Tuesday, July 19, 2005

Murphy's Law and Public Transport

இங்கே கலிபோர்னியா வந்து இரண்டு மாதம் ஆகப்போகிறது. இங்கே வலது பக்கம் சாலைமுறை இன்னும் மூளையில் பிடிபடாததால் நம் ஊரில் செய்வது மாதிரி நினைத்தவுடன் காரைக் கிளப்பிக்கொண்டு போக தைரியம் வரவில்லை. ஆனால் வெளியில் போக முழுவதும் மகன்களை எதிர்பார்ப்பதும் சரியாகப்படவில்லை. முதல் வேலையாக பஸ், ரயில் என்று பொது வாகனங்கள் பயன்படுத்தொடங்கிவிட்டேன். சிங்கப்பூர் அல்லது நம் நகரங்கள் போல இங்கே அமெரிக்காவில் பொது வாகனங்கள் சரியாக இருக்காது என்று எல்லோரும் பயமுறுத்தினார்கள். அதெப்படி என்று நானும் சவாலாக எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். முதல் நாள் Vally Transport Authority என்ப்படும் பொது வாகன மையத்தின் வலைப்பக்கத்திலிருந்து எங்கள் தெருப் பக்கம் என்ன பஸ் எப்போ வரும் என்று பார்த்து வைத்துக் கொண்டேன். நான் செல்ல வேண்டிய இடம் பல வகை டிபார்ட்மெண்டல் கடைகள் இருக்கும் கடைத்தெரு. வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப் என் நடையில் பத்து நிமிடம். 12. 50க்கு ஒரு பஸ் என்று அட்டவணை சொல்லிற்று - என் அதிருஷ்டம் அல்லது துரதிருஷ்டம் என் வீட்டுக்கு அருகாமையில் - நான் நடக்கும் தூரத்தில் ஒரு நம்பர் பஸ்தான். ( துரதிருஷ்டம் என்று ஏன் சொன்னேன் என்றால் ஒரு பஸ்தான் இந்தப் பக்கம் வருகிறது என்பதால். அதிருஷ்டம் - ஏனென்றால், நாளடைவில் இந்த ஊரைப் புரிந்து கொண்ட நிலையில் இந்த ஒரு பஸ்ஸாவது இருக்கே....என்ற திரில்.... சில குடியிருப்புப் பகுதிகளில் இதுவும் கிடையாது. )

12. 50க்கு பஸ் "டாண்" என்று வந்து விடும் என்று அலறி அடித்துக் கொண்டு 12. 30க்கு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். பஸ் ஸ்டாப்பில் என்னைத் தவிர ஒரு காக்கை மட்டும் தான். ஈ கூட கிடையாது. மணி 1.15 - இன்னும் பஸ் அடையாளத்தையே காணோம். சர் சர்ரென்று சாலையில் போகும் வாகனங்களில் இருப்பவர்களெல்லாம் என்னையே ஏதோ வேற்று கிரக மனுஷி மாதிரி பார்ப்பதுபோல் எனக்கு எண்ணம். மணி 1.30.... ஹ¤ம்ம்.. எதிர் பக்கம் நிறுத்தத்தில் ஒரு பஸ் வந்து நின்றது. ஒரு வேளை இதுதான் போய்த் திரும்பி வர வேண்டுமோ? என்று இன்னும் பத்து நிமிஷம் நின்றேன். ஹ்ம்ம்... சான்ஸே இல்லை. ஏமாந்து, சோர்ந்து வீட்டுக்குத் திரும்பி நடக்க ஆரம்பித்தவுடன் ஒரு பஸ் என் பின்னால் போயிற்று. - ஹ்ம்... Murphy's Law.

ஒரு முறை கடைக்குப் போய்விட்டு நிறுத்தத்தில் ரொம்ப நேரம் நின்றும் பஸ் வரவில்லை. வெகு நேரம் கழித்து வந்த பஸ் வேறு தடம். ஒரு வேளை நான் செல்லும் பஸ் தடம் / எண் / நேரம் மாறியிருக்குமோ என்ற எண்ணத்தில் வண்டியைவிட்டு இறங்கிய டிரைவரை "32" க்காக அரை மணி காத்துக்கொண்டுள்ளேன். இங்கே 32 வருமா என்று கேட்டேன். அவர் ரொம்ப ஸீரியஸாக " ஓ... அப்படியா அரை மணி நேரம் காத்துக்கொண்டிருக்கிறீர்களா? oh, that is great " என்று சொல்லிவிட்டு ( பஸ்ஸ¤க்குக் காத்துக்கொண்டிருப்பதில் என்ன Great" என்று இன்னும் எனக்குப் புரியவில்லை.) இஞ்சினை அணைத்துவிட்டு என்னிடம் "கவலைப் படாதீர்கள். 32 வரும் நேரம்தான். இதோ எந்த நிமிடமும் வந்துவிடும் என்று சொல்லி வண்டியைவிட்டு இறங்கி நின்று பாண்டிலிருந்து ஒரு சாண்ட்விட்ச் எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். அவர் கொடுத்தா நம்பிக்கையில் நான் மறுபடி "தேவுடா" என்று சாலையைப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். என் அருகில் நின்றிருந்த ஒரு பெண் சட்டென்று "இதோ பார், 32" என்று கை காண்பித்தார். நான் ஒன்றும் புரியாமல் விழிக்க, அவர் மறுபடி இந்த பஸ்ஸின் தடப் பலகையைக் காண்பித்தார். அதில் அழகாக 32 என்று இருந்தது. அந்தப் பெண் பிறகு சிரித்துக் கொண்டே சொன்னார். "டிரைவர் இறங்கும்போதே தடத்தை 32 என்று மாற்றிவிட்டுதான் இறங்கியுள்ளார். சும்மா உன்னை சதாய்த்திருக்கிரார் போல.." என்றாள். ஹ்ம்ம்ம்... அவரும் அவரது தமாஷ¤ம்.... ஆரம்பத்திலேயே அம்மா தாயே நீ காத்திருந்த 32 - என் வண்டிதான் ஏறி உட்காருங்கள் என்று சொல்லியிருக்கக்கூடாதோ...?
இதெல்லாம் ஆரம்ப கால கடுப்புகள். பிறகு ஒருவாறாக தேறிவிட்டேன். இப்போது சான்பிரான்ஸிச்கோ நகரில் - அல்லது நான் இருக்கும் சூரிய நகரில் ( sunnyvale??) பஸ், ரயில், மினி ரயில் என்று அத்துபடி. என்ன இப்போ? காரில் இரண்டு நிமிடத்தில் போகும் தெருமுனை கடைக்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு இரண்டு பஸ் மாறி இரண்டு மணி நேரம் செலவழிக்கிறேன். பரவாயில்லை. I have the luxury of time :-) யாரெல்லாம் பொறாமைப்படுகிறீர்கள்? :-)

ஆனால் சான்பிரான்ஸிஸ்கோ நகரின் ரயில் போக்குவரத்து எனக்குப் பிடிச்சிருக்கு. சுமராக 5 வழிப்பயணம். ஒன்றுக்குள் ஒன்றாக பெரிய பொம்மை, அதற்குள் அடுத்த சைஸ் என்று ரஷ்ய பொம்மை செட் ஒன்று விற்குமே ஞாபகம் இருக்கா? அதுபோல், நகருக்குள் downtown என்று சுற்ற முனி என்று ஒரு ரயில். அடுத்த வட்டம் Bart ( Bay Area Rapid Transport) அதற்கடுத்த பெரிய வட்டம் CalTrain - நான் இருக்கும் சன்னிவேல் மாதிரி இடங்களுக்கு. அப்புறம் இன்னும் பெரிய வட்டம் மாகாணங்களுக்கிடையே Amtrak. இதைத் தவிர டிராம், பஸ், ரகங்கள். சன்னிவேல், சான் ஹோஸே போன்ற நகரங்களில் மினி ரயில், சாதா ரயில், பஸ் என்று ஒரு தனி செட்.

இத்தனை இருந்தாலும் எங்கேயோ, ஏதோ சரியாக இல்லை. சட்டென்று நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்கு எளிதாக போக முடியவில்லை. பாதி சமயம் ரயில் பெட்டிகள், பஸ்கள் எல்லாம் காலியாகப் போவதையும், சாலைகளில் கார்கள் நெரிசலையும் பார்த்தால் - எங்கேயோ தவறு என்று தோன்றுகிறது.

21 comments:

Jayaprakash Sampath said...

வடபழநி டெர்மினஸ்ஸில் நாலு 15F நிற்கும். முதலில் நிற்கிற வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அதுக்குப் பின்னாடி நிற்கிற வண்டி கிளம்பும். கூட்டம் எல்லாம் தப தபவென்று ஓடி அதிலே போய் உட்கார்ந்ததும், அவர் எஞ்சினை ஆ·ப் செய்து விட்டு டீ குடிக்கப் போவார். இதுவா அதுவா என்று தெரியாமல், இறங்கி, பே முழி முழித்துக் கொண்டிருக்கும் போது, மூன்றாவதுதாக நிற்கும் வண்டி டுர்ரென்று கிளம்பி, பிடிப்பதற்குள் போயே விடுவான். உங்க சான்·ப்ரான்ஸிஸ்கோ கதையக் கேட்டா, நம்ம ஊர் ஞாபகம் தான் வருது...

வீட்டுக்கு வீடு வாசப்படி...

பத்மா அர்விந்த் said...

நியுயார்க், வாஷிங்டனில் பொது transport நன்றாக இருக்கும். உங்கள் அனுபவம் நம் ஊரை நினைவு படுத்தியது. புதுதில்லியில் பேருந்துகள் நிறுத்தத்தை டாண்டி நிற்பதுபோல பாவனை செய்வதும், ஓடி சென்று தொற்றி கொள்வதும் தனி அனுபவம்.

Jayaprakash Sampath said...
This comment has been removed by a blog administrator.
Aruna Srinivasan said...

பிரகாஷ்,
".......இதுவா அதுவா என்று தெரியாமல், இறங்கி, பே முழி முழித்துக் கொண்டிருக்கும் போது,...."

அதே..அதே.... :-) :-)

பத்மா, ஐயோ, டில்லி பஸ்ஸா.... தடங்கள் 505, 502 எல்லாம் ஞாபகம் வருதா? :-) :-)

Narain Rajagopalan said...

அட அங்கேயும் இதே நிலைமைதானா. நான் அமெரிக்கான்னு சொன்னவுடனே, வேற மாதிரியில்ல இருக்குமுன்னு நினைச்சேன் ;-) அதவிடுங்க, கொசு இருக்கா ? :-))))))

neyvelivichu.blogspot.com said...

யாரும்ம அது டில்லி பஸ் சொல்லி பய முறுத்துரது?

ரெட் லைன் , ப்ளு லைன் போட்டியிலே உயிரைக் கையில பிடித்துக் கொண்டு போன அனுபவம் எல்லாம் ஞாபகம் வருது..

அன்புடன்

விச்சு

பத்மா அர்விந்த் said...

நன்றாக நினைவிருக்கிறது. நான் கடைசியாக புடவை கட்டியது ஒரு முத்ரிகாவில் ஏற முயற்சித்து கீழே விழுந்த அன்றுதான்!!
பிறகு காசாநோயாளிகளின் உறவினர்கள் அடையாளம் கண்டு கொண்டு எனக்கு இடம் தருவார்கள். இப்போது மாறி இருக்கும் என்று நினைத்தேன்.

Aruna Srinivasan said...

நாரயண், கொசு இன்னும் என் கன்ணுலே படலே....:-) விச்சு, இப்போ எல்லாம் இந்த வர்ணஜாலக் கலர் எல்லாம் கிடையாது டில்லியில். எல்லாம் ஒரே பசுமை - சுற்றுப்புற சூழல் பாதுகாப்புக்கு உகந்த பச்சை வண்ண CNG வாகனங்கள்தாம் எல்லாமே.

துளசி கோபால் said...

இதை படிச்சபிறகும் எங்க ஊர் பஸ்ஸைச் சொல்லலேன்னா எனக்குத் தலை வெடிச்சுடாதா?

இங்கே பஸ் சர்வீஸ் நல்லா ஒழுங்கா இருக்கு. ஸ்டாப் லே நின்னா ஏறக்குறைய 2 நிமிஷம்( டைம்டேபிள்
கணக்குலே) போதும். இதோ பஸ் வந்துருச்சு. நிறைய இடத்துலே ஒரு எலக்ட்ரானிக் சாதனம் வச்சிருக்காங்க. அதை
அழுத்தினா நம்ம பஸ் எப்ப வருமுன்னு சொல்லும்!

ஆனா, இப்ப இங்கே புது பஸ் ஸ்டேஷன் கட்டி இருக்காங்க. அங்கே ஒரு பெரிய போர்டு தொங்குது, எத்தனை
நிமிஷத்துலே நம்ம ரூட் பஸ் வருமுன்னு. அதுலே பாருங்க 4 நிமிஷத்துலே வருதுன்னு 20 நிமிஷமாச் சொல்லிக்கிட்டு
இருக்கும்!

