Thursday, July 01, 2004

"வரவு எட்டணா செலவு பத்தணா "

நிதி அமைச்சர் சிதம்பரம் எக்கச்சக்கமாக கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார். 8 ம் தேதி அளிக்க வேண்டிய பட்ஜெட் பற்றி சொல்லவில்லை. அதைத் தவிரவும் இன்னும் என்ன எல்லாம் செய்து செலவுகளைக் குறைத்து கையிருப்பை எப்படி புத்திசாலித்தனமாக கையாளலாம் என்று கணக்குப் போட்டுகொண்டிருக்கிறார். நம்ம வீட்டுக் கணக்கிலே கூட பட்ஜெட் போடும்போது பழைய கடன் இருந்தால் கடனுக்கு வட்டி என்று ஒரு தொகை ஒதுக்க வேண்டும் இல்லையா? நம் குடும்ப பட்ஜெட்களைப் போல் - அதாவது கடன் வாங்கும் குடும்பங்களில் - அரசாங்க வரவு செலவு திட்டங்களிலும் வாங்கிய கடனுக்கு வட்டி என்று கொடுப்பதே பெரிய தொகையாக இருக்கும். ஆனால் அசலை ஓரளவு கட்டிவிட்டால் நமது வட்டித் தொகையாவது கொஞ்சம் குறையும் இல்லையா? அதைத்தான் சமீபகாலமாக நமது அரசு அடிக்கடி செய்து வருகிறது. முடிந்தபோது கடன்களைத் திருப்பிகொடுத்து வருகிறது. இப்போது உலக வங்கி மற்றும் Asian Development Bank போன்ற ஸ்தாபனங்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களில் சுமார் 2 அல்லது 3 பில்லியன் டாலர் அளவு திருப்பிக் கொடுத்துவிடலாமா என்று நிதியமைச்சு யோசனை செய்கிறது. இந்தக் கட்டுரையின்படி, நமக்கிருக்கும் மொத்த கடன் சுமார் 100 பில்லியன் டாலர்கள்.

பட்ஜெட் சம்யம் வரும்போதெல்லாம் நம் காதில் அடிக்கடி விழும் ஒரு வார்த்தை - Fiscal Deficit அதாவது பட்ஜெட்டில் விழும் துண்டு -( நம்ம கணக்கில் வேஷ்டி சைஸ் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் ) ஒவ்வொரு வருடமும் நிதியமைச்சர் இந்த "வரவு எட்டணா செலவு பத்தணா " கதையைச் சொல்லி கொஞ்சம் துண்டு விழுகிறது - அதை விரைவில் சரிகட்டி விடலாம் என்ற ரீதியில் பேசுவார். 1996 -97ல் சிதம்பரத்தின் பட்ஜெட் ஒரு Dream Budget என்று சிலாகிக்கப்பட்டு பின்னர் அதுவே Nightmare ஆனதாக விமரிசிக்கவும் பட்டது. அதனால் இந்த முறை தன் பட்ஜெட் உரையில் நிச்சயம் இதை நினைவூட்டும் வன்ணம் ஏதேனும் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இந்த பற்றாக்குறை துண்டு என்பது சில வருடங்களுக்கு முன் GDPயில் 4 சதவிகிதமாக இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, 5 அப்புறம் 5 புள்ளி சொச்சம், என்ற ரீதியில் வளர்ந்து இப்போது அது 5 புள்ளி 8 சதவிகிதத்தில் உள்ளது. அந்த வருட பட்ஜெட் அளிக்கும்போது இந்த பற்றாகுறை துண்டு 1 சதவிகிதம் ரேஞ்சிற்கு மேல் போகக் கூடாது என்பது என் எதிர்பார்ப்பு என்று கூறினார். ஆனால் அது இப்போதைக்கு நடப்பதாக தெரியவில்லை என்பது மட்டுமல்ல. துண்டு வேஷ்டியாகி, ஆறு கஜம் புடவையாகும் அளவு பெரிதாகிக்கொண்டிருக்கிறது..

இந்த மாதிரி பட்ஜெட்டில் துண்டு விழுந்து அரசாங்கத்திற்கு செல்விற்கு பணம் தேவைப்படும்போதெல்லாம் பங்குச் சந்தையில் கடன் வாங்கும். Tresuery Bill என்று சொல்லப்படுகிற இந்த அரசு பத்திரங்கள் மூன்று மாதம் அல்லது ஒரு வருடம் என்ற கால அளவில் திரும்பப் பெறும் வண்ணம் இருக்கும். நம்மைப் போல் சாதாரணர்களுக்கு இவைமில்லை. பொதுவாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் இவற்றை வாங்கும். இதைத் தவிர உலக வங்கி போன்ற இடங்களிலிருந்தும் அரசுக்கு கடன் உதவி கிடைக்கிறது இல்லையா? இப்படி கடனுக்கு கொடுக்க வேண்டிய வட்டி மட்டும் இந்த வருடம் ( 2004-05) 1,29500 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர திருப்பி கொடுக்க வேண்டிய அசலையும் சேர்த்தால் இந்த வருடம் திருப்ப வேண்டிய கடன் 3,34197 கோடிகளாம்.

கூடிய விரைவில் சில வருடங்களில் கடன்கள் குறைந்து - மறைந்து (??!!) நிதி பற்றாகுறை நீங்கி புடவை, வேஷ்டியாகி, துண்டாகி கர்ச்சீப்பாகி, பின் சுத்தமாக கடனேயில்லாமல் மாறும்போது இந்தியா வளர்ந்த நாடுகளின் முண்ணனியில் நிற்கும் என்று நான் கனவு காண்கிறேன்.

