Friday, October 03, 2003

உலக வர்த்தக ஸ்தாபனம் ஏன் அவசியம்?


என் பார்வையில் சில விளக்கங்கள்.
தெரிந்த ஒருவருக்கு ஒரு டார்ச் லைட் வாங்க வேண்டியிருந்தது. ஒரு கடையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மலிவாக இருந்தன. மலிவாக கிடைத்ததே என்று வாங்கி கொண்டு வந்தாயிற்று. னால் எண்ணி இரண்டே மாதம். ஒரு நாள் சார்ஜ் செய்ய பிளக்கில் பொருத்தியபோது பட்டென்று அணைந்து உயிரை விட்டது.

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து இறக்குமதி லேபிள் ஒட்டிய ப்பிள் வாங்கி வந்தேன். னால் உள்ளே ஒரே அழுகல். சுவை வேறு இல்லை. அடுத்த முறையிலிருந்து தேடிப்பிடித்து வழக்கமாக வாங்கும் பழைய பழங்களையே வாங்க ரம்பித்தேன்.
இது போல் “மலிவு” இறக்குமதி சாமான்களின் தரம் பற்றி அவ்வபோது காதில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது. இறக்குமதி சமாசாரங்களால் நம் தொழில்கள் நசிந்து விடுகின்றன என்று அவசரப்பட்டு முடிவுக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை. எந்த ஒரு பொருளிலும் தரம், விலை இரண்டும் முக்கிய விஷயங்கள். இவைதான் வர்த்தகத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.
தரம் குறைந்த சாமானை மலிவு விலையில் வாங்குவதைவிட கொஞ்சம் அதிகம் கொடுத்தாலும் நல்ல தரமான உழைக்கும் சாமான்களை மக்கள் தேடி செல்லும்போது இந்த “மலிவு” சாமான்கள் - உள்ளூரோ, வெளியூரோ - தன்னால் சந்தையிலிருந்து மறைந்துவிடாதா?

உலகமயமாக்குதல், மற்றும் உலக வர்த்தக ஸ்தாபனம் இவற்றில் கொள்கை ரீதியில் எனக்கு நம்பிக்கை உண்டு.

இரண்டு காரணங்கள்.

ஒன்று, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போன்ற அடிப்படை நல் நெறிகளில் எனக்கிருக்கும் நம்பிக்கை. ஒரு குடியிருப்பில் இருக்கும்போது அங்கே அனைவரும் ஒன்று சேர்ந்து நிறுவும் அமைப்பில் பங்கு கொள்ளாமல் விலகி தனித்து நிற்பதில் எனக்கு எப்படி உடன்பாடு இல்லையோ அதுபோல்தான் இதுவும். தவிர டு மேய்கிறதே என்று ரோஜா தோட்டத்தை இரும்பு சுவர்களுக்குள் வளர்க்க முடியுமா? கட்டுபாட்டுடன் பொத்தி வைத்த எதுவும் சரியான வளர்ச்சிய்டையாது என்பது வாழ்வின் நிதர்சனம். தனி மனித சுதந்திரம் போல் வர்த்தகத்திலும் சுதந்திரம் - அதாவது Free Trade – இருக்க வேண்டும் என்பது என் கருத்து. அனைவருக்கும் பயன்படும் வண்ணம் தோட்டமும் திறந்து இருக்க வேண்டும். அதே சமயம், டு மேயாமல் இருக்க வேலியைப் போட்டு ஒரு காவலாளியையும் போட வேண்டும். காவலாளி எந்த மாதிரி பாதுகாக்க வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைக்குதான் free trade பற்றி இவ்வளவு விவாதிக்கிறோம். னால் முன் காலத்தில் உலகளவில் இந்தியாவிற்கு பல வர்த்தக தொடர்புகள் இரூந்ததற்கு சரித்திர சான்றுகள் பல உள்ளன. டில்லி பல்கலைகழகத்தில் மூன்று வருடங்கள் முன்பு மாதவி தம்பி என்கிற சரித்திர ராய்ய்சியாளர் ஒருவர், 16ம் நூற்றாண்டிலிருந்து பல காலம் தொடர்ந்து வந்த சீன –இந்திய வர்த்தக தொடர்பைப் பற்றி தன் ராய்ச்சியில் விரிவாக விவரித்துள்ளார். இந்த ராய்ச்சியின்படி, சீனாவுடன் மட்டுமல்ல, இந்தியாவிற்கு ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனும் அந்த காலத்தில் வர்த்தக தொடர்பு இருந்தது. சிய நாடுகளுக்குள்ளே இப்படி இருந்து வந்த வர்த்தக தொடர்பில்தான் பின்னர் ஐரோப்பிய வியாபாரிகளும் - போர்சுகீசியர்கள், மற்றும் கிழக்கிந்திய கம்பெனி உள்பட -கலந்து கொண்டனர்.
னால் இப்படி வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியின் சரித்திரம் திரும்பக்கூடாதே என்பதுதான் இந்தியாவில் இன்று உலகமயமாக்குதலை எதிர்க்கும் பலரின் கவலை.

