Saturday, July 23, 2005

"They have great work ethic..."

இங்கே உள்ளூரில் ஒரு செய்தி.

சன்னிவேலில் இருக்கும் Network Appliances என்ற நிறுவனம் புதிதாக 200 contract நபர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டுள்ளது. இவர்களை எங்கள் ஆட்ப்டையில் சேர்த்துக்கொண்டதால் கம்பெனிக்கு 5000 டாலர்கள் வரை செலவுக் குறைச்சல். இவர்கள் அனாவசியமாக உபத்திரவம் கொடுப்பதில்லை. அவர்கள் வேலை சாப்பிடுவது மட்டுமே. வேறு உபரியாக எந்த வசதியோ, அல்லது அந்தப்படி, இந்தப்படி என்று கேட்பதில்லை. இவர்கள் தங்கள் வேலையினை அணுகும் முறையிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது -" they have great work ethic. இவர்கள் செய்வதெல்லாம் சாப்பிடுவதுதான் - ஆமாம் இவர்கள் பிறந்ததே அதற்குதானே?" என்கிறார் இவர்களை வேலைக்கு அமர்த்திய contract நிறுவனத்தின் சொந்தக்காரர்.

தங்கள் நிறுவனத்தில் இருக்கும் தோட்டத்தில் உள்ள ஐந்தேகால் ஏக்கர் புல்வெளியில் புல்லை அகற்ற இயந்திரங்களை உபயோக்கிக்காமல் இந்த நிறுவனம் இவர்களை அமர்த்தியுள்ளது.

இவர்கள்?

200 ஆடுகள் !! :-)

Disclaimer: இந்தப் பதிவில் இருந்த ஒரு வரி தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயத்தை உணர்ந்ததால் அந்த வரியை நீக்கியுள்ளேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும்.

9 comments:

Jayaprakash Sampath said...

//இன்போஸிஸ் ஒரே நாளில் எழுநூற்றி சொச்சம் பேரை வேலைக்கு அமர்த்தியது. //

//தங்கள் நிறுவனத்தில் இருக்கும் தோட்டத்தில் உள்ள ஐந்தேகால் ஏக்கர் புல்வெளியில் புல்லை அகற்ற இயந்திரங்களை உபயோக்கிக்காமல் இந்த நிறுவனம் இவர்களை அமர்த்தியுள்ளது. //


இதுக்கு ஒரு கமண்ட் சொல்லுவேன். ஆனால், இணையத்தில் இருக்கிற infoscion கள் எல்லாம் என்னை கொன்னே புடுவார்கள் :)

Shankar said...

infy employees-aiyum mandhai aadugalaiyum oNNaa potteengale, adi dhool!

prakasare. aamaam, edhunaachum vaai thirandhu sonneenga, naan mirugam aayiduven :)

Aruna Srinivasan said...

மன்னிக்கணும் சுவடு ஷங்கர், சத்தியமா அப்படி எண்ணத்தோடு எழுதலே.... செய்திகள் எதேச்சையாக என் கண்ணில் ஒரே தினத்தில் பட்டதால் வந்த வினை இது. தயவுசெஞ்சு முடிச்சு போடாதீங்க. நீங்கள் இருவரும் எழுதிய பின்னர்தான் அடக் கடவுளே, இப்படி ஒரு கோணம் தென்படுகிறதா என்று தோன்றிற்று.

படிக்கிறவர்களுக்கு அப்படி தோன்றுவதால் இந்த disclaimer ஐ என் பதிவிலும் சேர்க்கிறேன்.

Shankar said...

adadaa aruna! naan jolly-aa dhaan ezudhineen. ivlo feel aayitteengale!

mannippu, disclaimer ellaam edhukku? ellaam indha icarus-aala vandhadhu. adhutha thadavai woodlands-la avarukku sambar vadai, bonda, kaapi cut!

Aruna Srinivasan said...

ஷங்கர், எல்லாம் ஒரு தற்காப்புதான். ஏற்கனவே பின்னூட்டங்களில் தகராறு, பிரச்சனையென்று இப்போதான் கொஞ்சம் ஓய்ந்தமாதிரி இருக்கு. இதுலே புது விவாதம் கிளம்ப நான் ஒரு காரணமாக இருக்க வேண்டாமே என்றுதான் இப்படி ஒரு knee jerk reaction :-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

had i knew this i would have supplied goats from india at a cheaper rate.of course i wont call it as a global delivery model :)

Aruna Srinivasan said...

Ravi Srinivasa,

taking outsourcing to new dimensions :-) :-)

Aruna Srinivasan said...

ரவி ஸ்ரீனிவாஸ், மன்னிக்கணும். முந்தைய என் பதிலில், உங்க பேர்லே ஒரு "a" வந்து விழுந்துவிட்டது. ஆனால் பரவாயில்லை. ஏகாராம் சேர்த்தா ஒரே அதிர்ஷ்டமாமே... உங்கள் கூரையைப் பாருங்கள் ஏதாவது அதிர்ஷ்டம் காத்திருகப்போகிறது :-)

ரவி ஸ்ரீநிவாஸ் said...

all i could see are tublelights including a nonfunctioning one :)