ஆனாலும் பரவாயில்லே. ஆங்.. இன்னொரு விஷயம் ஒருதடவை டிக்கெட் வாங்கிக்கிட்டு ரெண்டு மணி நேரத்துக்குள்ளே
திரும்பி வர்றதா இருந்தா வேற டிக்கெட் எடுக்கவேணாம். அல்லது பஸ் மாறி வேற எடத்துக்குப் போணும்னாலும்
அதுலேயே போகலாம்.' வேலீட் அப் டு'ன்னு நேரம் ப்ரிண்ட் ஆகி கிடைக்கும்.

Aruna Srinivasan said...

துளசி, உங்க ஊர் கதையைக் கேட்டப்புறம், ஐய்யோ பாவம் இந்த ஊர் பஸ் சேவையை ரொம்பவே சதாய்ச்சிருக்கக்கூடாது என்று தோணுது. கொஞ்சம் நல்லதும் சொல்லணும் இல்லையா? :-) இன்னிக்கு ஒரு ரவுண்ட் போய்ட்டு வந்தேன். நாள் முழுதுக்கும் உபயோகப்படுத்தறாப்போல ஒரு டிக்கெட் எடுத்தா, அதை வைச்சுக்கிட்டு நாள் பூரா எந்த பஸ்லே வேண்டுமானாலும், light rail என்கிற மினி ரயிலிலும் கூட ஏறி ஏறி இறங்கலாம். ஹிந்திலே பைசா வசூல் என்று சொல்கிராற்போல், கொடுத்த காசு ஜீரணிக்கிற வரையில் சுத்தியாச்சு :-) அப்புறம் இன்னிக்கு நான் ஏறிய பஸ் எல்லாமே நேரத்து வந்தது. ( அப்பவும் ஒன்றில் மட்டும் ஏதோ கோளாறு. 15 நிமிடம் லேட். - ஹ்ம்ம்... என் ராசி போல. :-) )

Aruna Srinivasan said...

draj,

how can you forget 502 ? :-)of course it touches greenpark and hauz kauz. but on the Aurobindo Marg - not inside. The route is between Redfort and Mehrauli. In those days when I was busy reporting for all the newspapers in Bahadur Shah Zafar Marg, 502 was my daily beat :-)solid one hour ride and during winter - along with "chat -put" noise of Moongfuli. :-) and the typical haryanvi crowd. 507 from Hauz Kauz...? hmmm.... I think yes.

Vijayakumar said...

அமெரிக்காவில் முக்கிய நகரங்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பப்ளிக் ட்ராண்ஸ்போர்ட் ஒரு கண்காட்சி தான். 2 மாதங்கள் வேலைக்காக sunnyvale-ல் வந்திருந்த போது ரோட்டில் நடந்து ஆபிஸ் போனாலே காரில் போவோர் வருவோர் கண்காட்சி பொருளாக எங்களைப் பார்த்து அதிசயித்த நாட்கள் இந்த பதிவை படிக்கும் போது ஞாபகம் வருகிறது.

நியூஜெர்சியில் சில முக்கியமான ரயில் ஸ்டேசனை விட்டு loop என்று சொல்லி போன போகிறதென்று சில இடங்களை பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் பஸ் தொட்டுச் செல்லும். physically challenged மக்களுக்கு பஸ்ஸில் ஏற திறக்கு ஆட்டோமெடிக் ஏறுபடிகள் 'பே' என்று வாய் திறந்து எப்போதாவது பஸ்ஸை பார்த்தால் அதிசயப்பதுண்டு. ஆறில்ல ஊரில் குடியிருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் காரில்லதவனாக வாழ்ந்தால் காலில்லாதவனாக வாழ்வதை விட கடினம். மாதத்திற்கு $317 அழுதுவிட்டு நியூயார்க்கிற்கு நின்று கொண்டு செய்யும் ரயில் பயணம் 12B கூட சில சமயம் பரவாயில்லை எனத் தோணும்.

என்னளவில் ட்ராண்ஸ்போர்ட் பார்த்து அசந்த ஊர் நியூயார்க். எங்கள் VP முதல் கொண்டு என்னுடன் சப்வேயில் வரும்போது கர்வம் தலைக்கேறும்.

இந்த பப்ளிக் டிராண்ஸ்போர்ட் காரணமாகவே சிங்கப்பூர் பிடித்துப்போய் விட்டது. $2 ரூபாயில் சிங்கப்பூரின் ஒரு கடைசியிலிருந்து அடுத்த கடைசிக்கு போய் வந்து விடலாம் ஊர் சிறிதானாலும் :-)

Ramya Nageswaran said...

