Sunday, January 30, 2005

மகாத்மா காந்திஜி நினைவு நாள்

இன்று ஜனவரி 30. மகாத்மாவிற்கு தேசம் அஞ்சலி செலுத்தியது.

இன்று தேசத்தில் இதெல்லாமும் நடந்தன.

பாபரி மஸ்ஜித் தாக்குதல் 10 மாதம் திட்டமிட்டு செய்யப்பட்டதென்று பழைய உளவுத்துறை அதிகாரி கூறுகிறார்.

பீஹாரில் இன்னொரு பள்ளிச்சிறுவன் காணவில்லை

காஞ்சி வழக்கில் மேலும் தகவல்கள்.

ஹெலிகாப்டரில் குண்டு. நாக்ஸல்பாரி வன்முறை

அபு சலாமை போர்சுகல் அரசு வெளியேற்றுவதன் மூலம், 1993ல் மும்பாய் குண்டு வெடிப்பு தொடர்பாக பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் போலீஸ் விசாரணக்கு ஆளாக நேரிடும் - செய்தி.

ஆலடி அருணா கொலை வழக்கில் கல்லூரி நிறுவனர் கைது.

அஹிம்சைவாதி அமரர் அண்ணல் காந்திஜிக்கு சமர்ப்பணம். ஹே ராம் !

பி.கு: இந்தப் பதிவின் பாரத்தை மகாத்மாவினால் தாங்க முடியவில்லை போலிருக்கிறது. சரியாகப் பதிப்பிக்க முடியாமல் பலமுறை முயன்று இங்கே பதிந்துள்ளேன்.

2 comments:

dondu(#11168674346665545885) said...

ஆனால் ஜனவரி 30-ஆம் தேதிக்கான என்னுடைய நகைச்சுவைப் பதிவு உடனே ஒரு பிரச்சினையும் இன்றி உடனே பதிவாகி விட்டது. மஹாத்மா காந்திக்கு நகைச்சுவை பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
அன்புடன்,
டோண்டு ராகவன்

Aruna Srinivasan said...

ஓ அப்படியா சேதி ! வருகிற (!) அக்டோபர் 2 ந்தேதி ஒரு நகைச்சுவை சமாசாரம் எழுதி காந்திஜியை சிரிக்க வைத்துவிட்டாற் போச்சு ! :-)