Saturday, August 20, 2011

சில கேள்விகள்.....

அன்னா ஹசாரேயின் ஜன லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் விவாதத்துக்கு எடுத்துக்க்கொள்ளப்ப்ட வேண்டும். பலவித அலசல்கள், விவாதங்களுக்குப் பிறகு, ஒரு அழுத்தமான , வலுவுள்ள, சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், இப்போ சில கேள்விகள் எழுகின்றன.

இந்த ஜன லோக்பால் மசோதாவை அப்படியே மாற்றங்கள் இல்லாமல் எடுத்துக்கொள்ளும்படி முரண்டு பிடிப்பது எப்படி நியாயம் ஆகும்?. உதாரணமாக, தொண்டு நிறுவனக்கள் அனைத்தும் இந்த ஜன லோக்பால் எல்லையில் வரவில்லை. அர்விந்த் கேஜரிவால், அவை தனியாக வேறு வரம்பில் வரலாமே என்று கேட்கிறார். இதெப்படி நியாயம்? நீதித்துறை, பிரதம மந்திரி என்று எல்லாமே லோக்பால் வரம்பில் வர வேண்டும் என்கிறபோது தொண்டு நிறுவனங்களும் இதில் வருவதுதானே நியாயம்?

இரண்டாவது நெருடல் - இன்று டிவி சானல் ஒன்றில் பழைய அன்னா ஹசாரே சொற்பொழிவு ஒன்று பார்த்தேன். அவருடைய கிராமத்தில் முப்பத்தைந்து வருஷமாக தேர்தல் நடக்கவில்லையாம் - " ஒரே ஒரு முறை - அதுவும் வலுக்கட்டாயமாக நடத்தினார்கள்" என்றார். ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தலையே அவசியம் இல்லை என்று ஒருவர் சொல்வது எனக்கு ஜீரணிக்க முடியவில்லை......... இது என்ன மாதிரி பாலிசி???

அன்னா ஹசாரேவை நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன் என்று சொன்னது உண்மை. ஜன நாயக நாட்டில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்து தன வேண்டுகோளை முன்வைப்பவரை அரசு நடத்தியவிதம் சரியில்லை; அவர் வேண்டுகோளில் நியாயம் இருக்கிறது என்பது என் கருத்து. ஆனால் மேலே சொன்ன கேள்விகள் நெருடுகின்றன என்பதும் உண்மை.

No comments: