Tuesday, June 15, 2004

குரல் வலைப் பதிவு

குரல் வலைப் பதிவு செய்ய நான் உபயோகித்த முறை:

முதலில் Blogspot ன் தளத்தில் குரல் வலைப்பதிவுக்கு ரிஜிஸ்டர் செய்தேன்.

அங்கு என் குரல் பதிவிற்காக ஒரு கணக்கு திறந்தவுடன், அந்த தளம் என்னை ஒரு அமெரிக்க நம்பர் - அஹ்டாவது நான் எந்தத் தொலைபேசியிலிருந்து குரல் பதிவு செய்யப்ப்போகிறேனோ அந்த தொலைபேசி எண்ணைக் கேட்டது. இது Primary number. இது ஒரு அமெரிக்க நம்பராக இருக்க வேண்டும் - ஆனால் இதிலிருந்துதான் பேச வேண்டும் என்பதில்லை. இது ஒரு சும்மா referecne க்குதான் என்று அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் என் மகனின் வீட்டு நம்பர் ( அமெரிக்கா) Primary எண்ணாக கொடுத்தேன்.

அடுத்து அந்த தளத்தில் கொடுத்துள்ள எண்ணுக்கு போன் செய்துணூங்கள் குரலைப் பதிவு செய்யலாம். அதில் உள்ள செய்வழிபாடு கட்டளைகளை சரியாக அப்படியே பின்பற்றினால் - தயார்.. உங்கள் குரல் உங்கள் வலைப் பதிவில் பதிவாகிறது.

இதில் Dial Pad செயலியின் வேலை என்ன என்றால், அதில் கொடுத்துள்ள 1-661-716- BLOG - இந்த BLOG என்பதை 2564 என்று எண் பதிவு செய்யுங்கள் அதாவது - 1 என்பது அமெரிக்க country code - 661716 2564 என்பது நாம் கூப்பிட வேண்டிய நம்பர் - என்ற நம்பருக்கு போன் செய்ய இந்த டையல் பாட் உபயோகித்து செய்யலாம். சாதாரணமாகவே நேரடியாக செய்தால் ISD பில் எக்கச்சகமாக ஏறுமே ??! அதனால் இந்த வழி.

Dial Pad எப்படி இறக்கிக்கொள்வது என்று www.dialpad.com என்ற தளத்திற்கு சென்றால் அங்கே கொடுக்கப்பாடுள்ள Internet phone செயலியை உங்கள் கணினியில் இறக்கிக் கொள்ளலாம். இதற்கு கட்டணம் ஒரு மாத சேவைக்கு $ 15. 300 நிமிடங்கள் பேசலாம். இந்த தொகையை உங்கள் Visa/ Master International credit card மூலம் செலுத்தலாம். ஒரு கடவுச் சொல்லை உபயோகித்து நீங்கள் சாதாரன தொலைபேசி மாதிரி பயன்படுத்தலாம். இவர்கள் நம்பர் அமெரிக்க நம்பர் என்பதால், நாம் அமெரிக்காவுக்கு போன் செய்தாலும் அமெரிக்காவுக்குள்ளே ஒரு உள்ளூர் பேச்சுக்கடணம் செலவுதான் ஆகும். நான் பொதுவாக என் மகன்களுடன் பேசுவதற்காக இந்த dialpad செயலியை உபயோகிப்பதால் இது எளிதாக இருந்தது.

முயன்று பாருங்கள். ஏதேனும் சந்தேகம் இருந்தால் குறிப்பாக கேள்வி கேளுங்கள். விளக்கம் தருகிறேன்.

3 comments:

Anonymous said...

உங்களுக்கு எப்படி ஐக்கிய அமெரிக்கத் தொலைபேசி எண் கிடைச்சதுன்னு நானும் ஷங்கரும் தலைய பிச்சுன்டோம். ஒஹோ, அதானா விஷயம்.

