Monday, January 30, 2006

கவனித்தது, பாதித்தது, ரசித்தது.

கவனித்தது

மகாத்மா காந்தியின் நினைவு நாள். தூர்தர்ஷனில் ஒளிப்பரப்பான காந்தி சமாதியில் அஞ்சலி. நாற்காலிகளின் முன் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி மன்மோஹன் சிங் வைஷ்ணவ ஜனதோ மற்றும் ரகுபதி ராகவ ராஜாராம், பாட்டுகளுக்குக் கூடவே பாடியது, வாயசைப்பில் தெரிந்தது. கூடவே, அவர் அருகே இருந்த மூதாட்டி நன்றாகவேத் தூங்கிக்கொண்டிருந்ததையும் காமிராப் பார்த்துவிட்டது. இந்த மாதிரி பொது நிகழ்ச்சிகளில் வருபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அல்லது காமிராக்காரர்கள் தங்கள் லென்ஸைக் கொஞ்சம் அதட்டி வைக்க வேண்டும். கன்னா பின்னாவென்று சுற்றக்கூடாதென்று.

நிகழ்ச்சியில் அதிகம் கூட்டம் காணோம். அதுவும் விவிஐபிகள் உட்காரும் இடத்தில் தரையில் வெண் மெத்தைப் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இல்லாதிருத்தல் மூலம் சிறப்பு கவனத்தை ஈர்த்தவர் சோனியா காந்தி. ( Conspicuous by absence). இந்தக் காந்தி அந்தக் காந்தியை எப்படி மறந்தார்? காந்திஜி காங்கிரஸ் அமைப்பின் தூணாக, மக்களிடையேத் தூண்டுகோலாக / தேசத்தின் தந்தையாக இருந்தாரே தவிர எந்தப் பதவியிலும் கடைசிவரை இருக்கவில்லை. காங்கிரசில் அவர் சாதாரண உறுப்பினராகக் கூட பதிந்திருக்கவில்லை என்கிறது சரித்திரம். அதனால் protocol எதுவும் இல்லை என்பதால் இன்றைய காங்கிரஸ் தலைவர் அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லையோ?

ம்ஹ¤ம். எங்கேயோ இடிக்கிறது. தன்னை இந்தியன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவர் தேசத்தின் தந்தையாகக் கருதப்படுபவரின் நினைவு அஞ்சலியில் பங்கு பெற வேண்டாமா?

பாதித்தது

கேரளாவில் பெண்கள் நிறைய முன்னேறியுள்ளார்கள் என்று சென்ற வாரம் சசி தாரூர் பத்தியில் எழுதியதை ஆட்சேபித்துப் பலர் அவரைக் கேள்விக்கணைகளில் மாட்டுகிறார்கள். பெண்கள் தனியாக நடமாடமுடியாத அளவு பெண்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகிறது இங்கே. என்ன முன்னேற்றம் வாழ்ந்தது?" என்கிற ரீதியில் மனதை உருக்கும் விவரங்கள்.

ரசித்தது

என்டிடிவியில் இருந்து வெளியேறி ராஜ்தீப் சர்தேசாய் CNN - IBN ல் சேர்ந்தபின் " சபாஷ், சரியான போட்டி.." என்று கைத்தட்டுகிறார் ஊடகங்கள் பற்றி பத்தி எழுதும் செவந்தி நைனான்.

"...போட்டிப் போட்டுக்கொண்டு சுவாரசியமான நிகழ்ச்சிகளை வாரி வழங்குகிறார்கள். இவ்வளவு ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை ( Constructive programmes) ஒரே சமயம் பார்த்து அலுத்துப்போய், எங்காவது Zoom சேனலுக்குப் போய் பூஜா பேடி, குட்டை ஆடை அணிந்து கொண்டு அரசியல்வாதிகளையும் போலீஸ்காரர்களையும் பேட்டி காணுவதைத் தேடிப்போய்விடுவோம் போலிருக்கு - ஒரு மாறுதலுக்கு" என்று சதாய்க்கிறார்.

2 comments:

Jayaprakash Sampath said...

sevanti ninan is right in a way... information overload :-). I wonder how these ppl manage to get 'breaking news' every other minute..

Gone are those days, when news was presented as news, without masala and without drama.. by anchors like Sashikumar, JAyanthi Natarajan, Suneet Tandon, PC Ramakrishna, Rini Simon...hmmm

personally i feel, IBN is just a clone of NDTV. i guess, influence of Mr.Roy over is disciple is too much :-)

Aruna Srinivasan said...

//Gone are those days,//

என்ன பிரகாஷ், "அதெல்லாம் அந்தக் காலம்" என்று வயதானப் பெரியவர்கள் போல் சொல்கிறீர்கள் ? :-) சேன் ஹோஸே நகரின் கணினி மியூசியம் பற்றி ஒரு விளம்பரப் பலகையில் படித்தது நினைவுக்கு வருகிறது. " 50 வருடம் என்பது எங்களுக்கு ஆதிகால சரித்திரம்" - (For us 50 years is ancient history.) சரி. சரி. அந்தக் கணக்கில் ரினி சைமன் காலமெல்லாம் கற்காலம்தான் :-)