Sunday, February 19, 2006

அன்பே சிவம்

நேற்று இந்தப் படம் பார்த்தவுடன் மனசில் நிறைய சிந்தனைகள் ஓடிற்று. பதிய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் படம் முடிந்து மனசு சற்றுக் கனமாக இருக்கும்போது ஒன்றுமே எழுதத்தோன்றாமல் தூங்கிப்போய்விட்டேன். இன்று இந்தப் படம் பற்றி இரண்டுபேர் - பிரகாஷ், தருமி - ( பிறகு சேர்த்தது, டோண்டுவும் - கொஞ்சம் தாமதமாகதான் டோண்டுவின் பதிவைப் பார்த்தேன்.) என்னைப்போலவே அனுபவித்து பார்த்தவர்கள் எழுதியுள்ளார்கள். எனக்கும் இரண்டு வரியாவது எழுத வேண்டும் என்று தோன்றியது. இதோ என் கருத்து. மூன்று வாக்கியங்களில் :

அன்பே சிவம் படம் பார்த்தேன். இதுவரைப் பார்க்காதவர்கள் கட்டாயம் டிவிடி வாங்கிப் பாருங்கள்; ஆர்ப்பாட்டம் இல்லாத, இயல்பான அன்பே - அன்புதான் - அன்புமட்டுமேதான் - சிவம், விஷ்ணு, பிள்ளையார், ஜீஸஸ், அல்லா, ............ ..... ..... .... என்று புரிவதற்காகவாவது ! ( பாக்கிக் கடவுளர்கள் பெயர்களை அவரவர் நிரப்பிக்கொள்ள இடம் விட்டிருக்கேன்.) :-)

16 comments:

ஜென்ராம் said...

நேற்று கடைசி அரை மணி நேரம் பார்த்தேன். படம் வெளி வந்த புதிதில் பார்த்திருந்தேன். நேற்று பார்க்கும்போதும் கமல், மாதவன், சந்தானபாரதி,நாசர் எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் ஈர்த்தார்கள்..நான் தருமி பதிவு பார்த்தேன்.. மற்றவர்கள் பதிவுகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும். நன்றி..

வசந்தன்(Vasanthan) said...

வலைப்பதிவர்கள் அன்பேசிவம் பற்றி எழுதுவதைப் பார்க்கும் போது ஒன்று புரிகிறது.
நிறையப்பேர் இதுவரை அந்தப் படத்தைப் பார்க்காமலேயே இருந்திருக்கிறார்கள்.

- யெஸ்.பாலபாரதி said...

கமல்ஹாசன் இப்படி ஒரு படமே எடுக்காமல் இருந்திருக்க கூடாதான்னு யோசிக்கிறேன் நான்.

வலைஞன் said...

நானும் பார்த்த உடன் பதிவு எழுத நினைத்த படம். கமல், மாதவன் என்பவர்களை மறந்து விட்டு சிவம் அன்பரசு இருவரின் பயணத்தில் நாமும் ஒரு கதாபாத்திரமாக பயணிக்க வைத்திருப்பதே படத்தில் வெற்றி. ஆனால் படம் திரையரங்குகளில் வெற்றி பெற ஆரவாரிக்கும் ரசிகர்களுக்கு தீனி கிடைத்தால் தானே முடியும். இது சுழன்றடிக்கும் சுனாமியல்ல; அமைதியான ஆழ்கடல்.

ஜோ/Joe said...

Kan ketta pin surya namaskaram!

Aruna Srinivasan said...

ராம்கி, ரொம்ப ஆரவாரமில்லாமல், ஆனால் அழுத்தமாக கதையின் கருத்து வெளிப்பட்டுள்ள விதம் எனக்குப் பிடித்தது.

வசந்தன், எனக்கும் சற்று ஆச்சரியமாகதான் இருந்தது. இவ்வளவு பேருக்கு, இந்தப் படம் தாக்கம் ஏற்படுத்தி, எழுதவும் வைத்துள்ளதே என்று. :-)

பாலபாரதி, நான் கொஞ்சம் குழல் விளக்கு :-) சினிமாவும் அதிகம் பார்க்கும் வழக்கமில்லை. இந்தப் படம் போல் எப்போதாவது கண்களில் படும்போது ரசிப்பது வழக்கம். மற்றபடி, நீங்கள் சொல்வது புரியலையே?

ஜோ, உங்களுக்கும் இதே பதில் :-)

முத்து, உங்கள் பதிவைப் படித்தேன். உங்கள் கடைசி வரிக் கேள்விக்கு பதில் - சாரிகளுக்கப்பாற்பட்ட ஒன்றைப் பற்றிய கருத்து இருப்பதனால் :-)

வலைஞன், உங்கள் "ஆழ்கடல்" உவமை நன்றாக இருக்கிறது.

ஜோ/Joe said...

//ஜோ, உங்களுக்கும் இதே பதில் :-)//
படம் தியேட்டருக்கு வரும் போது பார்க்காமல் ,இப்போது ஓசியில் பார்த்து விட்டு ஆகா,ஓகோ என புகழ்ந்து எழுதி ,ஏன் இந்த படம் ஓடவில்லை என்று அங்கலாய்க்கும் அறிவுஜீவி கூட்டமல்ல நான் .இரண்டு முறை தியேட்டருக்கு சென்று பார்த்தது மட்டுமல்ல,நண்பர்களை தியேட்டருக்கு சென்று பார்க்க வலியுறுத்தியவன்.

Aruna Srinivasan said...

Joe,

:-) :-)

J S Gnanasekar said...

கமல் மறைமுகமாகச் சொன்ன சில விஷயங்கள் (நான் கேள்விப்பட்டவை):

1) கதாபாத்திரங்களின் பெயர்களின் மூலம் கதை சொல்லப்பட்டு இருக்கும். கடைசியில் கதாநாயகியை மணப்பவர் அன்பரசுதான்; நல்லசிவம் இல்லை. எனவே அன்பே ஜெயிக்கும்; சிவம் இல்லை.

2) இப்படத்தில் ஒவ்வொரு பாத்திரத்தின் பெயரையும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் புரிந்திருப்பார்கள். உதாரணமாக, பாலசரஸ்வதி என்ற பெயரை, பாலா என்று சிவம் புரிந்திருப்பார்; சரசு என்று அர்ஸ் புரிந்திருப்பார். இதேபோல்தான் நல்லசிவம், அன்பரசு என்ற பெயர்களும்.

3) ஸ்டுடியோவில் வரையப்பட்டு இருக்கும் அந்த பரமசிவன் படம். உண்மையில் அதைப்பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் இருக்கவே முடியாது.

4) கழுத்துப் பட்டன் போட்டு இன் பண்ணாமலும், வலதுபக்கம் மட்டும் தலைசீவியும், பிளாட்பாஃர்ம் ஷூவும், கட்டுப்படாத கீழ்த்தாடையுடன், தடியான கண்ணாடியுடன் வலம்வரும் கமல்ஹாஸ்சனுக்கு அந்தவருட தேசிய விருது கொடுக்காமல், வழக்கம்போல் அவ்விருது பலபேர்களிடம் நல்லபெயர் வாங்காமல் போனது மறுக்க முடியாத உண்மை.

நான் 'அழகி'க்கு அடுத்து அதிகம் பார்த்த படம் இது. 8 முறை. சரிபாதி திரையரங்கில். இதனுடன் வெளியான 'தூள்' சரியான வெற்றி. நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

-ஞானசேகர்

Aruna Srinivasan said...

-ஞானசேகர்

// 8 முறை. //

Amazing !!

தருமி said...

ஞான சேகர்,
நீங்கள் எத்தனை முறை பார்த்தால் எங்களுக்கு என்ன? "பெரும்பான்மையான நாங்கள்" பார்த்த 'தூள்' படமே நல்ல படம் என்பதுதான் மக்கள் & மகேசன் (பாவம் அவர்!) தீர்ப்பு...ஹா..ஹா!

தயா said...

இதே படத்தை பற்றிய ஒரு சங்கடமான கேள்வியை கேட்ட பின்பு என் நண்பி கேட்டது இங்கே:

http://deedaya.blogspot.com/2006/02/blog-post_20.html

Anonymous said...

One of the best movies I have seen.
-- This is one of the few movies that has a beautiful blend of extraordinary acting (especially by Kamal) and, for a change, a very powerful social message.

-- This is the only movie I watched back to back in the same theatre.

This is a must see and if you are a Tamizh/Kamal/South-Indian/Indian/Acting/Politics/Music/Madhavan/Simplicity/Social-welfare coinnoisseur/well-wisher.

Karthik

Anonymous said...

Last week I happen to see a movie called "Planes, Trains & Automobiles " and I realized that Anbe Sivam could be an inspired effort from this movie, though I didn't see this English movie fully.

Anbe Sivam was one of the best movie I have seen. Kamal has underplayed his character and I wonder how he could come up with such a masterpeice.

சீனு said...

//இதனுடன் வெளியான 'தூள்' சரியான வெற்றி. நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
//
Classical வேறு, commercial வேறு. இரண்டு type படங்களும் தேவை. என்ன, இன்று commercial படங்கள் அதிக வசூல் கொடுக்கின்றன, ஆனால் நாளை இது மாறலாம். அதற்காக, commercial படங்களை குறை சொல்ல கூடாது. இரண்டும் இரு வேறு கலைஞர்களின் படைப்புகள். என்னைப் பொருத்த வரை, யாவரும் நல்ல படம் என்று ஒத்துக்கொள்ளப்பட்ட படம் தான் "அன்பே சிவம்". ஆனால், இதை சரியான விதத்தில் marketing செய்திருந்தால் "அன்பே சிவம்"-ம் வெற்றி பெற்றிருக்கும் (இப்பொழுது "சித்திரம் பேசுதடி" வெற்றி பெற்றதைப் போல...)

Selvakumar said...

சீனு,
பெண்களுக்கு எதிரான இரட்டை அர்த்த வசனங்கள், ஆணாதிக்கப்போக்கு, பெண்கள் ஆண்களின் கட்டழகுக்கு மயங்கி என்ன வேண்டுமானலும் செய்வார்கள் போன்ற உயர்ந்த கருத்துக்களை சுமந்து வந்த தூள் படத்தை கமர்ஷியல் என்று கூறாதீர்கள். தூள் படம் பணத்திற்காகவே எடுக்கப்பட்ட கீழ்த்தரமான மசாலா படம் என்பதே எனது கருத்து.

அன்பே சிவம் போன்ற சந்தனத்தை உணராமல் .... ஐ வெற்றி பெற வைத்த தமிழன் என்றும் திருந்தப்போவதில்லை.

செல்வகுமார்