Tuesday, May 03, 2005

திசைகள் மே மாத இதழ் வெளிவந்துவிட்டது. இந்த முறை வித்தியாசமான சிறப்புப் பகுதி.

அன்புடன் பகுதியில் மாலன் இப்படி கூறுகிறார். "........அரசியல்வாதிகள் என்று வரலாறு அடையாளமிட்டிருப்பவர்களுக்குள் மென்மையான கவி மனம் ஒன்று இருந்ததுண்டு.அரசியலில் இருந்து உள்முகமாகப் பார்வையைத் திருப்பி இளைப்பாறும் நிழலாக அது அவர்களுக்கு உதவியதுண்டு...............அரசியல்வாதிகளை இலக்கியத்தின் பால் இழுத்து வருவது எது? அரசியலின் வெப்பமா?.............." என்று கூறி ஜவஹர்லால் நேரு, மாசேதுங், வாஜ்பாய் என்று பலரை உதாரணமாக காட்டியுள்ளார்.

இந்த சிறப்புப் பகுதி பற்றி என்னுடைய விமரிசனம் ஒன்றுமில்லை. சரித்திர நாயகர்களின் படைப்புகளைப் பற்றி நான் என்ன சொல்ல இருக்கிறது? இருந்தாலும் கவிதை என்றாலே கிலோமீட்டர் கணக்கில் ஓடிவிடும் எனக்கு சில கவிதைகள் பிடித்து இருக்கிறது. மொழி பெயர்க்கப்படும் கவிதைகள் பற்றி பொதுவாகவே எனக்கு ஒரு சந்தேகம். கவிதையின் 50 சதவிகித அழகு வார்த்தைப் பிரயோகத்தில் உள்ளது. அப்படி பார்க்கும்போது கவிதைகளை மொழிபெயர்ப்பவர்களுக்கும் நிறையவே பாராட்டு போய்ச் சேர வேண்டும் இல்லையோ? அந்த விதத்தில் வ. கீதா, கண்ணன், ராஜதுரை மற்றும் யாரெல்லாம் மொழிபெயர்த்தார்களோ அவர்களுக்கும் பாராட்டுகள்.

இதுபோல் கிரிக்கெட்டிற்கும் எனக்கும் உள்ள "நெருக்கம்" பற்றியும் இங்கே வழக்கமாக "அலைகளில்" வந்து கால் நனைத்து போகிறவர்களுக்கு தெரியும். ஆனாலும் அப்துல் ஜப்பாரின் நகைச்சுவையான ஆரம்பம் இந்தக் கட்டுரையைப் படிக்க வைத்தது. அருமையான ரசிகர். அக்கு வேறு ஆணி வேறாக போட்டு அலசியிருக்கிறார்.

தவிர பத்மா அரவிந்தின் பயணக் கட்டுரை. அவருடைய வழக்கமான இயல்பான நடையில் நன்றாக இருக்கிறது. "அழகிய கட்டிடங்களும் மலைகளும் கண்ணைக்கவர.............." ...... "வந்தபோது பார்த்த அதே கட்டிடங்கள், அருவிகள் எதுவும் தெரியவில்லை........" என்ற இந்த இரு சொற்றொடர்களுக்கு நடுவே அவர் விவரித்துள்ள அனுபவம் கசப்பானது. இந்தியா திரும்பியபின், " எத்தனை மோசமானதாக இருந்தாலும் ஜனநாயகம் அருமையானது என்பது மட்டும் நிச்சயமாக புரிந்தது" என்று முடிக்கிறார். இது ரொம்ப நிஜம்.

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட குறுந்தகடு பற்றிய தகவல்கள் - சர்ச்சைகள் உள்பட. - அடங்கிய கட்டுரை.

மற்றபடி வழக்கமான தொடர்கள் - சிங்கப்பூரில் ரெ. கார்திகேசுக்கான விழா, தமிழ்நாட்டுக்கலைக்கோயில்கள்.

அதுசரி; முகங்கள் என்று ஒரு பகுதி ஆரம்பித்துள்ளாரே மாலன். அது ஏதோ வம்பை விலைக்கு வாங்கியே ஆவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டாற்போல் இருக்கிறது. திசைகளில் இது தேவையா?