7 comments:

Badri Seshadri said...
This comment has been removed by a blog administrator.
Aruna Srinivasan said...

பத்ரி,

கடனேயில்லாமல் இருப்பது என்பது ஒரு pipe dream மாதிரிதான். அதான் கனவு என்று சொல்லிவிட்டேனே :-) உள் நாட்டுக் கடன் இருப்பதில் தவறில்லை; ஏதோ நம்ம அஞ்சனப்பெட்டியுள்ளேதானே கையை விடுகிறோம் ? :-) சரி; ஆனால் வெளியேயிருந்து வாங்கும் கடன் குறையலாமே? குறைந்து 0 லெவலுக்கு வரலாமே? இதனால் நம் மீது கடன் கொடுத்தவ்ர்கள் ஆதிக்கம் குறைந்து, உலக அரங்கில் நமக்கு ஒரு மதிப்பு இருக்கும் இல்லையா?

தவிரவும், அந்த உள் நாட்டுக்கடனும் எப்படி உபயோகிக்கப்படுகிறது என்பது முக்கியம். அடிப்படை கட்டுமானத் துறையில் அது செலவழிக்கப்படுகிறதா அல்லது பலவித ஓட்டைகள் வழியேயும் சரியான நிர்வாகம் இல்லாமலும் விரயம் ஆகிறதா என்பதும் கவனமாக இருக்க வேண்டிய விஷ்யம். விட்டால் உள் நாட்டுக் கடனும் எந்தவித ஆக்கபூர்வமான வளர்ச்சியில்லாமல் சுமையாக பெருக ஆரம்பிக்கும். கடன் வாங்கி உற்பத்தி / வேலை வாய்ப்பு பெருகி மொத்த வருமானமும் பெருகும்போது உள் நாட்டுக் கடன் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

Fiscal Deficit இருப்பதால் ஒன்றும் பாதகமில்லை என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதையும் அமெரிக்க உதாரணத்தைக் காட்டுவதையும் சமீபத்தில் இந்தக் கட்டுரையில் படித்தேன். http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=57329
நான் பொருளாதார நிபுணி அல்ல. இருந்தாலும் உலக வங்கி போன்ற வெளி இடங்களிலிருந்து நாம் வாங்கும் கடன் சுமைக் குறைவதுதான் in the long run நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.

Nat said...

Badri, It is incorrect to think that higher fiscal deficits are not a cause for concern. In fact if a government continues to drive up fiscal deficit it will drive up long-term interest rates and hurt other borrowers.

Why and how does this happen? Government of India can simply go to the debt markets - primarily banks - and then ask for more money (basically depositor's money held at the banks). Banks oblige and/or ask for higher interest rates on a government note. Government easily says yes (it knows that it owns the currency press in Nasik). But private borrowers (companies, financial institutions, start-up firms, consumers in need of loan to buy a car or wanting to build a house etc.) are badly affected as banks would want higher interest from these people. Banks are also prudent, in a sense, because governments, technically, are their most safest borrowers than the likes of you and me.

But this also hurts the larger economy as private transactions become smaller and smaller compared to government transactions and operations. This is bad because it stifles private choice.

Bottom-line: Government borrowing is bad and hence should be limited. Fiscal deficits are a nightmare, as Aruna rightly points out, both at home and with governments.

Aruna Srinivasan said...

Thanks for dropping by Natarajan. Welcome to Alaigal.

Badri Seshadri said...

In response to Natarajan... spiralling fiscal deficit is bad. A crisis in handling balance of payment is bad. However, sensible borrowing from the future - which would inevitably mean deficit today - is not bad.

Heck, I myself have a housing loan, a vehicle loan, couple of personal loans, carefully structured (of course) and in reasonable proportion to my salary, my short term ability to handle the loans and certain long-term measures to manage the loans in case of debilitating injury or death (such as mortgage protector insurance etc.)

Without borrowing, I cannot build a house of my own. I would have to save for 10 years before thinking of buying a house (at zero loans), by which time the inflation and real estate growth would have taken my dreams of a house next to impossible. In fact that is how my parents and their parents lived.

At the same time, I have seen people going on a borrowing spree and destroy their lives. We have seen Latin American countries collapse like this.

So there has to be some balance. Deficit borrowing that goes into merely paying the salaries of the Govt. staff is bad. Borrowing that builds roads is good - if executed properly and results in increased trade and increased taxes (which is why GDP tax ratio should continue to increase, or at least remain where it is, rather than going down).

I don't buy this concept of private borrowing affected by increased government borrowing. That is applicable in a market where the liquidity is limited. It appears to me that within India - right now - there is enough floating cash. RBI keeps floating T-bills to mop them up, but more and more cash gets generated. Yes, sovereign instruments will always be rated higher. But then private enterprises normally turn the money around into better returns, and can therefore afford marginally higher interest rates than the sovereign instruments.

Your argument will be valid only if there is limited money.

Also, I see nothing wrong in banks giving depositor's monies to the Govt. Only those people who are looking for safe investment even go to bank (or should go to bank). Safest possible lending is to the Govt. (as you yourself stated).

I am all for reduction of fiscal deficit. But I will always support government borrowing for massively improving infrastructure at any time.

PKS said...

Hi Aruna, you are one of the people whose views I like to know on Union Budget. Where are you? :-) I posted a similar comment to Badri too. - Regards, PK Sivakumar

Aruna Srinivasan said...

For Badri's opening comment in the beginning - which was accidently deleted - please check out Haloscan's comment box in this post.