"ஹலோ, யார் பேசறது, இவங்க பொண்ணா? பாருங்க, நீங்க இனிமேல் குரல்வலைப்பதிவு ஆரம்பிக்க முடியாதே! ஹையா, ஜாலி. உங்க எண்ணை உங்க அம்மா பதிவு பண்ணிண்ட்டாங்களே!"

ஐயயோ, நான் ஸ்வாதீனமா சொன்னேன். அச்சசோ, இதுக்கு போய் இப்படி சண்டை போடறீங்களே. அச்சச்சோ, போச் போச்! கொழப்பத்தை உண்டாக்கிட்டேன். ;-)

(கா, கா. சும்ம ஜோக். சீரியஸா எடுத்துக்காதீங்க)

டையல் பேட்-லயும் பாத்துட்டேன், எனக்கு சரியா வரலை. :-(( அதே பிழை தான். :-((

(நான் இணைய உலா மையம் ஒன்றிலிருந்துதான் முயற்சித்தேன். வீட்ல டையல் பேட் வாங்கிப் போட கடன் அட்டைதான் இல்லை. பள்ளியில் படிக்கையில் வாங்கிய நோட்டுக்குப் போடும் பழுப்பு அட்டை கொஞ்சம் மிச்சம் உள்ளது. அதை டயல்பேட் ஏற்றுக்கொண்டால்தான் உண்டு ). :-(

க்ருபா
http://www4.brinkster.com/shankarkrupa

Aruna Srinivasan said...

கிருபா,

இந்தியாவிலிருந்தும் இந்த ஒலிப் பதிவு வசதி செய்து தரும்படி Blogger supportக்கு எழுதினதில் அவர்கள் கொடுத்த பதில் இதோ:

Hi there,

AudioBlogger is a third-party product offered in partnership with Blogger.
Please contact the Listenlab folks for assistance:

http://audioblogger.com/contact.html

Thanks,
Blogger Support

ஹ்ம்ம்... அடுத்து இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். பேசாமல் ஒரு இந்திய Sify நம்பர் ஏதாவது கொடுக்க மாட்டாங்களோ??

Anonymous said...

ஓ. அடடா. நானும் அந்த மேட்டரை அப்படியே மறந்துட்டேன்.

இதோ audioblogerல இருந்து எனக்கு சில நாட்கள் முன் வந்த பதில்.


---------------------------
Thank you for writing to us. We are diligently trying to bring this
service to your part of the world. In the F.A.Q we say that we want to
bring the service to everywhere there is a blogger blogging…and that is
what we are striving for. Your voice needs to be heard, and it is our
goal to help you make that happen.

With that said, you can still use the service from anywhere in the
world. We have users all over Europe, the Middle East, Australia, and we
have even had a user who posting audio while he walked to the North
Pole….So it is possible.

But, It sounds like there is problem with dial tones from India. We
will look into the problem.

Thanks again for expressing your interest.

Noah Glass
Audioblogger.com

> shankarkrupa@yahoo.com wrote:
> Hi,
>
> I am S Krupa Shankar, from India.
>
> Just a few hours back did I sign up for the
> audioblogging service.
>
> I tried to dial the number directly (without using the
> toll-free number) to publish my first audio post. At
> the time of the logging itself, the bot asked for my
> primary phone number several times. I entered it as
> it asked, but again and again it confirmed the wrong
> number ("You entered xxx xxx xxxx"), each time a
> different wrong number.
>
> Still, after I entered my PIN and hit the pound key,
> it simply said "Your log-in is saved" and said
> "goodbye". Is that all really? I then started
> speaking and hit "1", but was of no use. My audio post
> has not been published.
>
> Please advise what is the correct procedure and what I
> am missing.
>
> Krupa
>
>
>
>
> __________________________________
> Do you Yahoo!?
> Friends. Fun. Try the all-new Yahoo! Messenger.
> http://messenger.yahoo.com/

------------------------

க்ருபா
http://www4.brinkster.com/shankarkrupa/blog