Thursday, October 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்......

விஞ்ஞான ரீதியாகவோ அல்லது சமூகத்தில் பெரிய சாதனைகள் புரிந்தோ, பெரிதளவில் மனித வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்தும் மேதைகளும் ஒரு விதத்தில் கடவுள் தன்மை கொண்டவர்களோ என்று சில சமயம் எனக்குத்தோன்றும்..... தங்கள் மனதில் தோன்றும் ஒரு ஒளியை நோக்கி அசராமல், தளராமல் தொடர்ந்து தங்களுக்கு சரியென்று தோன்றும் திசையில் பயணிக்கும் இவர்கள் தங்கள் உள்ளுணர்வின்படி செயல் புரிந்து சாதனைகள் செய்கிறார்கள்.

அப்படி என்னை மிகவும் அசத்தியவர்களில் ஒருவர் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ்.  பலவிதங்களில் அவர் வாழ்க்கையில் அசத்தியிருந்தாலும்,  அதில் மகுடம் வைக்கத்தகுந்தது - ஞான ஒளி தேடி இந்தியா வந்துவிட்டு,  பின்னர் இங்குள்ள நிலையைப் பார்த்து ஏமாற்றம் அடைந்து - நீம் கரோலி பாபாவும், (இவரைத் தேடித்தான் இந்தியா வந்தார் -  70 களில்) கார்ல்மார்க்சும் சேர்ந்து சாதித்ததைவிட தாமஸ் எடிசன் அதிகம் சாதித்தார் என்று தெளிந்து தன் ஊருக்கு  திரும்பிப் போய், தொழில்நுட்பத்தில் முழு மூச்சாக இறங்கி, ஆப்பிளை ஆக்கினார் பாருங்க....... அங்க நிக்கிறார்.....

இவரின் மறைவு, கணினி பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் ஏதோ ஒருவிதத்தில் நிச்சயம் தொடும்.


2005 ல் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையைக் கேட்டபின் நான் அன்று  பதிந்த பதிவிலிருந்து  சில வரிகள்.

///ஆப்பிள்காரர் பேச்சு உண்மையில் ரொம்ப சுவாரசியமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. சில பொன் துளிகள்:

  • நான் எந்தப் பட்டமும் பெற்றதில்லை. நான் ஒரு drop out. உண்மையில், பட்டமளிப்பு என்று நான் பங்கு கொள்ளும் விழா இதுவாகதான் இருக்கும்.

  • உங்களுக்கு எதுப் பிடிக்கிறதோ அதில் நம்பிக்கை வைத்து செய்யுங்கள். பிடித்தது எது என்று இன்னும் பிடிபடவில்லையென்றால் அது என்ன என்று தேடுங்கள். எனக்கு என்ன வேண்டும் என்று எனக்கே தெரியவில்லை என்று கிடைத்ததை வைத்துக் கொண்டு செட்டில் ஆகிவிடாதீர்கள். உள் மனசு சொல்வதைக் கேட்கப் பழகுங்கள். அதன்படி நடக்க முயலுங்கள்.

  • சென்ற வருடம் எனக்கு கான்ஸர் என்று முடிவானபின் என் வாழ்நாள் சில மாதங்களே என்றனர். அப்போதுதான் என் மனசில் நான் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி நிறைய இருப்பது புரிந்தது. வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பொதுவான, நிச்சயமான ஒன்று இறப்பு. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று புரிந்து கொண்டால் நம்மில் இருக்கும் பாதி குழப்பங்கள் தீர்ந்துவிடும். நாளை இறந்துபோய்விட்டால் என்ற கேள்வியை உங்கள் முன் வைத்துக் கொண்டால் பல சாதனைகளை உங்களையறியாமலேயே செய்துவிடுவீர்கள்.

  • உங்களுக்கு என்று பாதை வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்று வாழ்க்கை குறிப்பிட்ட அளவுதான். அதையும் பிறர் சொல்படி வாழ்ந்து வீணாக்காதீர்கள். புள்ளிகள் வைப்பது முக்கியம். அவற்றை எப்படி இணைப்பது என்று குழம்பாதீர்கள். புள்ளிகள் வைத்துவிட்டால் கோடுகள் தானே வந்து சேரும். ///////////

ஹ்ம்ம்..... என்ன ஒரு பிரமாதமான மனிதர் !!!


Saturday, August 27, 2011

Looks like democracy has prevailed after 12 days and I am happy to see that. Good sense prevailed on both the Government and the Team Anna to step forward a bit from their original respective adament stands and a middle path was found. But the whole episode throws up lots of questions. Along with the links that mark the great day of Victory of democracy, some more links here to think and reflect:

www.thehindu.com/todays-paper/article2405059.ece
www.thehindu.com/opinion/lead/article2379704.ece?homepage=true
However, for all of Arundhathi's scepticism, Arvind Kejariwal's response here comes across as someone who talks the Truth and talks genuinely. - www.thehindu.com/todays-paper/tp-opinion/article2413220.ece

http://kafila.org/2011/08/20/we-should-be-there-the-left-and-the-anna-moment/










Saturday, August 20, 2011

சில கேள்விகள்.....

அன்னா ஹசாரேயின் ஜன லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் விவாதத்துக்கு எடுத்துக்க்கொள்ளப்ப்ட வேண்டும். பலவித அலசல்கள், விவாதங்களுக்குப் பிறகு, ஒரு அழுத்தமான , வலுவுள்ள, சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், இப்போ சில கேள்விகள் எழுகின்றன.

இந்த ஜன லோக்பால் மசோதாவை அப்படியே மாற்றங்கள் இல்லாமல் எடுத்துக்கொள்ளும்படி முரண்டு பிடிப்பது எப்படி நியாயம் ஆகும்?. உதாரணமாக, தொண்டு நிறுவனக்கள் அனைத்தும் இந்த ஜன லோக்பால் எல்லையில் வரவில்லை. அர்விந்த் கேஜரிவால், அவை தனியாக வேறு வரம்பில் வரலாமே என்று கேட்கிறார். இதெப்படி நியாயம்? நீதித்துறை, பிரதம மந்திரி என்று எல்லாமே லோக்பால் வரம்பில் வர வேண்டும் என்கிறபோது தொண்டு நிறுவனங்களும் இதில் வருவதுதானே நியாயம்?

இரண்டாவது நெருடல் - இன்று டிவி சானல் ஒன்றில் பழைய அன்னா ஹசாரே சொற்பொழிவு ஒன்று பார்த்தேன். அவருடைய கிராமத்தில் முப்பத்தைந்து வருஷமாக தேர்தல் நடக்கவில்லையாம் - " ஒரே ஒரு முறை - அதுவும் வலுக்கட்டாயமாக நடத்தினார்கள்" என்றார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலையே அவசியம் இல்லை என்று ஒருவர் சொல்வது எனக்கு ஜீரணிக்க முடியவில்லை......... இது என்ன மாதிரி பாலிசி???

அன்னா ஹசாரேவை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன் என்று சொன்னது உண்மை. ஜன நாயக நாட்டில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்து தன வேண்டுகோளை முன்வைப்பவரை அரசு நடத்தியவிதம் சரியில்லை; அவர் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறது என்பது என் கருத்து. ஆனால் மேலே சொன்ன கேள்விகள் நெருடுகின்றன என்பதும் உண்மை.

Wednesday, August 17, 2011

அன்னா ஹசாரே



நான் அண்ணா ஹசாரேயை ஆதரிக்கிறேன் - எந்த நிபந்தனையுமின்றி !!!

இதுவரையில் யாருக்கும் எங்கும் லஞ்சம் கொடுக்காமல் - தொலைபேசி, ரேஷன் கார்டு, தண்ணீர், கார்பரேஷன் என்று எந்த வேலையாக இருந்தாலும் பொறுமையாக காத்திருந்து நேர்வழியிலேயே , நியதிகளைப் பின்பற்றி, லஞ்சம் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்துள்ளேன் என்று சொல்லிக்கொள்ளுவதிலும் பெருமிதம் அடைகிறேன்.

ஊழல் திமிலங்கள் நசுக்கப்படவேண்டும். அதேசமயம், தனிப்பட்ட முறையில் என்னைப் போன்ற சாதாரணர்கள் - உலகெங்கும் இன்று அன்னாவை ஆதரிக்கும், அலைமோதும் இந்தியர்கள் பலரும் இன்று லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதத்துடன், பெருமிதத்துடன் சொல்ல முடிந்தால், இந்தியாவைப்பற்றி என்றும் என்னுள் சுடர் விட்டு எரியும் நம்பிக்கை மேலும் வலுப்படும் !!!!

மாற்றங்கள் நிகழ்வது ஒரு புள்ளியிலிருந்து ........ நான் என்ற புள்ளி.......