Monday, December 05, 2005

தேசிய அக்கறை

ஒரு பார்வையில் குற்றம் கண்டுபிடிப்பது சரியல்லதான். ஆனாலும் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாப் பத்திரிகையைப் பிரித்துப் படித்தவுடன் ஏதோ உறுத்தியது. தற்போது ஒரு வாரமாக மும்பையில் இருப்பதால் சென்னையின் புயல், வெள்ளப் பாதிப்பைத் தூரத்தில் இருந்து பார்க்கும்படி உள்ளது. திரும்பிச் சென்றபின்தான் நிலவரத்தை நேரில் பார்க்க வேண்டும். இதன் நடுவில் தினம் தொலைக்காட்சி, இணையம் என்று சென்னை நிலவரத்தைத் தேடித்தேடிப் பார்த்துக்கொண்டிருந்தோம். நாங்கள் இருக்கும் இடத்தில் சென்னைச் செய்தித்தாள் கிடைக்காமல் எங்கேயோப் போய் வாங்கிக் கொடுத்தார்கள். இந்த நிலையில் தினசரி காலையில் கிடைக்கும் உள்ளூர் பேப்பரில் நம்மூர் செய்திகளைத் தேடத்தானே தோன்றும் ?

ஆனால் செய்தித்தாளைப் பிரித்தால் - முதல் பக்கம் வேண்டாம் - எங்காவது உள்ளே கூடவா சென்னை வெள்ள நிலவரம் பற்றி செய்தி இருக்காது? இல்லையே...... உள்ளே ஒரு மூலையில், நிவாரண உதவிகள் அளிக்க அரசு உறுதி பற்றி முழுசாக ஒற்றை வாக்கியம்தாம் சென்னை மழை பற்றி மொத்த செய்தி. ஆனால் தூத்துக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஆசிரியையிடம் கடும் தண்டனை வாங்கிய மாணவர்கள் என்று ஒருப் பெட்டிச் செய்தி - நாலு பத்திகளில்.

மாணவர்களை அநியாயமாகத் தண்டித்த இந்தச் செய்தி முக்கியம்தான். அதே சமயம், அதே மாநிலத்தில் - நாட்டில் ஒரு முக்கியமானப் பகுதியில் - வெள்ளம் மழை என்றால் தேசியச் செய்தித்தாள்களில் செய்திகள் வர வேண்டாமா? உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து Local வாசனையுடன் பத்திரிகைகள் வருவது இன்றைய Trend. ஆனால் இந்த அளவு மற்ற மாநிலங்களின் முக்கியச் செய்திகளைக் கூட இருட்டடிப்பு செய்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை.

இந்த சமயத்தில் மனதில் தோன்றும் ஒரு ஒப்பு நோக்கையும் தவிர்க்க முடியவில்லை. நியூ ஆர்லின்ஸின் வெள்ளச் செய்திகளை மேற்கு மூலையில் இருக்கும் சான் ஹோஸே மெர்குரி நியூஸில் பத்திப் பத்தியாக தலைப்புச் செய்திகள் / இதர விவரங்கள் படித்த நினைவு வருகிறது. ஏன் இந்த தேசிய அக்கறை, டைம்ஸ் ஆப் இந்தியாவில் காணவில்லை என்று தோன்றுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸில் சற்று பரவாயில்லை. உள்ளே மூன்று பத்தி இஞ்சுகளில் செய்தியும், பக்கத்தில் ஒரு படமும்.

உள்ளூர் முக்கியத்துவம் இருக்க வேண்டியது பத்திரிகைகளுக்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் தேசீயப் பார்வை இல்லாமல் குறுகிப் போய்க்கொண்டிருக்கின்றன. இது சரியல்ல.

6 comments:

மதுமிதா said...

உங்க ஆதங்கம் புரியுது
+ போட்டாச்சு.
பத்திரிக்கை தருமம் வாழ்க!!!

Narain said...

அருணா, சரியான சமயத்தில், சரியான விதயத்தினை கையிலெடுத்திருக்கிறீர்கள். என்.டி.டி.வி நேற்றைக்கு தான் விழித்துக் கொண்டதுப் போல செய்திகளை தொகுக்கிறது. மும்பை வெள்ளம் பற்றி தமிழ் செய்திதாள்களின் செய்திகளை ஒப்பிடும்போது இது கண்டிக்கதக்கது. அவர்களின் முக்கிய கவலை சென்னையில் நடக்க இருக்கும் டெஸ்ட் மேட்ச் போனது என்றுதான். ஒரு வேளை டெஸ்ட் மேட்ச் நடந்திருந்தால், இர்பான் பதான் தர்பீஸ் ஜூஸ் குடித்தது கூட டைம்ஸில் செய்தியாயிருக்கும்.

ராம்கி said...

Madam,

It's really an important post.

I second Narain's comment. Hope there will be a healthy discussion.

Aruna Srinivasan said...

I am still travelling in North - and checking mails from public kiosks without Tamil computing. I'll getback home and respond.

Aruna

rnateshan. said...

memsaab,
not only ndtv here we donot know which tv to beleive one say roads are clear,people enjoy biriyani!other says starving,heavy flood in danger.even next day morning the same news.you may not beleive ,when tsunami occured we all had very mental torture didnot sleep at all though we were not dircetly affected,to our surprise the next day at 6.oo a.m the tv said "inraikku kalaiyil tsunami"!atleast ndtv and star hindi news gave good covering of tsunami.

Aruna Srinivasan said...

து பொதுக் கணினியை உபயோகப்படுத்தித் தமிழில் எழுத முடியாமல் இருந்ததுதான். ஒரு விதத்தில் இந்தப் பிரச்சனை இந்தியாவின் மிக அவசியத் தேவையைப் பிரதிபலிக்கிறதோ என்றும் தோன்றுகிறது. - நமது இன்றையத் தேவை - தேசிய அளவில் எல்லோரையும் இணைத்து, நெசவு மொழியில் சொல்வதானால், "பாவு" போடுவதுபோல் ஊடுருவி நிற்கும் ஒரு இழை.

இந்தியாவின் பல இணைய பிரௌஸிங் சென்டர்களில் இன்றும் எல்லா மொழிகளையும் கணினியில் சிரமமில்லாமல் படிக்கும் எழுதும் வசதி கிடையாது. Sify I way போன்ற தொழில்ரீதியான இணையகங்களிலும் கூட. ( Sify யில் இருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் கவனிக்க :-) ) பல இணையகங்களில் OS win 98 அல்லது அதற்கும் முந்தைய பதிவு. Internet Explorer அதேபோல் பழையப் பதிவு. நாம் கையுடன் தமிழ் மென்பொருளைக் கொண்டு போய் அல்லது இணையத்திலிருந்து இறக்கி வேலை செய்ய நேரம் இல்லாத நிலையில் ஆங்கிலம் ஒன்றுதான் வழி.

தமிழ் இணையம் இவ்வளவு வளர்ந்தும் ஆங்கிலம் போல் இன்னும் எந்தக் கணினியிலும் / எவ்விடத்திலும் தமிழை உபயோகிக்க முடியவில்லைதான். டிஜிடல் டிவைட் என்று சொல்லப்படும் கணினியை உபயோகிப்பவர்கள் / உபயோகிக்கத் தெரியாதவர்கள் அல்லது இல்லாதவர்கள் என்று ஒரு இடைவெளி இருப்பது போல எந்த எழுத்துருவும் இறக்காமலேயேத் தமிழைப் படிக்க / எழுத என்று உருவாகியிருக்கும், யூனிகோட் பொதிந்துள்ள கணினி உபயோகிப்பவர்கள், அத்தகையக் கணினி இல்லாமல் பழையக் கணினி உபயோகிப்பவர்கள் என்று ஒரு இடைவெளி விழுந்துள்ளது.

மொழி மட்டும் அல்ல. பல மொழிகள் இருந்தாலும் ஆங்கிலம் கொண்டு ஒரு மாதிரியாக தேசிய இணைப்பை சமாளிக்கிறோம். இன்னும் பல விஷயங்களிலும் - அங்குள்ளது பற்றி இங்கும், இங்குள்ளது பற்றி அங்கும் ஒரு இணைப்பு / அக்கறை இல்லாமல் - பல தீவுகளாக நாம் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது.