Sunday, March 13, 2005

சில நாட்கள் முன்பு எனக்கு ஒரு சினேகிதியிடமிருந்து ஈமெயில் வந்திருந்தது. அது ஒரு கூட்டு கடிதம் ( Mass mail). அதை அப்படியே தமிழில் கொடுத்துள்ளேன். இத்துடன் இந்த மகளிர் வாரம் நிறைவு பெறுகிறது :-)

Andy Rooney என்கிற CBSன் 60 நிமிஷம் என்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எழுதுவதாக இந்த கடிதம் தொடங்குகிறது.

over to Andy !

முப்பது வயது மேற்பட்ட பெண்கள் எனக்கு பிடிக்கும். அவர்கள் நடு நிசியில் உங்களை எழுப்பி " என்ன யோசனை?" என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அவளுக்கு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் அதில் அக்கறையில்ல.லை. 30 வயதுக்கு மேலுள்ள பெண் தனக்கு பிடிக்காத விளையாட்டை முணுமுணுத்துக் கொண்டே பார்க்கவும் மாட்டாள். அவளுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் செய்வாள். அது ஓரளவு நன்றகவே இருக்கும். 30 வயதுக்க்கு மேலான பென்ணுக்கு தான் யார், தனக்கு என்ன வேண்டும் என்ன பிடிக்கும், பிடிக்காது என்று திட்டவட்டமாக தெரிந்திருக்கும். அவள் பெரும்பாலும் பிறர் - குறிப்பாக நீங்கள் - அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சற்றும் கவலைப் படமாட்டாள்.
அதோடில்லை. இந்த பெண்கள் சற்று அதிகமாகவே புகழுவார்கள். - புகழப்படுபவர்களுக்கு தகுதி உள்ளதோ இல்லையோ ! இருந்தாலும் எங்கே யாரை எவ்வளாவு புகழ வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் ! ஒரு ரெஸ்டாரெண்ட் போகும்போது அல்லது சினிமா பார்க்கும்போது அனாகரிகமாக கத்தி அமர்க்களம் பன்ண மாட்டாள். தன் பெண் சினேதிகளிடன் கணவரை அறிமுகபப்டுத்தும்போது தயக்கமில்லாமல் செய்வாள். அவளுக்கு மற்ற இளம் பெண்கள் போல் கணவனைப் பற்றி அனாவசிய பயம் இருக்காது. இன்னொரு காரணம், அவளுக்கு அவளுடைய சினேகிதகள் மேல் நிறைய நம்பிகை உண்டு. !!!!
*******
இந்த கடிதத்தைப் பார்த்ததும் இன்று நிறைய இளைஞர்கள் தனியாக இருப்பதை விரும்புகிறார்கள் என்று எப்போதோ படித்த புள்ளி விவரம் நினைவுக்கு வந்தது. கல்யாணமாவது கத்தரிக்காயாவது? சுதந்திரமாக இருப்பதைவிட்டுவிட்டு...? என்று நினைக்கும் கூட்டம் அதிகமாகிறது என்று கேள்விபட்டேன். இதைப் பற்றி இனி அடுத்த வாரம். தற்போதைக்கு விடை பெறுகிறேன்.

1 comment:

Dr.N.Kannan said...

ஜப்பானில் தற்போது பெண்கள் வேலைக்குப் போவதால் கல்யாணம் செய்து கொள்ள ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பதில்லையென்று ஸ்ரீலங்காவிலிருந்து பௌத்தப் பெண்கள் இறக்குமதியாவதாக நான் அங்கு இருந்தபோது சொன்னார்கள். இப்போது நிலமை என்னவென்று தெரியவில்லை.