10 comments:

Anonymous said...

//அதுசரி; முகங்கள் என்று ஒரு பகுதி ஆரம்பித்துள்ளாரே மாலன்...திசைகளில் இது தேவையா?
///
என் எண்ணமும் அதே !

ரவியா said...

மேலே நான் தான் !
ரவியா

Anonymous said...

ஒரு குட்டி அறிவிப்பு:
கருத்துப் பெட்டி சுரதா அமைத்தது. இதில் நேரடியாக தமிழில் உள்ளிடும் வசதி இருப்பதால் இதை இங்கு வைத்துள்ளேன். கருத்துப் பதிபவர்களுக்கு ஒரு சின்ன வேலை. கடைசியில் தங்கள் பெயரையும் எழுத வேண்டும் இல்லாவிட்டால் அனாமதேயமாக இது பதிந்து கொள்ளும். ஒரு வேளை உங்கள் பதிவின் முகவரி தெரியும் வண்ணம் கருத்துப் பதிய வேண்டுமென்றால், இந்த தமிழ் பெட்டியை ஒரு முறை காலியாக தட்டிவிட்டு, பின் திறக்கும் பிளாக்கரின் கருத்துப் பெட்டியில் வழக்கம்போல் சுரதாவின் பொங்குதமிழில் யூனிகோடில் மாற்றப்பட்ட எழுத்தைப் பதியுங்கள். இப்படி செய்தால் அனாவசியமாக இருமுறை பதிக்க வேண்டியிருக்காது. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

Aruna

Anonymous said...

It is deplorable that neither you or Maalan or Chandran or Amudhasurabi Anna kannan or any body else masquarading around as 'paththirikaiyaaLarhaL' havent written anything about 'Taraki' Sivaram. I know that a blogger should not be coerced into writing anything specific. But as pressman/woman dont you think you should have atleast written something somewhere as a response or at least should have signed the petition.

When you dont even raise your voice for a fellow pressman, how could you expect others to raise their voice to condemn what is done to you, Maalan?

I can understand that a regular magazine would have problems due to deadline etc if it wants to insert some unexpected happenings. I was, rather naively, expecting to read something on Taraki Sivaram. It is a pity that Maalan/Thisaigal have chosen to ignore the said sad incident.

-a blogger

Anonymous said...

Is Thisaigal continuing the Tamil Blogger contest?

With Maalan discontiuing the section on Tamil Bloggers, it is clear that the contest is also abandoned.

Anyway, it is a good deed on Maalan's part to abandon the contest, as the veracity of the whole thing has become questionable. No offense to the judges, who are still active b loggers.

Anonymous said...

Hello Aruna

I am not able input characters in tamil in the feedback box. I am using firefox browser.

Has anybody else reported this problem?

Murali
KS USA

Anonymous said...

முரளி,

இந்தப் பெட்டியில் ரோமனைசஸ்டு என்று இருக்கும் பொத்தானை அமுக்கிவிட்டு வழக்கம்போல் தமிழில் எழுதுங்கள். இதோ,நான் இப்போது அப்படிதான் செய்கிறேன். மறுபடிநினைவூட்டுகிறேன் - ரோமனைஸ்டு என்கிற பொத்தானை முதலில் அமுக்குங்கள்.

அருணா.

Anonymous said...

னமச்டெ அருன: திச் இச் ச்நகில்ய ட்ர்யிங் டொ ந்ரிடெ சொமெதிங் ஒன் ட்கெ டமில் fஒன்ட், புட் சுர்ப்ரிசிங்ல்ய் இட் சேம்ச் டொ பெ அ புன்ஷ் ஒf fஉன்.

Swahilya said...

Hi Aruna: I just tried typing something in Tamil. But it turned out to be some bit of fun. Anyway, it was fun. The anonymous is me.

Anonymous said...

நான் விரும்பிப் படிப்பவைகளில் திசைகளும் ஒன்று அருணா அக்கா!

***மூர்த்தி.