Friday, September 01, 2006

What is missing?

"...ரொம்ப வயலண்ட் படம்... யோசிச்சு சொல்லுங்க, வரணுமா என்று..." என்று குடும்பத்தில் இருக்கும் இளைய தலைமுறைகள் பெரிசுகளை கொஞ்சம் எச்சரித்தார்கள். அதனால் என்ன.. இந்த காலத்துலே எந்த படத்துலேதான் டிஷ்யூம்..டிஷ்யூம் இல்லேன்னு? கேள்வி கேட்டு கிளம்பியாச்சு.

முதல்லே ஒரு விரலைப் பாத்தப்போ " சரி.. இதோட போச்சு.. " 'பயங்கரக் காட்ச்சிகள்' என்று நினைத்தேன். ... ஒரு அரை மணி பொறுத்து புரிந்து போச்சு... பாக்கி 2 மணி நேர சொச்சம் எந்த ரேஞ்சுலே இருக்கப்போகிறதென்று.

ஆனாலும் ஒரு நம்பிக்கை... கமல் படமாச்சே... கொஞ்சமாவது Fun அல்லது ஒரு ஆழம் இருக்குமே என்று.....ஹ¥ம். எந்தப் படத்துலேயும் சரி.... கடைசியிலே என்ன ஆகும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஏதோ ஒரு பயங்கர சஸ்பென்ஸ்... யார் இப்படி திட்டம் போட்டாங்க... ஏன்... என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடி காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இடைவேளைக்கு முன்னேயே சஸ்பென்ஸ் சுத்தமா போச்சு. குற்றவாளி தெரிந்து போனதும் சுவாரசியம் போய்விட்டது.

த்ரில்லர் என்றால், கதையில் ஒரு plot... அழுத்தம், ஆழம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். தவிர, திரில்லர் என்றாலும் ஒவ்வொரு கொலையையும் graphic ஆக காண்பிக்காமல் ஆங்காங்கே ஒரு subtlity இருந்திருக்கலாம்.

சொல்வதைவிட, சொல்லாமல் விடுவது கலை.

'பயங்கர' காட்சிகளைத் தவிர்த்து பார்த்தாலும் ஆழமாக ஒரு Plot, இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. Flat ஆக இருந்த மாதிரி பட்டது எனக்கு. " Motive, Mr. Watson...?" என்று கேட்க வேண்டும் போல ஒரு உணர்வு. ஒரு psycho படம் is not my cup of tea. ( கதையை கேட்டுவிட்டு சினிமாவுக்கு போவது என் வழக்கமில்லை).

ஆனால் ஆங்காங்கே சில காட்சிகளில் தெரியும் சமூக அக்கறை - எ.கா: ஜெயிலில் அந்த இரு கைதிகள் நடத்தப்பட்ட முறை குறித்து காவல் துறை அதிகாரிகளை டிசிபி ராகவன் கண்டித்து கேட்கும் இடம் - அவசியம் சொல்லப்பட வேண்டிய விஷயங்கள் என்று தோன்றியது. Psychos எப்படி உருவாகிறார்கள் என்ற முறையில் இது ஒரு அலசப்பட வேண்டிய சப்ஜெக்ட். ஆனாலும் something is still missing.

அதனால் என்ன....? "வேட்டையாடு, விளையாடு" பெரிய வெற்றிப் படம்; வசூல் பிய்த்துக்கொண்டு போகிறது என்று சொல்கிறார்கள். வாழ்த்துக்கள் :-)

பி.கு: மதுமிதாவின் "சுபாஷிதம்" புத்தகத்திற்கு முக்கிய ரோல் :-) வாழ்த்துக்கள் மதுமிதா !!

4 comments:

G Gowtham said...

உங்கள் கருத்துத்தான் பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கும் என்பது என் கணிப்பு.
'இண்டர்வெல்லுக்குப் பிறகு ஜோதிகாவுடன் ஒரு மெலடி சாங் இருக்கட்டும். அப்பத்தான் பெண்களுக்குப் பிடித்துப் போகும்' என கமல் இயக்குநரிடம் சொன்னதாக கேள்விப்பட்டேன்.
அவ்வளவு எளிதாக ஏமாறுபவர்களா நம் பெண்கள்?!

//மதுமிதாவின் "சுபாஷிதம்" புத்தகத்திற்கு முக்கிய ரோல்//
இதை சாக்காக வைத்து மதுமிதாவின் பேட்டி, புகைப்படத்துடன் அந்தப் புத்தகம் பற்றிய இரண்டு பக்கக் கட்டுரையே அடுத்த வாரம் குங்குமத்தில் வெளியாகிறது!

மணியன் said...

மதுமிதாவின் புத்தகம் படத்தில் வந்ததா ? நான் பார்க்கவில்லையே!

Aruna Srinivasan said...

கௌதம்,

பாட்டும் நடனமும் இருந்தால் பெண்களுக்கு பிடித்து விடுமா? Exactly opposite :-) ரசிகர்களுக்கு - பெண்களோ அல்லது ஆண்களோ - என்ன பிடிக்கும் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் எல்லாப் படமுமே வெற்றிதானே... அதுதானே பெரிய mystery!!

//இதை சாக்காக வைத்து மதுமிதாவின் பேட்டி, புகைப்படத்துடன் அந்தப் புத்தகம் பற்றிய இரண்டு பக்கக் கட்டுரையே அடுத்த வாரம் குங்குமத்தில் வெளியாகிறது! //

அப்படிப் போடுங்க :-)

மணியன், நீங்க அப்போ இன்னொரு முறை படத்தைப் பார்க்க வேண்டியதுதான் :-)

மதுமிதா said...

பி.கு ற்கு நன்றி அருணா
நன்றி கௌதம், மணியன்