அப்போதைய நிலைமைக்கும் இப்போதுக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. இப்போது போல் அப்போது மக்களாட்சி கிடையாது. மக்கள் விழிப்புணர்வும் கிடையாது. அன்று இருந்ததெல்லம் மன்னராட்சிகள். குட்டி நாடுகளாக சிதறியிருந்த பெரும்பாலான ட்சிகளில், ங்கிலேயருக்கு உதவி செய்து, தங்கள் தோலைப் பாதுகாத்துக்கொள்ளும் எண்ணம்தான் அன்றைய ட்சியாள்பவர்களிடமிருந்தது. அதனால் பிளவை உண்டாக்கி ட்சியைப் பிடிப்பது ங்கிலேயருக்கு சுலபமாகிற்று. மக்களுக்கு பதில் சொல்லவோ, மக்கள் எண்ணம் அறியவோ வழியில்லாத சமயம் அது.

னால் இன்று?

சமீபத்தில் நடந்து முடிந்த கன்கூன் மாநாடே ஒரு உதாரணம். வளர்ந்த நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஏழை நாடுகள் சம்மதிக்காததால்தானே பேச்சு வார்த்தை நிறைவு பெறாமல் போய்விட்டது? மற்றொரு உலக அமைப்பான ஐ. நா சபையிலாவது அமெரிக்கா தன் வீட்டோ ஓட்டை உபயோகிக்கலாம். னால் WTOல் எல்லா உறுப்பினர்களும் ஒன்றுதான். ஒப்பந்தமாகும் வர்த்தக நியதிகளுக்கு அனைவரும் கட்டுபட வேண்டும். உறுப்பினர் நாடுகள் ஏதேனும் வரம்புகளை மீறினால் அல்லது ஒப்பந்தப்படி நடந்து கொள்ளவில்லையென்றால் இதற்கென்று உள்ள Dispute Settlement Body என்று இந்த உலக ஸ்தாபனத்தில் உள்ள அமைப்பில் முறையிடலாம். இதில் அமெரிக்காவிற்கு எதிராக முறையிட்டு இந்தியா பல கேஸ்கள் வென்றுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்: அந்த காலத்தில், ஐரோப்பிய வியாபாரிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக ட்சியை பறி கொடுத்தது இந்திய மன்னர்கள்தாம். அதே ஐரோப்பியர்கள் சீனாவில் இந்த அளவு க்கிரமிக்க முடியவில்லையே? – சீனாவுடன் ங்கிலேயர்களின் ஓபியம் போரும் அதன் விளைவாக அவர்கள் பிடித்துக்கொண்ட ஹாங்காங் தவிர, ஐரோப்பியர் சீனாவில் நுழைய முடியாதத்ற்கு சீனர்களின் ஜாக்கிரதை உணர்வு, ஒற்றுமை, அல்லது சாமர்த்தியம் போன்றவை முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும்.
கவே, திரை கடலோடியும் திரவியம் தேடுவது நமக்கு புதிதல்ல. னால், வர்த்தக பரிமாற்றங்களில் அரசியல் நுழைந்து ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கு குந்தகம் வராமல் அதே சமயம் லாபமாக வர்த்தகம் செய்வதும் இன்றைய மக்களாட்சியில் சாத்தியமான ஒன்றுதான். வர்த்தக பரி மாற்றங்கள் நடக்கும்போது அறிவு சார்ந்த பரிமாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு எழுகிறது. பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போது நமது சிந்தனைகளும் விசாலப்படும். நாம் கற்றுகொள்ளவும் நாம் அறிந்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் மனிதனின் இயற்கையான பரிணாம வளர்ச்சி.

உலகமயமாகுதலில் என் நம்பிக்கைக்கு இரண்டாவது காரணம், வியாபாரம் விருத்தியாகும் வாய்ப்பு. சுதந்திரமடைந்ததிலிருந்து நாம் செய்த பொருட்களை நமக்குள்ளேயேதான் விற்பனை செய்து வந்துள்ளோம். தயாரித்த அத்தனைப் பொருட்களையும் வாங்கக்கூடிய மக்கள் தொகை பெருகிய சந்தை நமது என்பது வேறு விஷயம். ஏற்றுமதி இறக்குமதி கட்டுபாடுகளினாலும், தாங்கள் செய்வதையெல்லாம் வாங்குவதைத் தவிர இந்திய சந்தைக்கு வேறு வழியில்லை என்ற மனோபாவம் உற்பத்தியாளர்களுக்கு இருந்ததாலும் சாமான்களின் தரம் உயர வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதோடில்லை. பல்வேறு காரணங்களினால் தேவையைவிட உற்பத்தி குறையும்போது தட்டுபாடும் இருக்கும். பல வருடங்கள் முன்பு எங்களுக்கு ஒரு ஸ்கூட்டர் “அலாட்மெண்ட்” கிடைத்தபோது எங்களுக்கு தேவையில்லாததால் அந்த அலாட்மெண்டிற்கு எக்கச்சக்க டிமாண்ட் இரூந்தது இன்னும் நினைவிருக்கிறது. இன்றைய தலைமுறையினரிடம், இப்படி கார், ஸ்கூட்டர், தொலைபேசி மற்றும் எந்த ஒரு சாமானுக்காவது “அலாட்மெண்ட்” என்று சொல்லிப்பாருங்கள். புரியாமல் விழிப்பார்கள். இன்று சந்தையில் கிடைக்கும் சாமான்களின் தரமும், தினுசுகளும் நம் வாழ்முறையையே மாற்றுகின்றன.
வெளிநாட்டு சாமான்கள் இங்கே வந்து நம் தொழில்களை நசித்து விடுகிறது என்று பார்க்காமல் நமது உற்பத்திகளுக்கு வெளியில் சந்தை கிடைக்கிறதே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன் வந்த ஒரு புள்ளிவிவரப்படி, இந்தியாவிற்கு சீனா ஏற்றுமதியைவிட, இந்தியா சீனாவிற்கு செய்த ஏற்றுமதி அதிகம். இங்கே வந்து கடை விரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. னால் அதேபோல் வெளி நாட்டில் முதலீடு செய்து அங்கே தொழில் செய்யும் இந்திய “பன்னாட்டு” நிறுவனங்களும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இந்தியாவின் ரம்பகால வர்த்தக தூண்களான டாடா, பிர்லா நிறுவனங்கள் தவிர நவீன நிறுவனங்களான NIIT, Wipro, Infosys போன்றவையும் வெளி நாடுகளில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். பல திசைகளில் உற்பத்தி பெருகும்போது வேலை வாய்ப்பும் பெருகும் அல்லவா?
வெளி நாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் நம் இந்திய லேபிள்களைப் பார்க்கும்போது பெருமையாகதான் இருக்கிறது. இப்படி நம் சாமான்களுக்கு வெளி நாட்டில் இருக்கும் சந்தைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். நம் பொருட்களை வெளியே விற்கலாம் என்றால் வெளி பொருட்கள் இங்கே வருவதைத் தடுப்பது முறையில்லையே.

ஆனால், எது, என்ன, எங்கே, எவ்வளவு, எப்படி – மற்றும் சமூக, சரித்திரப் பின்னணி இவற்றை ராய்ந்து முடிவெடுப்பது மிக முக்கியம். 1996ல் முதல் அமைச்சர்கள் மாநாடு சிங்கப்பூரில் தொடங்கியபிறகு இந்த 7 வருடங்களில் இந்தியா எவ்வள்வோ கற்றுகொண்டுள்ளது. அதிகாரிகள் ஒவ்வொரு நியதியையும் ஒப்பந்தத்தையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு அலசுகிறார்கள். நமக்கு பாதகமாகவோ ஒருதலைபட்சமாகவோ இல்லாமல் இருப்பதற்காக நிறைய லோசனைகள் நடக்கின்றன.

உலக வர்த்தக ஸ்தாபனத்தில் பங்கு கொள்வதால் வளர்ந்த நாடுகள் திணிக்கும் சட்டங்கள் எல்லாவற்றிற்கும் வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் உட்பட வேண்டும் என்ற ஒர் தவறான கருத்தும் நிலவுகிறது. தவிர, உலக வர்த்தக ஸ்தாபனத்தில் வளர்ந்த நாடுகளின் மேம்போக்கான அணுகுமுறையினால் ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பது இன்னொரு கருத்து.
உதாரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் வேளாண்மை சலுகைகளினால் அங்கே மலிவாக உற்பத்தி செய்த வேளாண்மைப் பொருட்கள் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்டுகின்றன என்பதும், இதனால் இந்த நாடுகளில் உள்ள விவசாயிகளின் உற்பத்திக்கு சந்தையில்லாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்ய நேருகிறது என்பதும் ஒரு முக்கிய குற்றச்சாட்டு.

எளியவர்கள் அடிபடுவது நிச்சயம் கவலைக்கிடமான, மனதை உலுக்கும் விஷயம்தான். சந்தேகமேயில்லை. இந்த கன்கூன் மாநாட்டின்போது கூட கொரியாவைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் தற்கொலை மாநாட்டின் கவனத்தை ஈர்த்தது. அடிப்படையில் அனைவருக்கும் லாபமாக இருக்க வழி செய்யும் கொள்கையின் செயல்பாடுகளில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து இப்படி ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க என்ன செய்ய வேண்டும் என்று க்கப்பூர்வமாகதான் சிந்திக்க வேண்டுமே தவிர, கொள்கையே தவறு என்று என்ணுவது சரியல்ல. ஒரு நாட்டில் ஜனநாயக முறைகளை சரியாக உபயோகிக்கவில்லை என்பதற்காக ஜனநாயக முறையே சரியில்லை என்று சொல்ல முடியுமா?

இந்த வர்த்தக அமைப்பு அடிப்படையில் ஜனநாயக கொள்கை ரீதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய அவதாரமான GATT 1947ல் ரம்பித்தபோது இந்தியா இதன் ரம்ப கால உறுப்பினர். உலகளவில் நட்புறவோடு செய்யப்படும் வர்த்தகத்தின் பரஸ்பர தாயங்களை மனதில் கொண்டுதான் நேருவின் அரசு இதன் ரம்ப உறுப்பினராக சேர முடிவு செய்தது. இன்று GATT ன் மறு உருவான WTO ல் 146 உறுப்பினர்கள். அனைவரும் கையெழுத்திடாமல் எந்த ஒரு ஒப்பந்தமும் நிறைவேற முடியாது. னால் ஒரு பிரச்சனை – 146 நாடுகளும் இந்த பேச்சு வார்த்தையில் நேரடியாக கலந்து கொள்வதில்லை. சுமார் 30 நாடுகள் – இந்தியா உள்பட - ஒரு green room கூட்டத்தில் கலந்து பேசி பின்னர் வரும் முடிவை மற்ற நாடுகளுக்கு ஒப்புதலுக்கு தெரிவிப்பார்கள். னால் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டால்தான் முடிவுகள் / லோசனைகள் ஏற்றுகொள்ளப்படும். 146 நாடுகளும் ஒவ்வொருவராக தங்கள் விவாதங்களை அவையில் சமர்ப்பிக்கத் தொடங்கினால் 5 நாள் போதாது என்பதால் இந்த ஏற்பாடு. னால் அதிகாரிகள் அளவில் ஜெனிவாவில் இருக்கும் இந்த அமைப்பின் தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களின் பிரதி நிதிகளுடன் நடந்து கொண்டுதான் இருக்கும்.
மொத்தத்தில் எல்லா நாடுகளுக்குமே, இந்த உலக ஸ்தாபனத்தில் சேர்ந்து, தங்கள் உற்பத்திகளுக்கு / சேவைகளுக்கு உலக சந்தையில் இடம் பிடிப்பதுதான் ஒரே குறிக்கோள். மாறி வரும் உலக சமூக, அரசியல் மற்றும் வர்த்தக பின்னணியில் இன்று தனித்தீவாக செயல்படுவதில் லாபமில்லை. இது புரிந்துதான் இத்தனை நாளும் ஒதுங்கியிருந்த சீனாவும் இந்த அமைப்பில் இரண்டு வருடம் முன்பு சேர்ந்துவிட்டது.

இந்த அமைப்பில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கருதப்ப்ட்ட விஷயங்கள் பல. வேளாண்மை, டெக்ஸ்டைல், வெளி நாட்டு முதலீடுகள், Intellectual property rights என்று பல சமாசாரங்கள். இதில் யார் யாருக்கு என்னென்ன கோரிக்கைகள் மற்றும் ட்சேபங்கள் என்று சுருக்கமாக பார்க்கலாம். ஒரு சௌகரியத்திற்காக, அவர்கள் ( வளர்ந்த நாடுகள்) - நாம் ( வளரும் மற்றும் ஏழை நாடுகள்) என்று குறிப்பிடலாம். இவற்றை விளக்கமாக சொல்வதானால் பல நூறு பக்கங்கள் வேண்டும். கீழே சின்னதாக கோடி காட்டியுள்ளேன். அவ்வளவுதான்.

1. அவர்கள் கேட்பது என்ன?
வளரும் மற்றும் ஏழை நாடுகளில் நிலவும் இறக்குமதி வரிகள் மற்றும் தீர்வுகள் அல்லாத வேறு சில தடைகள் படிப்படியாக நீக்கப்பட்டு அவர்கள் பொருட்களுக்கு அந்த சந்தைகள் வேண்டும். நம் நாடுகளில் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் வேலை செய்வதால் குறைந்த விலையில் நாம் தயாரித்து அவர்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றும் அவர்களுக்கு முறையீடு உள்ளது.

2. நாம் கேட்பது என்ன?

வளர்ந்த நாடுகளில் கொடுக்கப்படும் வேளாண்மை சலுகைகள் போன்றவை நீங்கி அவர்கள் நம் நாடுகளில் அடிமாட்டு விலைக்கு விற்பதைத் தடுக்க வேண்டும். நம் சாமான்களை அவர்களிடம் விற்கும்போது தீர்வு இல்லா மற்ற காரணங்களினால்(Non-Tariff) தடைகள் போடுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் நம்மை நம் விதிமுறைகளைத் தளர்த்த சொல்லி வற்புறுத்தாமல் அரசியல் மற்றும் சமூக/பொருளாதார பின்னணிகளின் அடிப்படையில் நாம் அவர்களுக்கு சரிநிகர் இல்லையென்பதால் நமக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்கிறோம்.

3. எவ்வளவு விட்டுகொடுக்கப்பட்டுள்ளது?

மருந்து பொருட்கள் மற்றும் காப்புரிமை (patent) விஷயத்தில் அவர்கள் நமக்கு சலுகைகள் அளித்துள்ளார்கள். பதிலாக டெக்ஸ்டைல் விஷ்யத்தில் வளர்ந்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்ய இன்ன நாட்டிலிருந்து இவ்வளவுதான் என்று சில quaotas வைத்துள்ளார்கள். அவற்றை அவர்கள் இன்னும் சில காலம் தொடர நாம் ஒத்துகொண்டுள்ளோம். இதில், இந்தியாவிற்குரிய quota அளவிற்கு கீழேயே நம் ஏற்றுமதி அளவு இருப்பதால், இந்த “விட்டுகொடுத்தலில்” இந்தியாவிற்கு குறிப்பாக நஷ்டம் ஏதும் இல்லை.

4. ஆதாயங்கள் என்ன?

உலகளவில் வர்த்தகம் பெருகும்போது பொருளாதாரம் பரவலாக மேம்படும். ஏழை நாடுகள் தங்கள் ஏழ்மையிலிருந்து விடுபட வாய்ப்பு பெருகும்.

5. நஷ்டங்கள் என்ன?

உண்மையான கொள்கை ரீதியில் சரியாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்கள் அவற்றை மதித்து நடந்தால் நஷ்டம் ஏதுமில்லை. னால் ஒருவரையொருவர் சுரண்டும் அல்லது வலியோர் எளியோரை ஏய்க்கும் மனோபாவம் நுழைய நேருமானால் எல்லாப் பக்கங்களிலும் ஏமாற்றமே மிஞ்சும்.

கான்கூனில் வளர்ந்த நாடுகள் பெருந்தன்மையாக நடந்து கொள்ளாததை நியூயார்க் டைம்ஸ் வன்மையாக கண்டித்து தலையங்கம் எழுதியுள்ளது. அவர்கள் தங்கள் வேளாண்மை சலுகைகளைக் குறைத்திருந்தால் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் தங்கள் நியாயமான கோரிக்கைக்கு வெற்றி என்று கொண்டாடலாம். அப்படி நடக்கவில்லையே? tug of war ல் இருபுறமும் இல்லாமல் கயிறு பிய்ந்து தொங்குவதுபோன்று கிவிட்டது. னால் அந்த கயிறு ஏழை நாடுகளின் கழுத்தில் வேறு அல்லவா இறுக்குகிறது?
உலக வர்த்தகத்தில் தங்கள் உற்பத்திக்கு வெளியே சந்தை கிடைப்பதாலும் உற்பத்தி பெருகி வேலை வாய்ப்புகள் பெருகுவதாலும் ஏழை நாடுகளுக்கு இது அடிப்படையில் லாபம்தான். னால் இது காயத்தில் சரிசமமான பேலன்ஸ¤டன் காற்றில் பறப்பது போன்ற சமாசாரம். பேலன்ஸ் சரியாக இருந்துவிட்டால் கவலையில்லை. இல்லாமல் போனாலோ. . . . ?

வர்த்தக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 1996 சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் கோ சோக் டாங் குறிப்பிட்டார். “ Like a cyclist on an upward slope, if we stop peddling steadily, we will eventually lose our momentum and fall back down.”

அடிப்படையில் இதுதான் முக்கியம். ஏட்டிக்கு போட்டி என்றில்லாமல் உறுப்பினர் நாடுகளுக்கிடையே ஒரு புரிந்துணர்வு இருக்க வேண்டும். வளர்ந்த நாடுகள், ஏழை மற்றும் வளரும் நாடுகளின் நிலைமையை புரிந்து கொண்டு செயல்பட்டால்தான் இந்த வர்த்தக ஸ்தாபனத்தின் செயல்பாடுகளுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கும். இல்லாவிட்டால் பற்கள் இல்லாத பலவித உலக மையங்கள் வரிசையில் இதுவும் சேர்ந்துவிடும்.

No comments: