Friday, January 27, 2006

அன்றும் இன்றும்

இதைத்தான் - அல்லது இது போன்று ஏதாவது ஒரு கட்டுப்பாட்டைத்தான் - அன்றே எதிர்பார்த்தேன்.

ஆனால் நிர்வாகிகள் என்ன செய்ய முடியும் என்று அன்று பலர் வாதிட்டனர். ஒரு சிலர் புரியாமல் பேசுகிறேன் என்ற தொனியில் கூட கருத்து வெளியிட்டனர். இந்தக் குறைகளைத் தமிழ்மணத்திடம் முறையிடுவதில் அர்த்தமில்லை என்றார்கள்.

இன்று I stand vindicated.

சுட்டிகளில் உள்ள முழு விவாதங்களையும் படியுங்கள். அன்றைய நிலை விளங்கும்.

6 comments:

காசி (Kasi) said...

Aruna,

1. Blogger.com did not provide comment moderation facility at that time. (Champions: think why they started providing this, open up your mind.)
2. Thamizmanam admin was moving his whole life back to hometown with no assured connectivity and resources to monitor and take such actions.
3. The comments then were at times derogatory, never this vulgar.

Only if you want to see the truth:-) If you want to jump the bandwagon, you are most welcome!

Cheers,
-Kasi

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

அருணா,
ஏன் அப்போது ஒரு மாதிரி சொல்லிவிட்டு , இன்று நிர்வாகி பாதிக்கப்பட்டவுடன் உடனேயே சட்டம் போடுகிறீர்கள். உறுப்பினர் பாதிக்கப்பட்ட போது வராத யோசனைகள் இப்போது மட்டும் எப்படி வருகிறது என்று கேட்டேன். உடனே அதே விதமான தாக்குதல்கள் எனக்கு அவரது அபிமானிகளால் கிடைத்தது :-)

http://kalvetu.blogspot.com/2006/01/blog-post_27.html

Aruna Srinivasan said...

//Blogger.com did not provide comment moderation facility at that time. //

இந்தக் குறிப்பிட்ட வசதியை பிளாக்கர் சேவை அன்று கொடுத்திருக்கவில்லைதான். ஆனால் அன்று என் ஆதங்கம் - என்னத் தீர்வு /எப்படி செய்யலாம் என்று சிந்திக்க / கலந்தாலோசிக்க இடம் கொடாமல், நான் கேள்விக் கேட்டதே தவறு என்பதுபோலவும், " நிர்வாகம் என்ன செய்ய முடியும்?" என்ற ரீதியிலும் வந்த பதில்கள்.

//Thamizmanam admin was moving his whole life back to hometown with no assured connectivity and resources to monitor and take such actions.//

இடம் மாற்றத்தினால் தனிப்பட்ட முறையில் நீங்கள் நேரம் இல்லாமல் இருந்தது புரிந்தது காசி. தமிழ் மணம் உருவாக்கி நீங்கள் உழைக்கும் உழைப்பைப் பலமுறை பல இடங்களில் உணர்ந்துக் குறிப்பிட்டுளேன். நீங்களும் இதை அறிவீர்கள். என் குறை தனிப்பட்ட முறையில் உங்கள் மீதல்ல. உங்களைக் குறை சொல்ல வேண்டும் என்றும் அல்ல. சொல்லப்போனால் அன்றைய என் பதிவில் நீங்கள் ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் பொத்தாம் பொதுவாக "நிர்வாகம்" என்ன செய்ய முடியும் என்று வந்த பதில்களைத்தான் குறிப்பிட்டேன்.

//The comments then were at times derogatory, never this vulgar.//

அன்றும் பல பின்னூட்டங்கள் மிக ஆபாசமாக இருந்தது.

//Only if you want to see the truth:-) If you want to jump the bandwagon, you are most welcome!//

இந்தப் பதிவைப் போடும் முன்பு ஒரு நிமிடம் யோசித்தேன். அவசியமா என்று.

ஆனால் எனக்கு நான் உண்மையாக இருப்பது எனக்கு முக்கியம். என் உண்மையான எண்ணங்களைப் பதிவு செய்வதும் எனக்கு முக்கியம். எனக்கு நான் உண்மையாக இருப்பது உங்களை எங்காவதுக் காயப்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். உங்களைக் காயப்படுத்துவது நிச்சயம் என் நோக்கமல்ல.

இங்கே வெளிப்பட்டது அன்று காயப்பட்ட என் மனதின் ஆதங்கம். அவ்வளவே.

மிக்க நட்புடன் - இதில் சந்தேகமேயில்லை :-)

அருணா.

காசி (Kasi) said...

One more 'then and now': the comments were mostly(completly?) anonymous. Now, they are from one assuming false identity, impersonation!

ramachandranusha said...

கல்வெட்டு, என்னமோ நேற்று முதல் முதலாய் நிர்வாகி பாதிக்கப்பட்டு இன்று மாடரேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றா
நினைக்கிறீர்கள்? வலையுலகில் தொடர்ந்து வாசிக்கும் அனுபவத்தில், வீட்டு பெண்களை சில வலைப்பதிவாளருடன்
இணைத்து ஆபாசமாய் சொல்வது சில மாதங்களாகவே உள்ளது. இது பச்சை விளக்கை நிறுத்தியதும் அதிகரித்து, சிறு குழந்தையை,
அதில் என் சந்தேகம் இவர்கள் வீட்டு குழந்தைகளின் பெயர் எப்படி தெரிந்தது என்று, நேற்று என் கண்ணில் விழுந்ததை இன்னும்
என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
கல்வெட்டு உங்களின் ஒவ்வொரு பதிவையும், பின்னுட்டமும் வெகு ஆவலாய் படிப்பேன். அவைகளின் தெரியும் உங்கள்
கருத்துக்கள் என்னை வெகுவாய் கவர்ந்துள்ளன. இம்முறை நீங்கள் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டீர்களோ என்று தோன்றுகிறது.

மதி கந்தசாமி (Mathy) said...

Aruna,

I have spent the last 3 hours skimming thru the posts that have been collected in thamizmanam since last Monday/Tuesday. Have to go thru thamizmanam googlegroups too.

I am not very surprised by your post.

Kasi has explained things very nicely.

Might comeback if time permits.


-Mathy