Sunday, November 14, 2004

தீபாவளியன்று நடந்த காஞ்சி நிகழ்வு எனக்கு ஒரு ஷாக் இல்லை. பெரிய பெரியவர் இருந்த காலத்தில் அவர் மேல் எனக்கு பெரும் மதிப்பு இருந்ததுண்டு. குறிப்பாக கல்கியில் வெளி வந்த அவரது "அருள் வாக்குகள்" பல எனக்கு பல சம்யங்களில் ஒரு மன உறுதியைக் கொடுத்துள்ளன. ( எனக்கு பிடிக்காமல் இருந்த அருள் வாக்குகளும் உண்டு- அது வேறு விஷயம்.) பொதுவாக அவை மதம் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபடாமல் மனிதம் என்ற முறையிலேயே இருந்தன.

ஆனால் ஏனோ ஜெயேந்திரரை அப்படி மதிக்க தோன்றியதேயில்லை. பல சமயங்களில் அவரது போக்கு அவரது "துறவி" நிலைக்கு சம்பந்தமில்லாதது போல்தான் தோன்றியுள்ளது. அரசாங்க வழக்கறிஞர் கூறியதுபோல் நிறையபேர் உணரலாம் -"அந்தப் பதவியின் மேல் மிகுந்த மதிப்புண்டு. ஆனால் அதில் இருக்கும் நபர் மீதல்ல" என்று ஆணித்திரமாக சொல்லியிருக்கிறார்.

ஆனால் இந்த நிகழ்வு ஓர் ஆச்சரியம். வலைப்பதிவுகளில் நிறைய பேர் எழுதியதுபோல் சாதாரணர்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை மீண்டும் துளிர் விடும்படி ஒரு நிகழ்வு. - (கடவுளே, கண் படாமல் இருக்க வேண்டுமே! அரசியல் குறிக்கிட்டு நீதி காணாமல் போகாமல் இருக்க வேண்டுமே??!!) குற்றம் இன்னும் கோர்ட்டில் நிரூபணம் ஆகாத வரையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு benefit of doubt கொடுக்க வேண்டுமென்பது மரபு. அதனால் வரும் நாட்களில் இது எபப்டி போகிறது என்று பார்க்கலாம்.

ஆனால் என் வருத்தமெல்லாம் இப்போ என்னவென்றால் பொதுவாக வெளி நாடுகளில் நிலவும் செழுமைக் குறித்து பேசும்போது அனேக இந்தியர்கள் பெருமையாக, " அங்கெல்லாம் நிறைய பணம் இருக்கு. சுத்தம் சுகாதாரம் எல்லாம் சரிதான்; ஆனால் நாம் ஆன்மீக பாதையில் நாம்தான் உலகுக்கே வழிகாட்டி. லௌகீக வாழ்வில் வேண்டுமானால் அவர்கள் தரம் உயர்ந்திருக்கலாம். ஆனால் நாம் அகத்தூய்மையில் மேம்பட்டு இருக்கிறோம்...." என்ற ரீதியில் பிரமாதமாக சமாதனம் சொல்லிக்கொள்வோம். இதே வாரம் சென்னையில் இன்னொரு சந்நியாசியும் கைது என்ற செய்தி வந்த இரண்டு நாளில் இந்தக் காஞ்சி மடம் செய்தி. அகமாவது? புறமாவது? எங்கே போய் முகத்தை வைத்துக்கொள்ள?

அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு எதை வேண்டுமானலும் யாரை வேண்டுமானாலும் நம்பும் மக்களை நினைத்தால் ஒரு பக்கம் கோபமும் ஒரு பக்கம் பரிதாபமும்தான் எழுகிறது. புற்றீசல் போல் கிளம்பும் அதிக வட்டி நிதி நிறுவனங்கள் போல் self styled ஆன்மீகவாதிகளும் சமீபகாலமாக எக்கச்சக்கமாக முளைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பக்தர்கள் எப்படியோ உருவாகிவிடுகிறார்கள். பலமுறை உண்மை நிலைகள் வெளிப்பட்டபின்னும் ஏன் இப்படி மக்கள் விட்டில் பூச்சி மாதிரி விழுகிறார்கள்? என்ன தேடி இவர்கள் பின்னால் செல்லுகிறார்கள்? பணம்? செல்வாக்கு? மன அமைதி?

