை எழுதின பிதா,
என்றெல்லாம் செல்லும். இன்னும் சொல்லப் போனால் பிதா இருக்கையில் மாதா யாராக இருக்கக் கூடும் என்ற சிந்தனை எழாமல் இல்லை.

தமிழ்நாட்டில் குடிசையில் பள்ளிக் கூடம்
நடத்துபவர்கள் கூட இன்றைக்கு
கல்வித் தந்தை என்று போட்டுக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு
இணைய தாசர்கள் இட்டுச் செல்லாமல் இருந்தால் சரி.//

:)