Saturday, November 26, 2005

புளூக்கர் விருது !!

இல்லீங்க. எழுத்துப்பிழை அல்ல. புளூக்கர் என்றுதான் சொன்னேன் !!

ஆறு மாசமா சென்னை மழைப் போல ( ஹ்ம்ம்.. இப்படி சொல்லவும் ஒரு காலம் வந்ததே...) விடாமல் வலைப் பதிவில் எழுதுகிறீர்களா? எழுதி எழுதி புத்தகமேப் போடலாம் என்று ஜோக்கடித்துக்கொண்டிருக்கிறீர்களா? யார் கண்டார்கள்? நீங்கள் ஒரு வேளை புளூக்கர் விருது வாங்கிவிடுவீர்களோ என்னவோ?

புக்கர் விருது தெரியும். அதென்ன புளூக்கர் விருது?

இன்று என் தபால் பெட்டியில் வந்த ஒரு செய்தித் தொகுப்பிலிருந்து வந்த செய்தி


ஆயிரம் / இரண்டாயிரம் / நாலாயிரம் டாலர்கள் என்றெல்லாம் கண்ணில் பட்டது.

இதை நடத்துபவர்களுக்கு ஜனவரி 30க்குள் போட்டிக்கான விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டுமாம். ஹ்ஹ்ம்ம்.. சீக்கிரம்.

முக்கிய பி.கு: புளூக்கர் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.

போச்சுடா - சப்பென்று ஆகிவிட்டதோ? :-)

7 comments:

துளசி கோபால் said...

அருணா,

உடனே தேவை ஒரு மொழிபெயர்ப்பாளர்.

எதுக்கா?

நம்ம பதிவையெல்லாம் இங்கிலீஷிலே மாத்த.
ஏன் அந்த ப்ளூக்கர் நமக்குக் கிடைச்சா வேணாங்குதா?:-))))

Aruna Srinivasan said...

மொழிபெயர்ப்பாளர் இருக்கட்டும் துளசி. அதென்ன, ப்ளூக்கர் கிடைக்க வழி இல்லேன்னு இப்படி ஒரேயடியா "-" குத்து போட்டிருக்காங்க :-)

Srikanth said...

// மொழிபெயர்ப்பாளர் இருக்கட்டும் துளசி. அதென்ன, ப்ளூக்கர் கிடைக்க வழி இல்லேன்னு இப்படி ஒரேயடியா "-" குத்து போட்டிருக்காங்க :-)//

Speaking of which, I am considering removing that from my blog. It is increasingly becoming an avenue to disagree with an opinion or for reflexive labelling of individuals.

From Thamizhmanam:

//முன்னோட்டத்தை மட்டும் பார்த்து எதைப்படிப்பது எதை விடுவது என்று முடிவெடுப்பது சிரமம். அவருக்கு ஒரு பரிந்துரை அவசியமாகிறது.//

If the original intent was to recommend posts to others, at the outset, I do not see the need for a negative stamping at all - the reader clicks a button (positive) if (s)he wants to recommend it to others, or leaves the site without doing anything.

Also from thamizhmanam,

//500 பேர் ஒரு நாளைக்கு வருகை தரும் தமிழ் மணம் தளத்தில் ஒரு 50 பேராவது தங்கள் வாக்குகளைப் பதித்தாலே இந்த முறை மிகவும் துல்லியமான, பாரபட்சமற்ற, பெரியோர் சிறியோர் பேதமற்ற ஜனநாயக மதிப்பீட்டு முறை என்பதை உணர முடியும். //

As it is practiced right now, it is none of these.

Sorry for distracting from your original post, just venting a bit...

மதுமிதா said...

அஞ்சு மாசமா தான் விட்டுவிட்டு எழுதறேன் அருணா.

வலைப்பதிவாளர் மாநாட்டில இதப் பத்தி மூச்சு விடலியே அருணா.சொல்லியிருந்தா ஆங்கிலத்தில் முதல்புளூக்கர் பரிசு வாங்கியிருக்கலாம்:-)

Aruna Srinivasan said...

ஸ்ரீகாந்த், பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் போடுவது போன்ற இந்த முறையை நீக்கிவிடலாம் என்று ஒரு காலத்தில் நானும் ஆலோசனை சொன்னேன். ஆனால் வேண்டுபவர்கள் வைத்துக்கொள்ளட்டும்; இல்லாவிடில் தூக்கிவிடட்டும் என்று சொல்லப்பட்டது. மிகுந்த நேரம் செலவழித்து, யோசித்து அமைக்கப்பட்ட ஒரு முறையை, இனி இது தேவையில்லை என்று அமைத்தவர்களே மாற்றினால் - பலரது யோசனையை ஏற்றுக்கொண்டு - அது பரவாயில்லை. ஆனால் நாமாகவே நீக்கிக்கொள்வது ஏனோ எனக்குச் சரியாகப் படவில்லையாதலால் நட்சத்திரங்கள் என் பதிவில் இன்னும் அப்படியே இருக்கிறது. இருப்பதால் குத்துபவர்கள் தங்கள் விருப்பப்படி குத்துகிறார்கள் :-) இது என்னைத் துளியும் பாதிக்கவில்லையானாலும் இந்த "குத்துகள்" இனி அவசியமில்லையென்பதுதான் என் கருத்தும்.

மதுமிதா, சென்னைப் பெண் தமிழ்வலைப்பதிவாளர்கள் மாநாட்டின்போது இந்தச் செய்தி என் கண்களில் படவில்லையே; தெரிந்திருந்தால் கட்டாயம் சொல்லியிருப்பேன்.

மதுமிதா said...

அருணா இந்தப் பதிவு நவம்பர்26-ல் இட்டிருக்கிறீர்கள்.
அப்ப 28.11.05-ல் நடந்தது என்ன?
ச்ச்சும்மா:-)

Aruna Srinivasan said...

மதுமிதா, கண்ணில் நிறைய விளக்கெண்ணெய் போடாதீங்க :-) :-) ஏதோ ஞாபக மறதி அதிகமாகிப்போச்சுன்னு வையுங்களேன் :-)