தங்கள் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் ஆராய்ந்து பாஸிடிவ் நோக்குடன் தீர்வு தேடுவதைவிட்டுவிட்டு - பிரச்சனையும் தீர்வும் தங்களுக்குள்ளேதான் இருக்கிறது என்பது புரியாமல் எதையோ நிழலைத் துரத்திக்கொண்டு போகிறார்கள் என்று தோன்றுகிறது. அதுவும் பல "குருமார்களின்" பக்தர்கள் தம் தம் குருதான் கடவுள் என்று நிஜமாக நம்பும்போது இவர்களை நினைத்து பரிதாபப்படாமல் என்ன செய்ய? இந்த ரீதியில் எத்தனை கடவுள்கள் இப்போது நடமாடிக்கொண்டிருக்கிறார்களோ? கணக்கெடுத்து மாளாது.

7 comments:

Venkataramani said...

Even though some fake saints were exposed earlier, I think this event will be a great shock and make people re-think about their beliefs in living saints. Especially, Women in India have to be enlightened better about these "Mutrum thuravaadha munivargal".

PKS said...

Hi Aruna, Good one. I am glad to hear such views from learned and well read people like u. That reinforces my beliefs on such matters. Regards, PK Sivakumar

Aruna Srinivasan said...

ரமணி, PK,

என் கருத்து சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறேன். ஜெயேந்திரர் மீது எனக்கு அபிமானம் இருப்பதும் இல்லாததும் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில் ஒன்று. ஆனால் போலி ஆன்மீகவாதிகளைப் பற்றி பேசும் அதே தொனியில் இவரைப் பற்றி - பாரம்பரிய மிக்க ஒரு ஸ்தாபனத்தின் தலைமை ஸ்தானத்தில் இருப்பவரை - நினைக்கவும் மனம் கூசுகிறது. நிச்சயமாக நான் அப்படி நினைக்கவில்லை. இவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல கருத்துக்கள் நிலவும்போது என்னைப் போன்ற சாதாரணர்களுக்கு குழப்பம் ஏற்படுவது நியாயம்தானே? As I have clearly said in my post, in the absence of clear evidences in court, the benefit of doubt has to be given to him. குற்றவாளியாக நிரூபணம் ஆகிவிட்டால் அது துரதிருஷ்டவசமானது. அப்படியில்லையென்றால் அனாவசியமாக ஒரு தனிப்பட்ட மனிதரின் - individual - மேல் சேற்றை வாறியிறைத்தது போல் ஆகிவிடும். ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதிக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது. ஒரு சாதாரண பிரஜையாக உண்மை நிலை என்னவென்று தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

Jafar Ali said...

நண்பர்களே ஒன்று புரிந்து கொள்ளுங்கள். மனிதன் மனிதன் தான் அவன் ஒரு நாளும் கடவுளாகவோ இல்லை கடவுளின் அவதாரமாகவோ ஆகவே முடியாது. மடத்தின் மனிதர்களும் சாதாரண மனிதனின் ஆசாபாசங்களில் தான் உழல்கிறார்கள் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

PKS said...

Aruna, I think I have understood what you said. :-) I also agree that jeyendrar has all the legal options to fight this one and chances to clear his name. Until a final judgement is given (will it be given is a diff question) and he is proved guilty, we cannot and should not treat him as guilty. I agree with your complete article including your personal views abt Late Periyavar and him. I share such personal views too. Regards, PK Sivakumar

Anonymous said...

All said and done, the fact that the image of the Kanchi Mut has had a beating and will take eons to clear. It is most unfortunate and time will only tell whether people who believe in n number of godmen in India would continue to do so. We should wait and watch. Ganesan, Bhopal

Anonymous said...

Read your comments on Kanchi Seer's arrest. Above all, the ongoing enquiries and media reports about the holy Mutt reveals shocking information notwithstanding the fact whether the Seer is guily or not.