அன்புள்ள அருணா,

oh that is great என்று படித்தவுடன் என்னுடைய அனுபவம் ஒன்று ஞாபகம் வந்தது. நான் அங்கு படித்துக் கொண்டிருந்த பொழுது என்னுடன் படித்த (என் வயதை ஒத்த) ஒரு பெண் மிகவும் fitness consciousஆக இருந்தாள். எனக்கு அதெல்லாம் அப்பொழுது தெரியாது. "பரவாயில்லையே. நீ இவ்வளவு நிறைய exercise செய்கிறாயே? எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாது." என்றேன்.

அதற்கு "oh that is great" என்றாள்.

"What can be great about this?" என்று நினத்துக் கொண்டேன். நல்ல வேளை அவளே மேலும் தொடந்தாள்.

"எங்கள் கலாசாரத்தில் எங்கள் மனதிற்கு பிடித்த boy friend கிடைக்க வேண்டும் என்றால் கடும் போட்டி நிலவும். அதற்காக எப்படியாவது ஒல்லியாக இருக்க வேண்டிய கட்டாயம்" என்று.

இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது. ஆனால் oh that is greatன் அர்த்தம் புரிந்தது.

Aruna Srinivasan said...

விஜய், பொது வாகன சேவையிலே, நேரம், நெட்வொர்க், சுத்தம், டெக்னாலஜி, சொகுசு வசதி, என்று ஒரு லிஸ்ட் போட்டால் - எனக்குத் தெரிந்து சிங்கப்பூரை அடிச்சிக்க முடியாது - டோக்கியோவையும் இதே வரிசையிலே சேர்க்கலாம். நியூயார்க் நல்ல நெட்வொர்க் என்றாலும் ஏனோ நம்ம மும்பாயை நினைவூட்டுகிறது. இன்னும் பாக்கி ஊருக்கெல்லாம் போயிட்டு வந்து சொல்றேன். முக்கியமா துளசி ஊருக்கு :-)

ஆமாம் என்ன இது.....? இப்படி ஒரு வரி எழுதி எங்கேயோ போயிட்டீங்க - அட்சரம் தேறும் :-)

ரம்யா, இப்போ புரிஞ்சு போச்சு, அமெரிக்கர்களின் தோள் குலுக்கல் மாதிரி, இந்த "oh, that is great" க்கு ஆயிரம் அர்த்தம் கண்டுபிடிக்கலாம். சிங்கப்பூரின் " can?" மாதிரி :-)

Aruna Srinivasan said...

விஜய்,

"...ஆறில்ல ஊரில் குடியிருக்கலாம் ஆனால் அமெரிக்காவில் காரில்லதவனாக வாழ்ந்தால் காலில்லாதவனாக வாழ்வதை விட கடினம்....."

ஆமாம் என்ன இது.....? இப்படி ஒரு வரி எழுதி எங்கேயோ போயிட்டீங்க - அட்சரம் தேறும் :-)

அன்பு said...

எப்படியோ வீட்டுல போர் அடிக்குதுன்னு சொல்லாம என்சாய் பண்ணறீங்க...:)


said...

வடபழநி டெர்மினஸ்ஸில் நாலு 15F நிற்கும். முதலில் நிற்கிற வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், அதுக்குப் பின்னாடி நிற்கிற வண்டி கிளம்பும். கூட்டம் எல்லாம் தப தபவென்று ஓடி அதிலே போய் உட்கார்ந்ததும், அவர் எஞ்சினை ஆ·ப் செய்து விட்டு டீ குடிக்கப் போவார். இதுவா அதுவா என்று தெரியாமல், இறங்கி, பே முழி முழித்துக் கொண்டிருக்கும் போது, மூன்றாவதுதாக நிற்கும் வண்டி டுர்ரென்று கிளம்பி, பிடிப்பதற்குள் போயே விடுவான்.
இதை பலமுறை அனுபவிச்சுருக்கிறதால கப...கபன்னு சிரிச்சேன்...

$2 ரூபாயில் சிங்கப்பூரின் ஒரு கடைசியிலிருந்து அடுத்த கடைசிக்கு போய் வந்து விடலாம் ஊர் சிறிதானாலும் :-)
ஓய் விஜய்... 2 வெள்ளில நாட்டையே ஒரு வலம் வந்துறம்லான் சொல்லுங்க...

Vijayakumar said...

//நியூயார்க் நல்ல நெட்வொர்க் என்றாலும் ஏனோ நம்ம மும்பாயை நினைவூட்டுகிறது. //

அழுக்கு தரை, தூங்கி வழியும் விளக்குகள், குகை போல தாழ்வான உத்திரங்கள், மொந்தை கலவையாக மக்கள்.. ஆம்.. மும்பையை நினைவு படுத்தலாம். ஆனால் நான் மும்பை பார்த்ததில்லை :-)))

நன்றி அருணா.

அன்பு,

//ஓய் விஜய்... 2 வெள்ளில நாட்டையே ஒரு வலம் வந்துறம்லான் சொல்லுங்க... //

இல்ல ஓய், சின்ன ஊரா இருக்கிறதுனால சிங்கப்பூர் ஒரு நாடு என்ற பிரஞ்ஞையே வரவில்லை. ஏதோ தீம்பார்க்குக்கு வந்த மாதிரி தான் ஃபீலிங்.

Aruna Srinivasan said...

அன்பு, அதென்னவோ எனக்கு இந்த "போர்" மட்டும் அடிச்சதேயில்லை. வாழ்க்கையிலே எவ்வளவு இருக்கு !!! தெரிஞ்சுக்க, கற்றுக்கொள்ள, அனுபவிக்க, கொடுக்க...... :-) விஜய், "தீம் பார்க்" நல்ல உவமை. "பெரிய ஷாப்பிங் மால்" என்றும் சொல்லுவோம். :-)

Venkat said...

அருணா - ஐஐடி டில்லியில் படித்த காலத்தில் அரசாங்க வாகனமெல்லாம் தவிர தனியார் மினிபஸ்களைத்தான் நிறைய நம்பியிருந்தோம். இவை நிறுத்தத்தில் நிற்கமாட்டா. சரியாக 67.5 அடி தள்ளி முன்னால் நின்றால் உங்கள் காலடியில் படி வரும். நாம் படியில் தொற்றிக் கொண்டு திரிசங்காக ஒற்றைக் காலை காற்றில் தொங்க விட்டுக் கொண்டு போகும்பொழுது முதல் இரண்டு நாட்கள் பயமாகத்தான் இருந்தது. ஆனால் பஸ் கண்டக்டர் என்று சொல்லப்பட்டவருக்கு கட்டைவிரலை மட்டும் படியில் வைத்தால் போதுமானதாக இருந்ததைப் பார்த்தபிறகு பயம் தெளிந்தது.

டோக்கியோ பொதுப் போக்குவரத்து கொஞ்சம் காஸ்ட்லி, ஆனால் அபார துல்லியம். நான் பயணித்த இடங்களிலேயே பொதுப்போக்குவரத்தில் என்னைக் கவர்ந்தது ஹாலந்துதான். கல்யாணம் ஆன புதிதில் இலக்கில்லாமல் முதுகில் ஒற்றைப் பையுடன் நானும் என் வூட்டுக்காரியும் எல்லா டவுன் பஸ், ட்ராம், படகு, மெட்ரோ ரயில், தொலைதூர பஸ் என்று வர்ஜாவர்ஜமில்லாமல் இரண்டு வாரம் சுற்றியிருக்கிறோம். அற்புதமான போக்குவரத்து.

Aruna Srinivasan said...

வெங்கட்,

"....பஸ் கண்டக்டர் என்று சொல்லப்பட்டவருக்கு..."
ரொம்ப சரி.. யூனிபார்ம் பற்றி கவலையே படாத ஒரு பொது பஸ் சேவை :-)

அதுசரி, ஹாலந்து போக்குவரத்து உங்களைக் கவர்ந்ததற்குக் காரணம் வேறு - அதான் சொல்லிட்டீங்களே.... "கல்யாணம் ஆன புதிதில்... நானும் என் வூட்டுகாரியும்...." :-)

just kidding :-)

ஹ்ம்ம்... இப்போ புதுசா, ஹாலந்தை வேறு என் " போக வேண்டிய" லிஸ்டில் சேர்த்துவிட்டீர்கள். பார்க்கலாம்.... எப்போ சான்ஸ் வரும் என்று....:-)

dondu(#11168674346665545885) said...

தில்லியில் தட என் 507 முனீர்க்காவிலிருந்து ஓக்லாவுக்கு செல்லும். (முனீர்க்கா-->ஹௌஸ் காஸ்--> அரபிந்தோ மார்க்--> உள்வட்டச் சாலை--> கிழக்கு கைலாஷ் சாலை-->ஓக்லா)

அன்புடன்,
டோண்டு ராகவன்