Friday, September 16, 2005

யோசிமிட்டி நேஷனல் பார்க்கில்

திடீரென்று தமிழ் மணத்தில் எல்லோரும் போட்டோவாப் போட்டுத் தள்ளுகிறார்கள். என் பங்குக்கு.....

யோசிமிட்டி நேஷனல் பார்க்கில்


மலைப்பாறைதான். ஆனால் வெல்வெட் போல இல்லை?


யோசிமிட்டி மலைப் பாறைகள் தொடர். இந்த மலைக்குப் பெயர் Half dome - பார்த்தால் கொஞ்சம் நாமக்கல் ஹனுமார் மாதிரி இருக்கோ? ( நான் நாமக்கல் அனுமாரைப் பார்த்ததில்லை. கேள்வி ஞானம்தான்) அல்லது பெங்குவின் மாதிரியும் இருக்கு என்று எனக்குத் தோன்றியது.


வானவில் காமிராவுக்குள் வருமா என்று பார்த்தேன். அட, வந்துவிட்டதே..

Gliding - ஞாயிற்றுக்கிழமையானதால் மூன்று பேர் ஜாலியாக கிளைடிங் கிளம்பிவிட்டார்கள். கிளைடிங் போவதற்கு உயர்ந்த இடத்திலிருந்து கீழே லாகவகமாக ஜம்மென்று (!!) குதிக்க வேண்டும். உயர்ந்த பாறைமேல் நின்று கொண்டு பெரிய கிளைடிங் "பட்டத்தைத்" தூக்கிக் கொண்டு இவர்கள் ஒவ்வொருவராக ஆயத்தம் செய்வதை வேடிக்கைப் பார்க்க சுவாரசியமாக இருந்தது. ஆனால் இவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் செங்குத்தான பாறை மேல் பின்பக்கம் காண்பித்து நின்று கொண்டு இவர்களுக்கு உதவி செய்யும்போது எனக்குதான் ரத்த அழுத்தம் அதிகமாகியது. கொஞ்சம் சறுக்கினாலும்..... என்ற நினைப்பினால் - படத்தில் உள்ள பள்ளத்தாக்கைப் பாருங்கள். நான் சொல்லும் பயங்கரம் புரியும்.


கலிபோர்னியாவில் Gold Rush பற்றி நிறையக் கேள்விபட்டுள்ளோம். இது வேற மாதிரி தங்கம். சூரியன் மறையும் நேரத்தில் வானத்தில் தெரியும் வர்ணஜாலங்களே தனி. ஆரஞ்சு வர்ணக் கலவை இந்தப் பாறை மலை மீது பட்டு பாறை மலை, " தங்க" மலையாகிறது.கரடிக்குப் பயந்தவங்க என் மேலே விழுங்க..... சூரியோதயத்தை ரசித்தவாறு இந்த இடத்தில் நாங்கள் மட்டும்தான். சுற்றிலும் வனத்தில் இருக்கும் மெல்லிய சப்தங்கள் - யோசிமிட்டி நீர்வீழ்ச்சிகள் விழும் ஓசை மட்டுமே என்று ரசித்துக்கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் திடீரென்று யாரோ எதையோ உருட்டும் சப்தம். திரும்பிப் பார்த்தால், கரடி - குப்பைத் தொட்டியைக் கிளறி உணவு தேடிக்கொண்டிருந்தது. ஹை.. கரடி என்று முதலில் ஆர்வம் ஏற்பட்டாலும், அதன் பசியில் நாங்கள் கன்ணில் பட்டால்... என்ற பயம் ஒரு வினாடி கழித்துதான் வந்தது. கரடியைக் கண்டால் அசையாமல் நிற்க வேண்டும் என்று எப்போதோ எங்கேயோ படித்தது நினைவுக்கு வர, திடீரென்று எல்லோரும் அப்படியே நின்ற இடத்தில் கப்சிப். - statue!
படங்கள் எடுத்தது.
விஜய் சுந்தர் ஸ்ரீனிவாசன்; வெங்கட் ஸ்ரீனிவாசன்; அருணா ஸ்ரீனிவாசன்; ஸ்ரீனிவாசன்

9 comments:

Mandy said...

Yet Another Browser Option Coming Down The Pipe
Geordan Hankinson - Thursday, September 15th, 2005 | 10:53AM From the makers of Firefox.
I'm just looking around and found you....nice little blog it is too :-).. most of my time goes on my Spyware Scaner related site Spyware Scaner is my passion...lol

Thangamani said...

நல்ல படங்கள்!

Desikan said...

படங்கள் செய்திகள் நன்றாக இருந்தது. 10 வருடம் முன்பு நான் யோசிமிட்டி போயிருக்கிறேன். ராத்திரி Camp fire கூத்து எல்லாம் அடித்தோம். பிறகு எங்கள் tentல் தூங்கிவிட்டோம். அப்போது ஒரு கரடி அங்கு வந்து.. அதை பிறகு என் வலைப்பதிவில் எழுதுகிறேன்.
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

Ramya Nageswaran said...

படங்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றன அருணா.

Aruna Srinivasan said...

தங்கமணி, ரம்யா, படங்கள் நல்லாயிருக்கா? நன்றி. ஆனாலும் தங்கமணியும் இன்னும் பலரும் படம் காட்டுவதுமாதிரி இன்னும் நிறைய தொழில்முறை ( professionalism) கற்க வேண்டும்.

தேசிகன், கரடி தரிசனம் உங்களுக்கும் ஆச்சா?
//எங்கள் tentல் தூங்கிவிட்டோம். அப்போது ஒரு கரடி அங்கு வந்து....//

அப்புறம் என்ன ஆச்சு? விரைவில் வலைப்பதிவில் போடுங்கள் :-)

துளசி கோபால் said...

அருணா,

சூப்பர் படங்கள்!!!!

எனக்கும் அங்கெபோய் பார்க்கணும் அந்தக் கரடியை.

கொஞ்சம் வெயிட் பண்ணச் சொல்லுங்க:-)

ஜேகே - JK said...

கொஞ்ச நாளைக்கி முன்னே நானும் யொசமிட்டி போயிருந்தேன்.
அங்கே Glidinலாம் செய்யலாம்னு அப்போ தெரியாது...தெரிந்திருந்தால் நானும் கிளைடிருப்பேன்...

Aruna Srinivasan said...

துளசி, அதுக்கென்ன, இந்தக் கரடி இல்லேன்னா இன்னொன்று வராமயாப் போயிடும்? அதுவும் அந்தக் கோடியிலிருந்து இவ்வளவு தூரம் வரும் துளசியை சந்திக்க? :-)

ஜேகே, ஸ்கை டைவிங் எல்லாம் பண்றீங்க ! உங்கப் பதிவைப் படிச்சு அசந்து போயிட்டேன் :-) இப்பப் புரியுது. நான் பார்த்த கிளைடிங் ஆசாமி எப்படி பயமில்லாமல் செங்குத்துப் பாறை மீது நின்றிருந்தார் என்று. பின்னே? இப்படி " வாழ்வே மாயம்" ரீதியில் சொல்லி உருவேத்தினா, பயம் என்பதே காணாமல் போயிடாதா?

வல்லிசிம்ஹன் said...

கரடி நிஜமா வந்ததா. இல்ல கரடியா:)
படங்கள் சூப்பர் அருணா.
இப்போ அங்க போயிருக்கீங்களா.
தொடர் பதிவாப் போடுங்கப்பா.