Friday, January 30, 2004

"அலைகள்" சற்று ஓய்ந்துதான் போய்விட்டன. என் அப்பாவின் மறைவு காரணம். எத்தனை வயதானாலும் அப்பா, அம்மா என்றால் மனம் கசிகிறதே. எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை ஒரு சகாப்தம் முடிந்தது.

ஆனால், அன்பு, ஒழுங்கு, நேர்மை, எளிமை கடமை, மனசில் தெளிவு, தைரியம், நம்பிக்கை, பணிவு, அடக்கம், வாழ்க்கையில் ஆர்வம் என்று பலவிதங்களில் அவர்கள் எங்களுக்கு உதாரண வாழ்க்கை காண்பித்து இருந்தார்களே..
அதனால்

life goes on.... and I am trying to put the wheels back on track...

Friday, January 02, 2004

நேற்று முழுவதும் யாரைப் பார்த்தாலும், அல்லது தொலைபேசியை எடுத்தவுடன் மறுமுனையில், ஒரே மலர்ச்சியுடன் " ஹாப்பி நியூ இயர்" அல்லது " புத்தாண்டு வாழ்த்துக்கள்" மயம்தான். வருடப் பிறப்பன்று ஆபீஸ்களில் வேலையே ஓடாது. காலையில் வாழ்த்து சொல்லி கையை நீட்டினால் சாயிந்தரம் வீடு திரும்பும்வரை கையை மடக்கவே நேராது என்று பலர் ஜோக் அடிப்பது வழக்கம்.

இந்த முறை சுற்றிலும் கவைத்தபோது ஒன்று தோன்றிற்று. உலகெங்கும், மகக்ள் அனைவரும் ஒரே மாதிரியாக ஒரு தினத்தில் மகிழ்ச்சியோடு ஒருவரையருவர் வாழ்த்திக்கொள்ளும் ஒரே "பண்டிகை" தினம் இந்த ஆங்கில புத்தாண்டுதான். ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண், எந்த எந்தவித வித்தியாசமும் இல்லாமல் நேசக்கரம் நீட்டுவது இந்த ஒரு நாளில்தான். என்ன சொல்கிறீர்கள்?

பி. கு: அடுத்தவீட்டில் ஒரு மாமி, வாசலில் வழக்கமாக பண்டிகை நாளில் போடும் கோலத்தைப் போட்டிருந்தார். ஆங்கிலமாவது ஒன்றாவது? அவரைப் பொறுத்தமட்டில் பொங்கல், தீபாவளியோடு சேர்த்து இந்த ஆங்கில வருடப்பிறப்பும் ஒரு பண்டிகையாகிவிட்டது. சரிதான். குதூகலம் எந்த உருவில் வந்தால் என்ன? மொத்தத்தில் மகிழ்ச்சியை / சினேக பாவத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.

Thursday, January 01, 2004

அனைவருக்கும் என்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.