Friday, January 02, 2004

நேற்று முழுவதும் யாரைப் பார்த்தாலும், அல்லது தொலைபேசியை எடுத்தவுடன் மறுமுனையில், ஒரே மலர்ச்சியுடன் " ஹாப்பி நியூ இயர்" அல்லது " புத்தாண்டு வாழ்த்துக்கள்" மயம்தான். வருடப் பிறப்பன்று ஆபீஸ்களில் வேலையே ஓடாது. காலையில் வாழ்த்து சொல்லி கையை நீட்டினால் சாயிந்தரம் வீடு திரும்பும்வரை கையை மடக்கவே நேராது என்று பலர் ஜோக் அடிப்பது வழக்கம்.

இந்த முறை சுற்றிலும் கவைத்தபோது ஒன்று தோன்றிற்று. உலகெங்கும், மகக்ள் அனைவரும் ஒரே மாதிரியாக ஒரு தினத்தில் மகிழ்ச்சியோடு ஒருவரையருவர் வாழ்த்திக்கொள்ளும் ஒரே "பண்டிகை" தினம் இந்த ஆங்கில புத்தாண்டுதான். ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண், எந்த எந்தவித வித்தியாசமும் இல்லாமல் நேசக்கரம் நீட்டுவது இந்த ஒரு நாளில்தான். என்ன சொல்கிறீர்கள்?

பி. கு: அடுத்தவீட்டில் ஒரு மாமி, வாசலில் வழக்கமாக பண்டிகை நாளில் போடும் கோலத்தைப் போட்டிருந்தார். ஆங்கிலமாவது ஒன்றாவது? அவரைப் பொறுத்தமட்டில் பொங்கல், தீபாவளியோடு சேர்த்து இந்த ஆங்கில வருடப்பிறப்பும் ஒரு பண்டிகையாகிவிட்டது. சரிதான். குதூகலம் எந்த உருவில் வந்தால் என்ன? மொத்தத்தில் மகிழ்ச்சியை / சினேக பாவத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.

No comments: